பக்கம் எண் :

36மலரும் உள்ளம்

ஆட்டுக்குட்டி

ஆட்டுக் குட்டி, என்னைநீ
       அழைப்ப தெங்கே, கூறுவாய்?
ஓட்டம் ஒட்ட மாகவே
       ஓடி வரவா சொல்கிறாய்?

புல்லி ருக்கும் பக்கமே
       போகத் தானே அழைக்கிறாய்?
புல்லால் எனது பசியினைப்
       போக்கிக் கொள்ள முடியுமோ?

அம்மா தோசை தின்னவே
       அழைக்கி றாள்;நான் போகிறேன்.
சும்மா இங்கு நிற்பதேன்?
       சொன்னேன்; ஓடிச் செல்லுவாய்.