குரங்குக்
கூட்டம்
குரங்குக் கூட்டம்
பார்த்திடுவாய்.
குதித்து ஆடல் பார்த்திடுவாய்.
சிரங்கு வந்த பையனைப்போல்
தேகம் சொறிதல்
பார்த்திடுவாய்.
குட்டி சுமக்குது, ஒருகுரங்கு.
"குர்குர்" என்குது, ஒருகுரங்கு.
தட்டிக் கொடுக்குது, ஒருகுரங்கு.
தாவிக் குதிக்குது ஒருகுரங்கு.
கட்டிப் பிடிக்குது, ஒருகுரங்கு.
கர்ணம் போடுது, ஒருகுரங்கு.
எட்டிக் கிளையைப் பிடித்திடவே,
எழும்பிக் குதிக்குது,
ஒருகுரங்கு.
கிளையில் வாலை மாட்டிவிட்டுக்
கீழே தொங்குது, ஒருகுரங்கு.
தழையும், பழமும் பறித்தெங்கள்
தலையில் போடுது, ஒருகுரங்கு.
|