தோத்திரப்
பாடல்கள்
சக்திக் கூத்து
[ராகம் -- பியாக்]
|
பல்லவி |
தகத் தகத் தகத் தகதகவென் றாடோமோ? -- சிவ
சக்தி சக்தி சக்தி யென்று பாடோமோ?
|
(தக) |
|
சரணங்கள் |
அகத்தகத் தகத்தினிலே உள் நின்றாள் -- அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரணமென்று வாழ்ந்திடுவோம் நாமென்றே
|
(தக) |
1 |
புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே -- அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே.
|
(தக) |
2 |
இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனையிங்கே கொண்டெய்தி
மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம் -- நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
|
(தக)
|
3 |
[பாட பேதம்]:
‘வயிறப்படை காணுங்கால்.’
-- கவிமணி
|
|
[முதற்
பதிப்பு]: ‘தாயடிக்கீழ் செய்போலே.’ |
|