தோத்திரப்
பாடல்கள்
சக்தி திருப்புகழ்
|
சக்திசக்தி சக்தீசக்தீ
சக்தீ என்றோது
சக்திசக்தி சக்தீஎன்பார் -- சாகார்
என்றே நின்றோது.
|
1 |
சக்திசக்தி என்றேவாழ்தல் சால்பாம்
நம்மைச் சார்ந்தீரே
சக்திசக்தி என்றீராகில் -சாகா
உண்மை சேர்ந்தீரே. |
2
|
சக்திசக்தி என்றால் சக்தி -- தானே
சேரும் கண்டீரே
சக்திசக்தி என்றால் வெற்றி -- தானே
நேரும் கண்டீரே.
|
3 |
[பாட பேதம்]: ‘சக்தி யென்றீராயின்’ என்றேனும், ‘சக்தி யென்றீராகில்’
என்றேனு மிருக்கலாம்.
|
|
சக்திசக்தி என்றே செய்தால் -- தானே
செய்கை நேராகும்
சக்திசக்தி என்றால் அஃது -- தானே
முக்தி வேராகும்.
|
4 |
சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ
என்றே ஆடோமோ?
சக்திசக்தி சக்தீஎன்றே -- தாளங்
கொட்டிப் பாடோமோ. |
5 |
சக்திசக்தி என்றால்துன்பம் -- தானே
தீரும் கண்டீரே.
சக்திசக்தி என்றால் இன்பம் -- தானே
சேரும் கண்டீரே. |
6 |
சக்திசக்தி என்றால்செல்வம் -- தானே
ஊறும் கண்டீரோ?
சக்திசக்தி என்றால் கல்வி-தானே
தேறும் கண்டீரோ? |
7 |
சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ
சக்தீ வாழீ நீ.
சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ
சக்தீ வாழீ நீ.
|
8
|
சக்திசக்தி வாழீஎன்றால்
-- சம்பத்
தெல்லாம் நேராகும்
சக்திசக்தி என்றால்சக்தி-தாசன்
என்றே பேராகும்.
|
10 |