முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்
பல்வகைப் பாடல்கள்
வண்டிக்காரன் பாட்டு
அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
“காட்டு வழிதனிலே
அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?”
“எங்கள்
வீட்டுக் குலதெய்வம்
தம்பி வீரம்மை காக்குமடா!”
“நிறுத்து வண்டி யென்றே
கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே
எங்கள்
கறுத்த மாரியின் பேர்
சொன்னால் காலனும் அஞ்சுமடா!”
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்