பக்கம் எண் :

மலரும் உள்ளம்219

என்றா காரணம் கூறுகிறாய்?
இதற்கேன் வெட்கம்; வந்திடுவாய்,

ஆந்தை, ஆந்தை அன்றொருநாள்
அப்பா உனது கதைசொன்னார்.

கண்ணைச் சுழற்ற மாட்டாயாம்;
கழுத்தைத் திருப்பியே பார்ப்பாயாம்.

புத்தி உனக்கு அதிகமெனப் 
புகழ்ந்தார் தந்தை மேன்மேலும்.

புத்தி மிகுந்த அறிஞரேநீர் 
புத்தகம் எத்தனை எழுதிவிட்டீர்?

எந்தக் கடையில் விற்றிடுமோ?
என்ன விலைக்குக் கிடைத்திடுமோ?

சும்மா விழித்துப் பார்ப்பதுஏன்?
சொன்னால் வாய்தான் வலித்திடுமோ?