தோத்திரப் பாடல்கள்
காளிப் பாட்டு
இன்ப மாகி விட்டாய் -- காளி என்னுளே புகுந்தாய் பின்பு நின்னை யல்லால் -- காளி பிறிது நானும் உண்டோ? அன்ப ளித்து விட்டாய் -- காளி ஆண்மை தந்து விட்டாய் துன்பம் நீக்கி விட்டாய் -- காளி தொல்லை போக்கி விட்டாய்.