பக்கம் எண் :

நாள் மலர்கள்

இராஜாஜி கவர்னர் ஜெனரல்

இராஜாஜி யவர்கள் இப்பெரு நாவலந்
தீவுக்குக் கவர்னர் ஜெனரலானார்.

முன்னாள் சென்னை முதலமைச்சாகி
இன்னல் சூழ்ந்தார் இந்தியைக் கிளப்பியே!
தம் எதிர்க் கட்சித் தலைவரைச் சிறையில்
தள்ளினார். அறத்தைத் தள்ளினார். அதனால்
அவரின் அமைச்சுப் பட்டமும் அகன்றது.

கவர்னர் ஜெனரல் கருத வேண்டும்
எவர்க்கும் கவர்னராய் இருக்க வேண்டும்
ஓர நடத்தை தீர வேண்டும்.

கவர்னர் ஜெனரலால் கல்கி கூட்டம்
எவற்றையும் அடைந்திட எண்ணமிட்டுக்
குதிப்பதை என்னென்று கூறுவ திங்கே?
வரப் போகின்றார் இராஜாஜி கவர்னராய்
என்ற சொல் கேட்ட இங்குள்ள பார்ப்பனர்
"தர்பைக் கைகளால் கத்தி தூக்குவோம்,
அரபியில் யூதர்போல் ஆவோம் நாங்கள
என்று குதிப்பதை யாரும் அறிவர்
தர்ப்பைக் கையால் கத்தி தூக்கட்டும் கத்தியால் என்செயக் கருதுகின்றார்
என்பதை இங்குப் பண்ண வேண்டாம்.
பார்ப்பனர் குதிப்புக்குக் காரணம் கவர்னர்
பார்ப்பனர் என்றுதான் பகர வேண்டும்
இராஜாஜி அவர்கள் இவற்றுக் கெல்லாம்
இடந்தரா திருப்பார் என்றெண்ணு கின்றேன்

சாதி மதத்தை தவிர்ப்பதே அறம்!
அவற்றைப் பெருக்குதல் அறமே அல்ல.

இத்தமிழ் நாட்டின் இராஜா ஜிக்கு
நன்னிலை வாய்த்தது நமக்கெல்லாம் பெருமை
என்று சில்லோர் இயம்பினார் இங்கே,
தமிழ்நாட்டுப் பற்றுத் தமிழர்க் குண்டு
பார்ப்பனர்க் கந்தப் பற்றே இராது.
தன்கையிற் கிடைத்ததைத் தன்அண்டையிலோர்
தமிழனுக்குத் தரவே எண்ணிடான்.
இமயத் தருகில் இருப்பினும் தேடிப்
பார்ப்பனுக்கே படைப்பான் அன்றோ?

திராவிடர் கண்கள் திறந்திருக் கட்டும்
சரேலெனப் பாய்வார் இராஜாஜி
ஒரே உளம் கொள்க உள்ள திராவிடரே!





( 5 )





( 10 )




( 15 )




( 20 )




( 25 )






( 30 )




( 35 )
முற்போக்குப் பார்ப்பனர் மாநாடு

இதுவரை வாளேந்தாச் சோதாக்கள்

சென்னைமா வட்டம் சேர் முற்போக்குப்
பார்ப்பனர் மாநாடு பகர் மேமுதல் நாள்
இரண்டாவ தாக இரசிக ரஞ்சனி
சபாவில், கே.எஸ். ராமசாமி
சாத்திரி என்பவர் தலைமையில் நடந்ததாம்
வேதபா ராயணம் விளைத்தாராம் முதல்
இந்திய யூனியன் கொடியேற்றினார் பின்!

எம். எஸ். சுப்பிரமணியன் என்பவர்
அம்மா நாட்டுக் கடிகோ லுகையில்
"தர்ப்பைகொள் கையால் வாளும் தாங்குவோம்'
என்றார் -- பார்ப்பனர் இதுவரை வாளினைத்
தொட்டறியாத சோதா மக்களா?
இனிமேல் இவர், வாள் ஏந்துவா ராயின்
காந்தியைக் கண்டு கைகள் கூப்பி
ஏந்து துப்பாக்கியை எடுத்துச் சுட்ட
மானமல்லா வஞ்சகச் செயல்இனி
யேனும் செய்யாதிருப்பரோ இவர்கள்?

