பக்கம் எண் :

220மலரும் உள்ளம்

எல்லாம் நானே!

“அப்பா, சினிமாப் பார்த்திடவே,
ஆறணா வேண்டும்” எனக்கேட்டால்,

“கரடி யாகக் கத்துவதேன்?
காலணாக் கூடத் தரமாட்டேன்”

என்பார் எங்கள் அப்பாவும்,
என்னே செய்வேன், தோழர்களே!

* * *

அடுப்பங் கரைக்கும், முன்புறத்து
அறைக்கும் இருமுறை போய்வந்தால்,

“புனுகு பூனை போலவேநீ
போவதும், வருவதும் ஏனோதான்!”

என்றே அம்மா திட்டுகிறாள்;.
என்னே செய்வேன், தோழர்களே!

* * *

கேள்விகள் ஏதும் தெரியாமல்
கேட்டால், உடனே என் அண்ணா,