“ஆமாம், கணக்கில் புலியேதான்,
அமர்வாய் உனது இடத்தினிலே”
என்றே மட்டம் தட்டுகிறார்
என்னே செய்வேன், தோழர்களே!
* * *
காண்டா மிருகம், கரடி, புலி,
காட்டு மிருகம் எல்லாமே
நான்தான் என்றனர், பெரியோர்கள்
நானொரு வார்த்தை கூறிடுவேன்;
மிருகக் காட்சி கண்டிடவே
வீணாய்க் காசைக் கொடுக்காமல்,
என்னைப் பார்த்தே மகிழுங்கள்
எல்லா மிருகமும் நான்தானே!
அதுதான்...
மூக்கு வெளுத்திடுமாம்;
முட்டிக்கால் தட்டிடுமாம்;
காதுமே நீண்டிடுமாம்;
"காள்கா"ளென்று கத்திடுமாம்.
அதுதான்,
க...ழு...தை!
|