கனவென்ன
கனவே -- என்றன்
கண்துயி லாது நனவினிலே யுற்ற (கன) |
(கன)
|
|
கானகங் கண்டேன் -- அடா
கானகங் கண்டேன் -- உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். |
(கன)
|
1 |
[பாட
பேதம்]: 'சிரித்திடுங் கோழியாய்'
'அடா' என்பதற்குப் பதிலாக 'அடர்' என்றும்
பாடபேதமுண்டு. |
|
பொற்றிருக் குன்றம் -- அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். |
(கன) |
2 |
புத்த தரிசனம்
|
குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதொர் ஆலநெடுமரங் கண்டேன். |
(கன)
|
3 |
பொன்மரத் தின்கீழ் -- அந்தப்
பொன்மரத் தின்கீழ் -- வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன்.
|
(கன)
|
4 |
புத்த பகவன் -- எங்கள்
புத்த பகவன் -- அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். |
(கன) |
5. |
காந்தியைப் பார்த்தேன் -- அவன்
காந்தியைப் பார்த்தேன் -- உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன்
|
.(கன) |
6. |
ஈதுநல் விந்தை! -- என்னை!
ஈதுநல் விந்தை! -- புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன்.
|
(கன) |
7 |
பாய்ந்ததங் கொளியே; -- பின்னும்
பாய்ந்ததங் கொளியே! -- அருள்
தோய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். |
(கன) |
8 |
கிருஷ்ணார்ஜீன தரிசனம்
|
குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே -- தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். |
(கன) |
9 |
தேரின்முன் பாகன் -- மணித்
தேரின்முன் பாகன் -- அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் |
(கன) |
10 |
ஓமென்ற மொழியும் -- அவன்
ஓமென்ற மொழியும் -- நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் |
(கன) |
11 |
அருள் பொங்கும் விழியும் -- தெய்வ
அருள் பொங்கும் விழியும் -- காணில்
இருள் பொங்கும் நெஞ்சினர் வெருள் பொங்குந் திகிரியும், |
(கன)
|
12 |
கண்ணனைக் கண்டேன் -- எங்கள்
கண்ணனைக் கண்டேன் -- மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். |
(கன)
|
13 |
சேனைகள் தோன்றும் -- வெள்ளச்
சேனைகள் தோன்றும் -- பரி
யானையுந் தேரும் அளவில தோன்றும். |
(கன) |
14 |
கண்ணன்
நற் றேரில் -- நீலக்
கண்ணன் நற் றேரில் -- மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். |
(கன)
|
15 |
விசையன்கொ லிவனே! -- விறல்
விசையன்கொ லிவனே! -- நனி
இசையுநன் கிசையுமிங் கிவனுக்கின் நாமம். |
(விசை) |
16 |
வீரிய வடிவம்! -- என்ன
வீரிய வடிவம்! -- இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! |
(விசை) |
17 |
பெற்றதென்
பேறே -- செவி
பெற்றதென் பேறே -- அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். |
(கன) |
18 |
?வெற்றியை வேண்டேன்; --
ஐய,
வெற்றியை வேண்டேன்; -- உயிரை
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். |
(பெற்ற) |
19 |
சுற்றங் கொல்வேனோ? -- என்றன்
சுற்றங் கொல்வேனோ? -- கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?? |
(பெற்ற) |
20 |
மிஞ்சிய அருளால் -- மித
மிஞ்சிய அருளால் -- அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். |
(கன) |
21
|
இம்மொழி கேட்டான் -- கண்ணன்
இம்மொழி கேட்டான் -- ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். |
(கன) |
22 |
வில்லினை யெடடா -- கையில்
வில்லினை யெடடா -- அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா. |
(வில்லினை) |
23 |
வாடி நில்லாதே; -- மனம்
வாடி நில்லாதே; -- வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. |
(வில்லினை) |
24 |
ஒன்றுள துண்மை -- என்றும்
ஒன்றுள துண்மை -- அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. |
(வில்லினை) |
25 |
துன்பமு மில்லை -- கொடுந்
துன்பமு மில்லை -- அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. |
(வில்லினை)
|
26 |
படைகளுந் தீண்டா -- அதைப்
படைகளுந் தீண்டா -- அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது.
|
(வில்லினை)
|
27 |
செய்தலுன் கடனே -- அறஞ்
செய்தலுன் கடனே -- அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே.
|
(வில்லினை)
|
28 |