பக்கம் எண் :

மலரும் உள்ளம்79

அதிசய வீடு

வீட்டை முதுகில் தூக்கிடுவார்.
   மெல்ல மெல்லச் சென்றிடுவார்.
ஆற்றில் நீந்தி வீட்டுடனே
   அக்கரை கூடச் சேர்ந்திடுவார்.

இரும்பைப் போன்றது அவர்வீடு.
   எவரும் அசைக்க முடியாது.
குறும்புச் சிறுவர் கல்எறிந்தால் 
   கொஞ்சமும் உடைய மாட்டாது.

காற்றில் கூரை பறக்காது.
   கனத்த மழையில் ஒழுகாது,
ஓட்டு வீடே ஆனாலும்,
   ஒருவர் தானே வசித்திடலாம்.

யார் வீடு?

ஆமாம், அந்த வீடு
   யார் வசிக்கும் வீடு?
ஆமை முதுகு ஓடு.
   அதுவே அதற்கு வீடு!