வேதாந்தப்
பாடல்கள்
ஜீவன்முக்தி
[ ராகம் -- கமாஸ்] [தாளம்-ஆதி]
|
பல்லவி
ஜயமுண்டு
பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு.
|
(ஜய) |
|
அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே -- நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை.
|
(ஜய) |
|
சரணங்கள் |
|
|
புயமுண்டு குன்றத்தைப் போலே -- சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. |
(ஜய) |
1 |
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் -- தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்:
விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. |
(ஜய) |
2 |
அலைபட்ட கடலுக்கு மேலே -- சக்தி
அருளென்னுந் தோணியினாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு
|
(ஜய) |
3 |