பக்கம் எண் :

மலரும் உள்ளம்71

சூரிய வெப்ப மதால் - வாடிச்
       சுருண்ட உயிர்களெல்லாம்
நேரிய உன்செயலால் - நன்கு
       நின்று தலைதூக்கும்.

வாரிப் பொருளை யெலாம் - நன்கு
       வழங்கி நிற்போரை,
மாரி போலப் பொழிவார் - என்றே
       வாழ்த்தும் மனிதகுலம்.

கப்பல்கள் விட்டி டவே - நாங்கள்
       காகிதம் சேர்த்து வைத்தோம்.
தப்பியே ஓடி டாதே - கொஞ்சம்
       தயவுடன் பெய்திடுவாய்.