ஆண்டவன் உயர்வு தாழ்வுண் டாக்கினான்
ஈண்டதை மாற்றுதல் இயலா தென்று
எம்.எஸ் சுப்பிர மணியன் இயம்பினார்.
உயர்வு தாழ்வுகள் உண்டாக்கிய ஓர்
ஆண்டவன் அழிந்து போனான்; இன்று
எல்லோரும் நிகர் என்பதை மறுத்துச்
சொல்லுவார் முகத்தில் தூஎன உமிழும்
மக்களாட்சி வலுத்திருப் பதனால்
எக்களித்தால் இயலாது பார்ப்பார்க்கு;

மாநாட்டுக் கன்வீனர் மணிஎனும் ஓர் ஆள்
"அவசியம் நேர்ந்தால் அரேபி யாவில்
யூதர்கள் அரேபியர் மீது தொடங்கிய
வேலையைத் திராவிடர் மீது தொடங் குவோம!
என்று கூறினராம் நன்று! நன்று!

குருதி வெறிகொண்டு திரியும் நாய்களை
அடித்துப் போடும் அலுவலைத் திராவிடர்
எடுத்துக் கொள்ளக் கூடும்
தடுத்துக் கொள்ள முடியுமா பிறர்க்கே?
( 40 )




( 45 )




( 50 )




( 55 )





( 60 )




( 65 )





( 70 )
செய்தித்தாள் ஆசிரியர் கூட்டம்

சீ. பீ. க்குப் புகழ்மாலை ஏன்?

ஏடு நடத்துகின்ற ஆசிரியர் என்று சிலர்
கூடினார்; சீ. பீயைக் கொண்டாடி ஆர்ப்பரித்தார்.
பார்ப்பனனைப் பார்ப்பனர்கள் பாராட்டிப் பேசியதை
ஆர்ப்பாட்டம் என்றே அறைவதிலே என்ன பயன்?
"ஏனிந்தச் சீ. பீயை இந்நாள் திடீரென்று
வானம் அளாவத்தம் வாயற் புகழ்கின்றார
என்பதை அல்லவா எண்ணுதல் வேண்டும் நாம்
வன்மனத்து ராஜாஜி வைசிராய் அவ்விடத்தில்
இவ்விடத்தில் ஏற்றவகை ஓர்பார்ப்பான் வேண்டுமே.
வேலையின்றி வாழ விடலாமோ சீ. பீயை
மூலையிலே தூங்காமல் முன்னே இழுத்துவைத்து
மக்க ளிடம்பகட்டி வைத்தல் நலமன்றோ?
தக்கஓர் ஓமந்தூர் காமராஜ் தம்மை

ஒழித்துப்பின் சீ. பீயை ஊராள வைத்தால்
செழிப்படைய லாமன்றோ பார்ப்பார் திருக்கூட்டம்?
வைத்திய நாதன்கள் வாய்ப்பற்றுப் போனார்கள்
கைத்திறமை அத்தனையும் காட்டி அலுத்தார்கள்
அன்னாரின் சூழ்ச்சிகள் அம்பலமே! மேலுமவர்
மின்னியமேற் போர்வை கிழிந்ததுஇனி வேகாது.
நாட்டிலினிச் சீ. பீயை நல்லவர் என்பார்கள்
கூட்டத்தில் சீ. பீயைக் குற்றமிலார் என்பார்கள்
ஏடெல்லாம் சீ. பீயை ஏற்றவரே என்றுரைக்கும்
வீடெல்லாம் சீ பீயை மேன்மை புரிவார்கள்
வல்லவர் என்று வழுத்துவார் பார்ப்பனர்கள்
எல்லாம் சீ.பீ தான் அவர்க்கு..

( 75 )




( 80 )




( 85 )




( 90 )




( 95 )
தூத்துக்குடி திராவிடர் மாநாடு

மெய்ம்மை விளங்கியது தூத்துக்குடியில் -- எங்கள்
மேன்மை விலங்கியது தூத்துக்குடியில்..
பொய்ம்மை கவிழ்ந்ததுண்டு தூத்துக்குடியில் -- பிறர்
புரட்டு விளங்கியது தூத்துக்குடியில்.
எம்மை விரும்பவில்லை நாட்டிலுள்ளவர் -- என்ற
ஏமாற்றுத் தொலைந்தது தூத்துக்குடியில்.
செம்மை அடைந்தனர் திராவிடமக்கள் -- என்னும்
செய்தி புலப்பட்டது தூத்துக்குடியில்.

