பக்கம் எண் :

மலரும் உள்ளம்221

அடிப்பார்; உதைப்பார்; அத்துடனே,
ஆத்திர முடனே எனைப்பார்த்து,

“எத்தனை அடிகள் கொடுத்தாலும்
ஏண்டா, உனக்கு வலிக்காதோ?

காண்டா மிருகம்! போடாபோ.
கருத்தாய்ப் படிப்பாய் இனியேனும்”

என்பார், ஐயோ! நானும்தான்
என்னே செய்வேன், தோழர்களே!

* * *

சீப்பைக் காணோம் என்றாலோ,
"சிடுசிடு" எனவே என்அக்காள்

“ ஏண்டா குரங்கே, என்சீப்பை
எங்கே ஒளித்தாய்? சொல்லிடுவாய்”

என்றே என்னைக் கேட்கின்றாள்.
என்னே செய்வேன். தோழர்களே!

* * *

கணக்கைக் கொடுத்ததும், விடைசொல்லக் 
கருத்துடன் எழுத்து, “ஸார், ஸார், ஸார்,

எனக்கு தெரியும் விடை” யென்றால்
ஏனோ ஆசான் சீறுகிறார்!