செல்வத்துட்
பிறந்தனமா?
|
செல்வத்துட்
பிறந்தனமா? அதுபெறுவான்
சிறு தொழில்கள் பயிலவல்லோமா?
வில்வைத்த நுதல்விழியார் கண்டுமையல்
உறவடிவம் மேவினேமா?
பல்வித்தை யினுமினிய தீங்கானப்
பெருவித்தை பயின்றிட்டேமா?
கொல்வித்தை இருள்வித்தை மருள்வித்தை
பயின்றுமனம் குறைகின் றோமே! |
1 |
{2. ஊணப் புலவன் -- ஆங்கிலப் புலவன்.}
20. ஆதாரம்: ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் -- பக்கம் 6
21. ஆதாரம்: ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் -- பக்கம் 6
|
காவித் திருவிழி மானார்
தம்மையல் கடு விஷமாம்
கூவிச் சமயர்க் குரைப்பன
பொய் இக் குவலயத்தில்
ஆவிச் சுக மென்றறிந்த
தெல்லாம் துன்பம் அன்றியிலை
பாவிச் சிறு உலகே! உன்னை
யாவன் கொல்பண்ணியதே! |
2 |