நூறாயிரக் கணக்கில் தூத்துக்குடியில் -- தங்கள்
நோக்கம் வெளிப்படுத்த வந்து குவிந்தார்;
ஆறாயிர மகளிர் வந்து நிறைந்தார் -- தங்கள்
அன்புத் திராவிடத்தை மீட்கும் நினைவால்,
நீறாகிப் போனதுண்டு பகையுளந்தான் -- மிக
நீளக் கிடக்கும் நம் திராவிடத்திலே.
வேறேது திராவிடர் கழகமல்லால் -- என்ற
மெய்ம்மை விளங்கியது தூத்துக்குடியில்.

இன்பத் திராவிடமும், ஆளும் பொறுப்பும் -- எவையும்
எமக்கே எனும் இறுதி முரசறைந்தோம்.
வன்பு மிகு பகையை எங்கள் கழகம் -- வெளியில்
வாடா என்றழைத்தது தூத்துக்குடியில்
அன்பும் உடற்சதையும் எங்களுயிரும் -- எங்கள்
இருப்பும் இறப்பும் இத்தி ராவிடமடா -- எனில்
உன்போல நாடோடி நாங்களில்லையே -- என
வகையினுக்கு உரைத்தது தூத்துக்குடியில்,

ஆட்சி உடையசில திராவிடர்பால் -- மெல்ல
அணுகிக் கழகத்தவர் தம்மிற் சிலரை
வாட்டி மகிழ்ந்துவரும் பகைநரியின் -- வஞ்ச
வாலறுந்து போகுமென்று தூத்துக்குடியில்
காட்டினர் திராவிடர் கழகத்தவர் -- மக்கள்
கடல்ஒன்று முழங்கிற்றுத் தூத்துக்குடியில்!
நாட்டினில் ஆதரவு கழகத்துக்கே -- என்று
நடுங்கிற்றுப் பகைப்புலம் தூத்துக்குடியில்.
( 100 )




( 105 )





( 110 )




( 115 )





( 120 )




( 125 )





( 130 )

கோட்சே கூட்டத்தின் கூற்றுக்கு மாறு

சூன்மாதம் பதின்மூன்றில் இளைஞர் சங்கத்
தொடக்கத்தில் சுப்பாராவ் தலைமைப் பேச்சில்
"நான் சொல்வேன் சாதிஎனும் பாகு பாடு
தவிர்த்தெவர்க்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று
மேன்மையுறு நேருரைத்தான என்று நன்றாய்
விளம்பிடுவார் ஏனென்றால் நேரு பார்ப்பார்!
ஊன் நலங்காது உழைக்காமல் தம்மி னத்தார்
உயர் நிலையை எய்திவிட்ட தறியார் அன்னார்.

ஏமாற்றப் பட்டுள்ள ஏழை மக்கள்
இனியேனும் தலைதூக்க விட்டு விட்டால்
தீமையன்றோ தம்கோட்சே கூட்டத் திற்கே?
நேரு சொல்வார் செவ்வையாய்ச் சொல்லுவாரே!
தூய்மையுறு திராவிடர்கள் விழித்துக் கொண்டார்
பார்ப்பனர்கள் சொன்னபடி இந்தச் சர்க்கார்
தாமடங்க வேண்டுமோ! ஆண்மை யுண்டேல்
அசைக்கட்டும் திராவிடரை இச்சர்க்காரே!
சுப்பாராவ் மேலும் அம் மாநாட்டின் கண்
சொல்லு கின்றான் "வேற்றுமைகளை மறந்தே
இப்பெரிய சமூத்தை நாம் ஒன் றாக்க
முயற்சித்து வருகின்றோம என்பதாக!
சுப்பாராவ் என்னும்கோட்சே கூட்டத்தார்
சொல்வது போல் முயலுவது மெய்ம்மை தானா?
எப்போதாகிலும் நினைத்த தேனு முண்டா?
எரிநெஞ்சைக் குளிர் மொழியார் மறைக்கின்றாரா?

