பக்கம் எண் :

குடும்ப விளக்கு

நான்காம் பகுதி

மக்கட் பேறு

(அறுசீர் விருத்தம்)

'நகைமுத்து வேடப் பன்தாம்
நன்மக்கள் பெற்று வாழ்க!
நிகழுநாள் எல்லாம் இன்பம்
நிலைபெற! நிறைநாட் செல்வர்
புகழ்மிக்கு வாழ்க வாழ்க!
எனத்தமிழ்ப் புலவர் வாழ்த்த
நகைமுத்து நல்வேடப்பன்
மணம்பெற்று வாழ்கின்றார்கள்.

*மிகுசீர்த்தித் தமிழ் வேந்தின்
அரசியல் அலுவற் கெல்லாம்
தகுசீர்த்தித் தலைவ னான
வள்ளுவன் அருளிச் செய்த
தொகுசீர்த்தி அறநூ லின்கண்
சொல்லிய தலைவி மற்றும்
தகுசீர்த்தித் தலைவன் போலே
மணம் பெற்றின்புற்றிருந்தார்!

--------------------------------------------------------
* 'மிகுசீர்த்தி...............வள்ளுவன்' என்றது எதற்கு
எனில், வள்ளுவன் என்பது அந்நாளில் அரசியல்
அலுவலகத்தின் தலைவனுக்குப் பெயர் என்பதைக்
குறிப்பதாகும்.
--------------------------------------------------------

நாளெல்லாம் இன்ப நாளே!
நகைமுத்தைத் தழுவும் வேடன்
தோளெல்லாம் இன்பத் தோளே;
துணைவியும் துணைவன் தானும்
கேளெலாம் கிளைஞர் எல்லாம்
போற்றிட இல்ல றத்தின்
தாளெலாம் தளர்தல் இன்றி
நடத்துவர் தழையுமாறே!

பெற்றவர் தேடி வைத்த
பெருஞ்செல்வம் உண்டென் றாலும்,
மற்றும்தான் தேட வேண்டும்
மாந்தன்சீர் அதுவே அன்றோ?
கற்றவன் வேடப் பன்தான்
கடல்போலும் பலச ரக்கு
விற்றிடும் கடையும் வைத்தான்
வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்!

இனித்திட இனித்திடத்தான்
எழில்நகை முத்தி னோடு
தனித்தறம் நடாத்து தற்குத்
தனியில்லம் கொண்டான்! அன்னோன்
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்
கடைநினைப் பொன்று; நல்ல
கனிச்பேச்சுக் கிள்ளை வாழும்
தன்வீட்டின் கருத்தொன்றாகும்.

மூன்றாந் தெருவி லமைந்த
பழவிட்டில் அன்பு மிக்க
ஈன்றவர் வாழு கின்றார்
இடையிடை அவற்பாற் சென்றே
தேன்தந்த மொழியாள் தானும்
செம்மலும் வணங்கி மீள்வார்;
ஈன்றவர் தாமும் வந்தே
இவர்திறம் கண்டு செல்வார்.

நல்லமா வரசும், ஓர்நாள்
நவில்மலர்க் குழலாள் தானும்
வில்லிய னூரி னின்று
மெல்லியல் நகைமுத் தைத்-தம்
செல்வியை-மகளைப் பார்க்கத்
திடும்என்று வந்து சேர்ந்தார்.
*அல்லிப்பூ விழியாள் தங்கம்-
வேடப்பன் அன்னை வந்தாள்

--------------------------------------------------------
*அல்லிப்பூ - தாமரைப்பூ; அல்லி - அகவிதழ்; பூ
தாமரைப்பூ; அகவிதழ் சிறந்த தாமரைப்பூ என்க.
--------------------------------------------------------

இங்கிது கேள்விப் பட்டே
எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள்.
பொங்கிய மகிழ்ச்சி யாலே
நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த
செங்கதிர் கண்டு நாணும்
தேங்குழல், எதிரில் இட்டே
மங்காத சுவைநீர் காய்ச்ச
மடைப்பள்ளி நோக்கிச் சென்றான்.

அனைவரும் அன்பால் உண்பார்.
மலர்க்குழல், பொன்னி தன்னைத்
தனியாக அழைத்துக் காதில்
சாற்றினாள் ஏதோ ஒன்றை!
நனைமலர்ப் பொன்னி ஓடி
நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்!
'கனிதானா? காயா?' என்று
மலர்க்குழல் அவளைக் கேட்டாள்.

