பக்கம் எண் :

70மலரும் உள்ளம்

மழை

கொட்டி டுவாய் மழையே - நாங்கள்
       குதூகல மெய்திடவே.
சொட்டுச் சொட்டாய்த் தொடங்கி - மழையே
       "சோ"வெனப் பெய்திடுவாய்.

வளைவு கட்டி வைத்தே - பெரியார்
       வருகை நோக்குதல்போல்
வளைந்த வான வில்லும் - உனது
       வருகை காட்டிடுமே.

காரிருள் மேக மதாய் - அலைபோல்
       காற்றினில் சென்றிடுவாய்.
மீறியே சென்றி டாது - மலைகள்
       மோதிடப் பெய்திடுவாய்.

நெற்றியில் நீர் சொரிய - உழவர்
       நிலம் உழுதபின்பும்
வற்றிய குட்டை கண்டால் - உடனே
       மாமழை பெய்திடுவாய்.