புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப்
போயினவோ
இன்னலொடு
கண்ணீரிருப்பாகி விட்டனவே! |
1 |
ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெலாம்
விலங்காய்
மாணெலாம்
பாழாகி மங்கிவிட்டதிந் நாடே! |
2 |
ஆரியர்கள் வாழ்ந்துவரும்
அற்புதநா டென்பதுபோய்ப்
பூரியர்கள்
வாழும் புலைத்தேச மாயினதே! |
3 |
வீமாதி வீரர் விளித்தெங்கு
போயினரோ!
ஏமாறி
நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! |
4 |
வேதவுப நிடத மெய்ந்நூல்க
ளெல்லாம்போய்
பேதைக்
கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! |
5 |
ஆதி மறைக்கீதம் அரிவையர்கள்
சொன்னதுபோய்
வீதி
பெருக்கும் விலையடிமை யாயினரே! |
6 |
செந்தேனும் பாலும் தெவிட்டி
நின்ற நாட்டினிலே
வந்தே
தீப்பஞ்ச மரமாகி விட்டதுவே! |
7 |
மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த
நாட்டினிலே
காமுகரும்
பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! |
8 |
பொன்னு மணியுமிகப்
பொங்கிநின்ற விந்நாட்டில்
அன்னமின்றி
நாளு மழிவார்க ளெத்தனைபேர்? |
9 |