எனக்குச் சிறுநோய் வந்தாலும் ஏனோ மிகவும் வருந்துகிறாய் ? உணவு இன்றி உறங்காமல், உயிர்போல் என்னைக் காக்கின்றாய். உன்னைப் போலே வளர்த்திடுவோர், உலகில் உண்டோ வேறொருவர் ? என்னைக் காக்கும் அம்மாவே, எனக்குத் தெய்வம் நீதானே.