தேசிய
இயக்கப் பாடல்கள்
தொண்டு செய்யும் அடிமை
|
ச்வராஜ்யம் வேண்டுமென்ற
பாரதவாசிக்கு
ஆங்கிலேய உத்தியோகச்தன் கூறுவது
[நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா -- உனக்கு மார்கழித் திருநாளா”
என்ற பாட்டின் வர்ணமெட்டு]
|
தொண்டு செய்யும் அடிமை -- உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ -- அதற்குப்
பாத்திர மாவாயோ? |
(தொண்டு) |
1 |
ஜாதிச் சண்டை போச்சோ? -- உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் -- கண்முன்
நிற்கொ ணாது போடா.
|
(தொண்டு) |
2 |
அச்சம் நீங்கி னாயோ? -- அடிமை!
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சைவாங்கிப் பிழைக்கும் -- ஆசை
பேணுத லொழித்தாயோ? |
(தொண்டு) |
3 |
கப்ப லேறுவாயோ? -- அடிமை!
கடலைத்தாண்டு வாயோ?
குப்பை விரும்பும்நாய்க்கே -- அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
|
(தொண்டு) |
4 |
ஒற்றுமை பயின்றாயோ? -- அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே -- அடிமை
வீரியம் அறிவாயோ? |
(தொண்டு) |
5 |
சேர்ந்து வாழுவீரோ? உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ -- உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ? |
(தொண்டு) |
6 |
வெள்ளைநிறத்தைக் கண்டால் -- பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன்கேள் -- சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா. |
(தொண்டு) |
7 |
நாடு காப்பதற்கே -- உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா -- அடிமை
வேலைசெய்யப் போடா. |
(தொண்டு) |
8 |
சேனை நடத்துவாயோ? -- தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈனமான தொழிலே -- உங்களுக்கு
இசைவதாகும் போடா.
|
(தொண்டு) |
9 |