பண்டாரப் பாட்டு
வையகத்தே
சடவஸ்து வில்லை மண்ணும் கல்லும் சடமில்லை.
மெய்யுரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயமில்லை! |
1 |
பையப் பையத் தேரடா படையும் விஷமுங் கடவுளடா
பொய்யு மெய்யுஞ் சிவனடா பூமண்டலத்தே பயமில்லை |
2 |
சாவும் நோவுஞ் சிவனடா! சண்டையும் வாளுஞ் சிவனடா!
பாவியு மேழையும் பாம்பும் பசுவும் பண்ணுந் தானமுந் தெய்வமடா.
|
3 |
{1. எற்று
-- எறிதல். 2. மைதிலி -- சீதை.}
23. ஆதாரம்: பாரதி நூல்கள் -- வசனம்
கதைக் கொத்து: பக்கம் 171
எங்குஞ்
சிவனைக் காணடா! ஈனப் பயத்தைத் துரத்தடா!
கங்கைச் சடையா, காலன் கூற்றே காமன் பகையே வாழ்கநீ! |
4 |
பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம் பாலை வனமுங் கடலுந் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்குந் தெய்வம் எதுவுந் தெய்வம் |
5 |
வையத்தே சடமில்லை, மண்ணுங் கல்லும் தெய்வம்
மெய்யுரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயமில்லை.
|
6 |