முத்துப்பல் காட்டிப் பொன்னி
மூவிரல் காட்டி விட்டுப்
புத்தெழில் நகைமுத் தின்பால்
போய்விட்டாள்; இதனை எண்ணிப்
பொத்தென மகிழ்ச்சி என்னும்
பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை;
அத்தூய செய்தி கேட்ட
தங்கமும் அகம்பூரித்தாள்.

மலர்க்குழல் தன்ம ணாளன்
மாவர சி்டத்தில் செய்தி
புலப்பட விரல்மூன் றாலே
புகன்றனள். அவனும் கேட்டு
மலைபோலும் மகிழ்ச்சி தாங்க
மாட்டாமல் ஆடல் உற்றான்!
இல்லாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்
என இருந்தார்எல்லோரும

நகைமுத்து நலிவு றாமல்
நன்று காத்திடுங்கள் என்று
மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்
மலர்க்குழல்! மெய்யாய் என்றன்
அகத்தினில் வைத்துக் காப்பேன்
அஞ்சாதீர்' என்றாள் தங்கம்.
நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.
நன்றெனப் பருகினார்கள்.

மாலையாய் விட்ட தென்றும்
மாடுகன் றுகளைப் பார்க்க
வேலைஆள் இல்லை என்றும்
விளம்பியே வண்டி ஏற
மூலைவா ராமல் மாடு
முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ
மேலோடல் இன்றிப் பெண்ணின்
வீட்டையே நோக்கிப் பாயும்.

'இன்றைக்கே நம்வீட்டுக்குத்
திரும்பிட ஏன் நினைத்தாய்?'
என்றுமா வரசு கேட்டான்
'எனக்கான பெண்டிர்க் கெல்லாம்
நன்றான இந்தச் செய்தி
நவிலத்தான் அத்தான்' என்றாள்.
'என்தோழ ரிடம்சொல் லத்தான்
யான் வந்தேன்' என்றான் அன்னோன்.

தங்கமோ மகனை விட்டுத்
தன்வீடு வந்து சேர்ந்தாள் அங்குநாற் காலி ஒன்றில்
அமர்ந்தனள்; உடன் எழுந்தாள்?
எங்கந்தச் சாவி என்றாள்?
ஈந்தனர் இருந்த மக்கள்
செங்கையாற் திறந்தாள் தோட்டச்
சிறியதோர் அறையை நாடி.

எழில்மண வழகன் வந்தான்
தங்கத்தின் எதிரில் நின்றான்.
'விழிபுகா இருட்டறைக்குள்
என்ன தான் வேலை? இந்தக்
கழிவடைக் குப்பைக் குள்ளே
கையிட்டுக் கொள்ளு வானேன்?
மொழியாயோ விடை எனக்கு?
மொய்க்குழால்* என்று கேட்டான்,

----------------------------------------------
* குழால்-குழலாளே. குழல்-கூந்தல்.
----------------------------------------------

அறையினில் அடுக்கப் பட்ட
எருமூட்டை அகற்றி, அண்டை
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
நெடுங்கோணி மூட்டை தள்ளிக்
குறுகிய இடத்தி னின்று
குந்தாணி நீக்கி அந்தத்
துறையிலே கண்டாள் பிள்ளைத்
தொட்டிலை எடுக்கலானாள்.

'நகைமுத்தாள்' என்று கூறி
நடுமூன்று விரலைக் காட்டித்
'துகள்போகத் துடைக்க வேண்டும்
தொட்டிலை' என்றாள் தங்கம்.
மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை
மருமகள் பெறவோ இன்னும்
தொகைஏழு திங்கள் வேண்டும்;
இதற்குள் ஏன் தொட்டில்' என்றான

"பேரவா வளர்க்கும் என்பார்
பேதமை! அதுபோல் நீயும்
பேரனைக் காண லான
பேரவாக் கொண்ட தாலே,
சீருற மூன்று திங்கட்
கருக்கொண்ட செய்தி கெட்டுக்
காரிருள் தன்னில் இன்றே
தொட்டிலைக் கண்டெடுத்தாய

எனமண வழகன் சொன்னான்ஏந்திழை சிரித்து நாணி
இனிதான தொட்டிலைப் போய்
ஒருபுறம் எடுத்துச் சார்த்தித்
தனதன்பு மணாள னுக்குச்
சாப்பாடு போடச் சென்றாள்
தனிமண வழகன் வந்து
தாழ்வாரத்தே அமர்ந்தான்.

