பக்கம் எண் :

மலரும் உள்ளம்61

தொழில்

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

மாட்டைக் கொண்டு கலப்பைப் பூட்டி,
       மண்ணை நன்கு உழுவேனே.
நாட்டில் உள்ள பஞ்சம் போக
       நானும் உதவி செய்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

நூற்று நெய்து வேட்டி, சேலை 
       நேர்த்தி யாகத் தருவேனே.
வேற்று நாட்டவர் தயவு ஏனோ ?
       வேண்டாம் என்று சொல்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

கொத்த னாகச் செங்கல் கொண்டு
       கோயில், வீடு கட்டுவேன்.
மெத்தப் புகழும் தாஜ்ம ஹாலை
       ஒத்தி ருக்கச் செய்குவேன்.