ஏட்டி லுள்ள உண்மை யெல்லாம்
எடுத்துச் செய்வோமே - நன்கு
எடுத்துச் செய்வோமே.
நாட்டு மக்கள் உயர்வு கொள்ள
நாமு ழைப்போமே - என்றும்
நாமு ழைப்போமே.
பலத்தைக் கொண்டு உலக வாழ்வைப்
பாழ்ப டுத்தோமே - வாழ்வைப்
பாழ்ப டுத்தோமே.
நலத்தைக் கொண்டு உலக வாழ்வில்
நன்மை செய்வோமே - மிக்க
நன்மை செய்வோமே.
பார தம்போல் உலகி லேயே
பண்புள் ளபூமி - மிக்க
பண்புள் ளபூமி
வேறு ஏதும் இல்லை யென்றே
விளங்க வைப்போமே - என்றும்
விளங்க வைப்போமே.
|