தேசிய
கீதங்கள் : தேசபக்திப் பாடல்கள்
1. பாரத நாடு
2. தமிழ் நாடு
3. சுதந்திரப் பள்ளு
4. தேசிய இயக்கப் பாடல்கள்
5. தேசியத் தலைவர்கள்
6. பிற நாடுகள்
தேசிய கீதங்கள் என்னும் இப் பகுதியில் உள்ள பாடல்கள் “ஸ்வதேச கீதங்கள்”,
“ஜன்ம பூமி”, “நாட்டுப் பாட்டு”, “மாதா மணிவாசகம்” முதலிய நூல்களினின்றும் தொகுக்கப்பட்டு,
பாரதிநூல்களின் முதலிரண்டு
பாகங்களிலே சேர்க்கப்பட்டிருந்தன. அவ்விரு பாகங்களுள் வேறு பாடல்களும் சேர்க்கப்பெற்றிருந்தன.
“தேசிய கீதங்கள்” மட்டும் பிரித்து 1929 ஆம் வருஷத்தில் தனிப்பதிப்பாக முதலில்
பிரசுரிக்கப்பட்டது.
“ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூல் 1908 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியாயிற்று.
‘ஜன்ம பூமி’ (ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) 1909 இல் வெளியாயிற்று.
“மாதா மணிவாசகம்” என்னும் நூல் 1914 ஆம் ஆண்டில்
தென்னாப்பிரிக்காவில் வெளியாயிற்று.
“நாட்டுப் பாட்டு” என்னும் பாடல் தொகுதியை திரு. பரலி. சு.
நெல்லையப்பர் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1919ஆம் ஆண்டில் வெளியாயிற்று.
“ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூலிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:
சமர்ப்பணம்
ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை
விளக்கியதொப்ப, எனக்குப் பாரத தேவியின் ஸ்மர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி
யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில்
இச்சிறு நூலை சமர்ப்பிக்கின்றேன்.
-- ஆசிரியன்
முகவுரை
ஒருமையும் யௌவனத்தன்மையும் பெற்று விளங்கும் பாரத தேவியின் சரணங்களிலே யான்
பின்வரும் மலர்கள்கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்றும் தோன்றவில்லை.
யான் சூட்டியிருக்கும்
மலர்கள் மணமற்றன வென்பதை நன்கறிவேன். தேவலோகத்துக்குப் பாரிஜாத மலர்கள்
சூடத் தகுதிகொண்ட திருவடிகளுக்கு எனது மணமற்ற முருக்கம்பூக்கள் அணிக்குறைவை விளைவிக்கு
மென்பதையும் நான் தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே
துணிவுகொண்டுவிட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக்
கருதி அங்கீகரிக்கவில்லையா? அதனையொப்ப, எனது குணமற்ற பூக்களையும் பாரதமாதா
கருணையுடன் ஏற்றருளுக!
-- சி. சுப்பிரமணிய பாரதி
குறிப்பு: இந்தப் பாடல்களைப் பிரசுரிக்குமாறு என்னைத்
தூண்டி, இவை வெளிப்படுவதில் மிகுந்த ஆவல் காட்டி உதவிகளியற்றிய மித்திரர்களிடம்
மிக்க நன்றிபாராட்டுகின்றேன்.
1908 வருடம் ஜனவரி மாதம் 10-ம் தேதி மைலாப்பூர்.
‘ஜன்ம பூமி’(“ஸ்வதேச கீதங்கள்” -- இரண்டாம் பாகம்) என்னும் நூலிலுள்ள சமர்ப்பணமும்
முகவுரையும் வருமாறு:
சமர்ப்பணம்
எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும்,
சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய
ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு
இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.
-- சி. சுப்பிரமணிய பாரதி்
முகவுரை
இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மனகோசரமாகிய சௌந்தர்யத்தைப்பெற்றிருக்கும்
சமயத்தில், ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குஹலமடைகின்றது. சூரியன்
உதித்தவுடனே சேதனப்பிரதிகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய
ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினையொப்பவே, நாட்டில்
ஓர் புதிய ஆதர்சம் -- ஓர் கிளர்ச்சி -- ஓர் தர்மம் -- ஓர் மார்க்கம் --
தோன்றுமேயானால், மேன் மக்களின் நெஞ்சமனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும்
சூரியகாந்தமலர்போல, அவ் வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது
வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற
நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின.
நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய
சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்ன காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதைமலர்
புனைந்து, மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்.
நான் எதிர்பார்த்திராதவண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் “இம்மலர்கள் மிக
நல்லன” என்று பாராட்டி மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம்
செய்து கொண்டாள். இதனால் துணிவுமிகுதியுறப் பெற்றோனாகி, மறுபடியும் தாயின்
பதமலர்க்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கின்றேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்கு மென்றே நினைக்கின்றேன்; “குழலினிது யாழினிதென்ப தம் மக்கள்
மழலைச்சொற் கேளாதவர்” என்பது வேதமாதலின்.
இங்ஙனம்,
சி. சுப்பிரமணிய பாரதி்
பாரத
நாடு
வந்தே மாதரம்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
ராகம் -- நாதநாமக்கிரியை] [தாளம் -- ஆதி
பல்லவி
வந்தே மாதரம்
என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குது என்போம். (வந்தே)
சரணங்கள்
1 |
ஜாதி
மதங்களைப் பாரோம் |
--
உயர் ஜன்மம்இத் தேசத்தில்
எய்தின ராயின் |
|
வேதிய
ராயினும் ஓன்றே |
--
அன்றி வேறு குலத்தின ராயினும்
ஒன்றே (வந்தே) |
|
|
|
2 |
ஈனப்
பறையர்க ளேனும |
--
அவர் எம்முடன் வாழ்ந்திங்
கிருப்பவர் அன்றோ? |
|
சீனத்த
ராய்விடு வாரோ? |
--
பிற தேசத்தர் போற்பல
தீங்கிழைப் பாரோ? (வந்தே) |
|
|
|
3 |
ஆயிரம்
உண்டிங்கு ஜாதி |
-- னில் அன்னியர்
வந்து
புகல் என்ன நீதி? -- ஓர்
|
|
தாயின்
வயிற்றில்
பிறந்தோர் |
--
தம்முள் சண்டை செய்தாலும்
சகோதரர் அன்றோ? (வந்தே) |
|
|
|
4 |
ஒன்றுபட்
டாலுண்டு
வாழ்வு |
--
நம்மில் ஒற்றுமை நீங்கி
லனைவர்க்கும் தாழ்வே |
|
நன்றிது
தேர்ந்திடல் வேண்டும் |
--
இந்த ஞானம்வந் தாற்பின்
நமக்கெது வேண்டும்? (வந்தே) |
|
|
|
5 |
எப்பதம்
வாய்த்திடு மேனும் |
--
நம்மில் யாவர்க்கும்
அந்த நிலைபொது வாகும் |
|
முப்பது
கோடியும் வாழ்வோம |
--
வீழில் முப்பது கோடி
முழுமையும் வீழ்வோம். (வந்தே) |
|
|
|
6 |
புல்லடி
மைத்தொழில் பேணிப் |
--
பண்டு போயின நாட்களுக்
கினிமனம் நாணித் |
|
தொல்லை
இகழ்ச்சிகள் தீர |
--
இந்தத் தொண்டு நிலைமையைத்
தூவென்று தள்ளி (வந்தே) |