சாய்ந்து மடியில் படுத்தால் - என்னைத் தட்டிக் கொடுக்கும் பாட்டி. நோய்கள் ஏதும் வந்தால் - அதை நொடியில் போக்கும் பாட்டி. யாருங் காட்டா அன்பை - என்றும் எனக்குக் காட்டும் பாட்டி. நூறு, நூறு ஆண்டு - இன்னும் நூறு ஆண்டு வாழ்க !