சாதிகளை மறந்துவிட வேண்டாம் என்று
சென்னைவாழ் சர்க்காரே சொல்லுவதாக ஓதுகின்றார் சுப்பாராவ், அது வெறும் பொய்
சாதியினை ஒழிப்பாரோ காந்தி என்று
தாது கலங்கிய கோட்சே கூட்டம் அந்தத்
தக்கானைக் கொன்றதுதான் மெய்ம்மையாகும்.
சாதியினால் வாழ்வதெனும் கொள்கை இந்தச்
சர்க்காருக்கு இல்லை! சுப்பா ராவுக்குண்டு



( 135 )





( 140 )




( 145 )




( 150 )




( 155 )





( 160 )



கல்வி அமைச்சர்க்கு

    கட்டாயப் படிப்புக்குப் பணத்தைச் செலவு செய்தாயிற்று.
    ஆனால் வாயால் இந்தி கட்டாயமில்லை என்பதா?

  இந்தியினைக் கட்டாயம் இல்லை என்றீர்
  இருக்கின்ற பார்ப்பனர்கள் உமை எதிர்த்தார்.
  இந்திமொழி கட்டாயம் என்றீர், பின்னர்
  இப்போதோ கட்டாயம் இல்லை என்று
  தந்திரத்தைக் காட்டுகின்றீர்! இந்திக்கு அன்றோ
  தமிழர்களின் பெரும்பொருளைச் செலவு செய்தீர்!
  பொந்திலுறும் வடமொழிக்கே அன்றோ நீவிர்
  பொருளையெலாம் செலவிட்டீர்! என்ன நோக்கம்?

  கட்டாயப் படிப்புக்குத் தேவை யான
  கணிசமுள தொகையினையும் தொலைத்தீர்; இந்தி
  கட்டாய மில்லைஎன வாயாற் சொன்னீர்.
  கனிதமிழை எல்லார்க்கும் தமிழகத்தில்
  கட்டாயம் கற்கஐந் தாண்டின் திட்டம்
  கடிதினிலே அமைத்திட்டால் தொல்லை யுண்டா?
  விட்டுவைப்போம் இந்தியினைத், தேவையுள்ளோர்
  வீட்டினிலே படியாரோ அதுவரைக்கும்?

  என்னமுழு கிப்போகும் இந்தி தன்னை
  எடுத்துவிட்டால்? ஒப்பாத இந்தி தன்னை
  வன்மையுடன் எதிர்ப்போர்கள் சிலரே என்றீர்.
  மறந்தீரா? கண்ணிலையா? வாய்க்கொழுப்பா?

  சின்னமதி யா? உள்ள அதிகா ரத்தின்
  திமிர்தானா? அவினாசி லிங்கத் தாரே
  இன்றைக்கோ உம்வீட்டுப் பண்ணையாளும்
  இந்திஎதிர்ப் பார்கட்சி என்றுணர்வீர்.


( 165 )




( 170 )





( 175 )




( 180 )






( 185 )

கிழிந்த விண்ணப்பம்

அவன்கட்சி தோற்பதற்கும் என்கட்சி வெல்வதற்கும்
      அரசே! நீவிர்
தவணையின்றித் தமிழர்க்கு நன்மைஎலாம் செய்க என்று
      தமிழன் கேட்டான்
எவன்கட்சி தோற்றாலும் எவன் கட்சி வென்றாலும்
      கவலை இல்லை!
நவில் 'பார்ப்பார்' நம்மைகெடக் கூடாதென்றே அரசன்
      நாட்ட லானான்.
அவன்வென்றால் தமிழர்க்கும் அரசர்க்கும் தீமையே
      ஆகும்! முன்னர்
அவன் ஆண்டான் தமிழரெலாம் அல்லலுற்றார் ஆதலினால்
      வெறுத்தொ ழித்தார்.
அவன்வென்றால் தமிழ்சாகும் தமிழரெங்கே? எனத் தமிழன்
      அழுதல் கேட்டே
'அவன்' என்றால் யார் என்று மன்னர்கேட் கத்தமிழன்
      அறிவிக் கின்றான்;
ஆச்சாரி தான்கெட்ட ஆச்சாரி தான் தமிழர்
      அழிவை நாடும்
ஆச்சாரி தான்எனவே ஆச்சாரி மேற்பழியை
      அடுக்க லானான்;
ஆச்சாரி ஆச்சாரியே அவர் மேல் அடைமொழிக்குப்
      பொருளே இல்லை.
ஆச்சாரி வெற்றிஎன் வெற்றிஎன்றால்பூணூல்
      ஆசர் தாமே.


