பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்


பல்வகைப் பாடல்கள்

அம்மாக்கண்ணு பாட்டு

“பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல
மனந் திறப்பது மதியாலே”

பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
1

ஏட்டைத் துடைப்பது கையாலே
மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,

வேட்டை யடிப்பது வில்லாலே
அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
2

காற்றை யடைப்பது மனதாலே
இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,

சோற்றைப் புசிப்பது வாயாலே
உயிர்
துணி வுறுவது தாயாலே.
3