பக்கம் எண் :

மலரும் உள்ளம்37

சின்னப் பொம்மை

சின்னச் சின்னப் பொம்மை.
       சிங்காரப் பொம்மை.
என்ன வேண்டும் சொல்லே?
       ஏனோ பேச வில்லை?

பாட ஆட மாட்டாய்.
       பரம சாதுப் பொம்மை.
தேட வைத்து விட்டே
       தெருவில் ஓட மாட்டாய் !

வளர வில்லை; உன்றன்
       வயதும் தெரிய வில்லை.
அழவே மாட்டாய். நல்ல
       அழகுப் பொம்மை நீதான்.

கொஞ்ச மேனும் உண்பாய்.
       கோபம் வேண்டாம், கண்ணே.
பஞ்சு மெத்தை தாரேன்.
       படுத்துக் கொள்வாய், கண்ணே.