( 190 )




( 195 )




( 200 )




( 205 )




( 210 )
எல்லாம் தமிழர் உடைமையே

கருநட இசையும் தமிழர் கண்டதே!
பல்லிசை கட்கும் வடக்குப் பாவிகள்
இழிந்ததம் வடசொற் பெயரை இட்டனர்.

ஏழிசை வடவர் கண்டிலர்; அன்றியும்
யாழிசை அறியார்; குழிலிசை அறியார்;
இனிமை தோன்றப் பாடுதல் அறியார்;
ஆதியே தமிழர் அறிந்தவர் இவைகள்,
ஆரிய மறையில் அமைந்த தொன்று
சாமம் பெயரால் சாற்றும் முறையைக்
கேட்டறியாத நாட்டு மக்கள்

கோயிலின் தேர்விழாக் கூட்ட நடுவில்
தவளைகத்துவதையும், நாய்குறைப்பதையும்
கேட்டுக் காது கிழிபட் டிருப்பார்;
அதுதான் அவர்இசை; சாம வேதம்!

ஓவியம் தமிழர் உளத்தின் வளர்ச்சியே!
ஆரியர் ஓவியம் அறியார்! மற்றும்
தச்சும் முதன்முதல் தமிழன் கண்டதே!
படமயில் ஆடும்; பார்த்த ஓவியன்
நடஅர சென்று வரைந்து நல்குவான்;
நல்கிய அதற்குப் புல்லுடைப் பார்ப்பான்
அதுதான் கடவுள் அதற்குயிர் தருவேன்
என்பான்; தமிழனும் ஆம்ஆம் என்பான்.

மருந்து தருவோர் மருத்துவம் என்பதும்
இருந்து பார்ப்பான் இங்குக் கற்றதே
இன்னும் ஓன்றையும் இயம்புவேன் கேட்க,
வேட்டி யைக்கீழ்ப் பாய்ச்சிக் கட்டுகை
அதுவும் பார்ப்பானுக் கமைந்த வழக்கம்,
வேண்டாம் என்று விளம்புவான் ஒரு பயல்.
வேட்டி, சட்டை, காசு, மெய்ப்பை
இவைஎலாம் தமிழ்ப்பெயர்! பண்டே கண்டவை!
காற்சட்டைஎன மேற்சட்டைஎன
இப்போ திருப்பவை, அப்போ திருந்தவை;

தமிழன் உடைமையை வடவன் உடைமைஎன்று
தமிழனே ஆக்கித் தலைகவிழ்கின்றான்;

இந்நாள் தமிழில் இருக்கும் எண்களை
அந்நாள் அரபியர், ஆங்கில மக்கள்
எடுத்தாண்டார்கள்! இதைஆராய்க!
தமிழில் ஒன்று மில்லை என்றும்.
தமிழில் இலக்கியம் இல்லை என்றும்,
தமிழைத் தொலைக்க வேண்டும் என்றும்,
கூறும் குறுகிய கொள்கை உடையோர்
எல்லாம் வடவர் சொத்தே என்று
சொல்லுவது நாளைய பிணஞ்சொல்லுவதே.



( 215 )




( 220 )





( 225 )





( 230 )





( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )
இனாம் ஒழிப்பு

 ஜமின் ஓழிப்பு நல்லதுவாம்
     இனாம் ஒழிப்புத் தீயவதுவாம்
          சட்டம் மன்றில்

 அமர்க்களமாம் இதுபற்றி
     வியப்பன்றோ? இனாம்ஒழிப்பை
          ஆதரிப்போர்

 தமக்குரிய கடமையினைப்
     புரிபவர்கள் தம்நாட்டின்
          நன்மை காப்போர்!

 அமிழ்த்திடுவோம் இனாம்ஒழிப்பை
     என்பவர்யார்? எத்தனைபேர்?
          அதனைக் கேட்பீர்!

 இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள்
     சிறுபான்மைக் கூட்டத்தின்
          இனத்தோர் ஆவார்

 இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள்
     இனாம்செத்தால் இனும்வாழ
          எண்ணுவோர்கள்!

 இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள்
     இனாம்சொத்தால் வாழ்வோர்பால்
          இனாம்கொள்வோர்கள்!

 இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள்
     அன்றும்இனாம் என்றும்இனாம்
          எனவாழ்வோரே!






( 260 )






( 265 )





( 270 )






( 275 )