பக்கம் எண் :

88மலரும் உள்ளம்

நமது கொடி

வண்ணங்கள் காட்டுது நமது கொடி.
       வானத்தை முட்டுது, நமது கொடி.
எண்ணங்கள் ஊட்டுது நமது கொடி.
       என்னென்ன காட்டுது நமது கொடி?

தீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
       தியாகத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
வீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
       வெற்றியைக் காட்டுது, சிகப்பு நிறம்.

ஒளியினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
       உண்மையைக் காட்டுது, வெள்ளை நிறம்.
தெளிவினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
       சிறப்பையும் காட்டுது, வெள்ளை நிறம்.

வளமையைக் காட்டுது, பச்சை நிறம்.
       வறுமையைக் ஓட்டுது, பச்சை நிறம்.
குளுமையைக் காட்டுது, பச்சை நிறம்.
       குறைவெலாம் ஓட்டுது, பச்சை நிறம்.