பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்என்னே கொடுமை!


[பூர்வ காலத்தில் அர்ஜூனாதிகள் செய்ததாகப் புராணங்களிலே
கூறப்படும் அம்புத் தொழில் முறைகளைப் பின்பற்றி இரண்டு
ரஜபுத்திரர்கள் செய்த அற்புதமான துப்பாக்கி வித்தைகளை
நோக்கும்போது உள்ளத்திலெழுந்த சில எண்ணங்கள்.]


மல்லார் திண்டோட் பாஞ்சாலன்
   மகள் பொற்கரத்தின் மாலுற்ற
வில்லால் விஜயன் அன்றிழைத்த
   விந்தைத் தொழிலை மறந்திலிரால்
பொல்லா விதியால் நீவிரவன்
   போர்முன்னிழைத்த பெருந்தொழில்கள்
எல்லா மறந்தீ ரெம்மவர்காள்
   என்னே கொடுமை யீங்கிதுவே!
1

வீமன் திறலு மவற்கிளைய
   விஜயன் திறலும் விளங்கிநின்ற
சேமமணிப்பூந் தடநாட்டில்
   சிறிய புழுக்கள் தோன்றி வெறுங்
காம நுகர்தல் இரந்துண்டல்
   கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர்
ஈமம் புகுத லிவைபுரிவார்
   என்னே கொடுமை யீங்கிதுவே.
2

  4.      ஆதாரம்: பாரதி தமிழ் -- பக்கம் 16
          சுதேசமித்திரன்: 4-4-1906