பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


வேலெனவென் விழி்

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன்
   ஒன்றுரையா திருப்ப ஆவி
முடியேறி மோதியதென் றருள் முகிலைக்
   கடுஞ்சொற்கள் மொழிவான் போலக்
கடியேறு மலர்ப்பந்து மோதியதென்
   றினியாளைக் காய்கின் றானால்
வடியேறு வேலெனவெவ் விழியேறி
   யென்னாவி வருந்தல் காணான்.