[இந் நூலில் காணப்பெறும்
இத் தலைப்பிட்ட பாடல் முழுமை பெறவில்லை. பாடல் வரிகளும், கண்ணிகளும்
மாறியுள்ளன; சில பாடல் வரிகளும் பூர்த்தியாகவில்லை. எனவே, தற்போது பாடல்
முழுதையும் முழுமை பெற்ற வடிவில் திரும்பவும் தருகிறோம்.]
16. ஆதாரம்:
பாரதி புதையல் 3 -- பக்கம் 8-9
|
மண்வெட்டிக்
கூலிதின லாச்சே! -- |
எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே! |
1 |
விண்முட்டிச்
சென்றபுகழ் போச்சே! -- |
இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே. |
|
நாணிலகு
வில்லினொடு தூணி -- |
நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி, |
2 |
பூணுலகு
திண்கதையும் கொண்டு -- |
நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு |
தற்கால ஜீவனம்
|
கன்னங்
கரியவிருள் நேரம் -- |
அதில்
காற்றும் பெருமழையும் சேரும்; |
3 |
சின்னக்
கரிய துணியாலே -- |
இந்தத்
தீயவுடல் மூடி நரிபோலே, |
|
மெல்லப்
பயந்து மிகப் பதுங்கி -- |
ஒரு
வேற்றுவரும் கண்டபொழு தொதுங்கி, |
4 |
சொல்லக்
கொதிக்குதடா நெஞ்சம் -- |
வெறும்
சோற்றுக்கோ வந்த திந்தப் பஞ்சம். |
|
ஏழை
எளியவர்கள் வீட்டில் -- |
இந்த
ஈன வயிறுபடும் பாட்டில் |
5 |
கோழை
யெலிகளென்னச் சென்றே-- |
பொருள்
கொண் டிழிவின் வருகிறோம் இன்றே. |
அதில் கஷ்டங்கள்
|
நாயும்
பிழைக்கு இந்தப் பிழைப்பு -- |
ஐயோ
நாளெல்லாம் சுற்றுதிலே உழைப்பு; |
6 |
பாயும்
கடிநாய்ப் போலீசுக் -- |
காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பிழைப்பு. |
|
பேராசைக்
காரனடா பார்ப்பான் -- |
ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான் |
7 |
யாரானாலும்
கொடுமை இழைப்பான் -- |
துரை
இம்மென்றால் நாய்போலே உழைப்பான். |
|
முன்னாளில்
ஐயரெல்லாம் வேதம் -- |
சொல்வார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்; |
8 |
இந்நாளில்
பொய்மைப் பார்ப்பார் -- |
இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார். |
|
பிள்ளைக்குப்
பூணூலாம் என்பான் -- |
நம்மைப்
பிய்த்துப் பணம் கொடெனத் தின்பான்; |
9 |
கொள்ளைக்
கேசென்றொரு பொய் மூட்டி -- |
நம்மைக்
கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி. |
|
சோரந்
தொழிலாக் கொள்வோமோ? -- |
முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ? |
10 |
வீர
மறவர்நாம் அன்றோ? -- |
இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? |