பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.
பட்டுப் போல இருக்குது.
பவுனைப் போல மின்னுது.
விட்டுச் சென்ற பறவையே
விரும்பிக் கேட்டால் தருகிறேன்.
பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.
அரசர் போலத் தலையிலே
அணிந்து கொள்ள ஆசைதான்.
உரிமைக் காரர் கேட்டிடின்,
உடனே தந்து விடுகிறேன்.
பார்க்கப் பார்க்க அழகுதான்
பளப ளக்கும் இறகுதான்.
|