உணவையும் மறந்து விட்டான்;
தெருப்பக்கத் தறையின் உள்ளே
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்
பாலடை தேடு தற்குத்
துணிந்தனன்; அறையில் சென்றான்.
பெட்டியைத் தூக்கி வந்து
கணகண வெனத்திறந்தான்
கைப்பெட்டி தனைஎடுத்தான்.

அதனையும் திறந்தான் உள்ளே
ஐந்தாறு துணி பிரித்து
முதுமையாற் சிதைந்து போன
மூக்குப்பா லடையைக் கண்டான்.
எதிர்வந்து நின்றாள் தங்கம்
"பார்த்தாயா இதனை!" என்றான்.
மதிநிகர் முகத்தாள யானும்
மணாளரும் ஒன்றே" என்றாள்

நகைமுத்தாள் மூன்று திங்கள்
கருவுற்ற நல்ல செய்தி
வகைவகை யாகப் பேசி
மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப்
பகல்கண்டார். மாம னாரும்
நகைமுத்தைப் பார்த்து மீண்டார
அகல்வாளோ தங்கம்? அங்கே
நகைமுத்தோடிருக்கலானாள்.

"சூடேறிற் றாவெந் நீர் தான்?
விடுவிடு சுருக்காய என்று
வேடப்பன் சொன்னான். அன்று
விடிந்ததும் நகைமுத் தின்பால்!
கூடத்தில் இருந்த தங்கம்
"கூடாது கூடா தப்பா
வாடவே லைவாங் காதே
வஞ்சிமுன் போலே இல்லை"

எனக்கூறித் தானே சென்று
வெந்நீரை எடுத்து வந்தாள்
மனமலர் சிறிது வாட
விழிமலர் அவன்மேல் ஓட
நனை மலர்க் குழலாள் ஆன
நகை முத்தாள் தன்மணாளன்
இனிதாகக் குளிப்ப தற்கே
இயன்றவாறுதவச் சென்றாள்.

"நகைமுத்து முன்போல் இல்லை
நலியச்செய் யாதே" என்று
புகன்றனள் அன்னையார். ஏன்
புகன்றனர்? எனத் தனக்குள்
புகன்றனன் எனினும் தன், கைப்
புறத்துள்ள நகைமுத் தாளைப்
புகல்என்றும் கேட்டா னில்லை
பொழுதோடக் கேட்போம் என்றே

பொழுதோட, இரவு வந்து
பொலிந்தது மணிவி ளக்கால்!
எழுதோவியத்தாள் அன்பால்
எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி
முழுதாவ லோடு சாவி
முடிப்புடன் வேடன் வந்தான்;
தொழுதோடி 'வருக' என்ற
சொல்லோடு வரவேற்றாள்பெண்.

பிள்ளையின் வரவு கண்டு
சிலசில பேசித் தங்கம்
உள்ளதன் நகைமுத் தின்பால்
செல்வத்தை உரைத்துச் சென்றாள்
"கிள்ளையே! நகைமுத் தாளே!
கிட்டவா! என்றன் தாயார்
துள்ளிப்போய்த் தாமே வெந்நீர்
தூக்கிவந்தார்கள் அன்றோ?

"நகைமுத்து முன்போல் இல்லை
நலிவு செய் யாதே, என்று
புகன்றனர் அன்றோ? என்றான்
பொன்னே அஃதென்ன?" என்று
மிகஆவ லோடு கேட்டான்
தன்மூன்று விரல்கள் காட்டி
முகநாணிக் கீழ்க்கண் ணாலே
முன்நின்றான் முகத்தைப் பார்த்தாள்.

'கருவுற்றத் திங்கள் மூன்று
கண்டாயா?" எனவே டப்பன்
அருகோடித் தழுவிப் "பெண்ணே
அறிவிப்பாய என்றான், 'ஆம்ஆம்
இருநூறு தடவை கேட்பீர்!"
எனக்கூறி அடுக்க ளைக்குப்
பரிமாறச் சென்றாள்! காளை
மகிழ்ச்சியிற் பதைத்திருந்தான்

நான்சிறு பையன் அல்லேன்
நான் தந்தை! என் மனைவி
தான்மூன்று திங்க ளாகக்
கருவுற்றாள்! தாய்மை உற்றாள்!
வான்பெற்ற நிலவைப் போல
வந்தொரு குழந்தை என்னைத்
தேன்பெற்ற வாயால் அப்பா
எனத்தாவும் திங்கள் ஏழில்
.
பெற்றதாய் மடியின் மீது
யாழ்கிடப் பதுபோல் பிள்ளை
உற்றிடும் அம்மா என்னும்;
அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்!
சுற்றார்போல் அக் குழந்தை
கண்டுதாய் கைப்பு றத்தில்
நற்றமிழ்ப் பால் குடிக்க
நகர்த்தும்தன் சிவந்த வாயை.

அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை
அமிழ்தச்செம் பினையும், தன்பால்
இணைஇதழ் குவிய உண்ணும்
இளங்குழந் தையையும் சேர்த்தே
அணிமேலா டையினால் மூடி
அவள்இடை அசைப்பாள்! அன்பின்
பணிகாண்பேன் வையம் பெற்ற
பயனைக்கண்ணாரக் காண்பேன்.

எனப்பல வாறு வேடன்
எண்ணத்தின் கள்அ ருந்தி
மனைநல்லாள் அழைக்கத் தேறி
உணவுண்ண மகிழ்ந்து சென்றான்
இனிதான உணவு நாவுக்
கினிதாகும்; கருக்கொண் டாளின்
புனைமேனி காணுகின்றான்.
புத்துயிர் காணுகின்றான்.





( 5 )





( 10 )




( 15 )












( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )










( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )









( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )





( 220 )





( 225 )




( 230 )





( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )




( 270 )

அகவல்

மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை
மாவரசு தானும் மலர்க்குழல் தானும்
வில்லிய னூரில் சொல்லா இடம் ஏது?
நகை முத்துக் கருவுற்ற நல்ல செய்தியை
அறிந்தோர் அனைவரும் வந்து வந்து
தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து
சென்றான்; அவர்கள் திண்ணையில் தன்னுடன்
அதையே பேசி அமர்ந்திரா ததுதான்
மாவர சுக்கு வருத்தம் தந்தது!

தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக்
"கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்;
காணச் சென்றேன் காலையில், கண்டே
உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே
என்ன செய்யலாம என்பாள் மலர்க்குழல்;
வேலைக் காரிகள் வேறெது பேசினும்
பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள்,
'இந்த வூட்டில் முந்தி முந்தி ஒரு
பேரன் பொறக்கப் போறான். ஆமாம்
இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல
எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது.
நல்ல வீட்டில் எல்லாம் பொறக்கும்
குடுகுடு் குடுகுடு குடுகுடு குடும்'
என்றும் குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்!
வழக்கம் போல் அவன் வந்துசொன் னாலும்
மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும்
ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்?
அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான்.
புதுவேட்டி தந்து, போய்நா டோறும்
இதுபோல் சொல்லி இதுபோல் கொள்' என்று
மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்;
எழில் வேடப்பனை ஈன்றோர் தாமும்
நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும்
கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய்
நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர்
பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம்
மடியிற் சுமந்தபடி, ''பத்தாம் திங்களின
முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள்.
வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ்
செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்
உதவி உடலுக் குயிரே போன்றது!
மாவரசு நாடோறும் வந்து வந்து
நாவர சர்களின் நல்ல நூற்களும்
ஓவியத் திரட்டும், உயர்சிற்றுணவும்,

வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு
போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி;
நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம், தன்வீடு தன் மகன் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை
அயலவர் நாடும் அன்னை நாடும்
இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த
அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள்
வாங்கி வந்து மணவழ கன்தான்
"இந்தா குழந்தாய என்றுநகை முத்துக்கு
ஈந்து போவான், இன்னமும் வாங்கிட!

கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து விச்சி நாடொறும் வருவாள்.
நகைமுத் தாளின் உடல்நிலை நாடித்
தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில்
இருந்தபடி இருப்பது கூடா தென்றும்
உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில்,
வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன்,
"நகைமுத் துடம்பு நன்று தானே?
கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே?
சொல்லுக அம்மா, சொல்லுக, அம்மா!"
என்று கேட்பான் துன்பமே இராதென
நாலைந் துமுறை நவின்று சொல்வாள்.

அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார்
குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து
கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும்
எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும்
கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்
பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும்
தொடுத்தவை திருத்திய குழலில் சூடியும்
பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை
ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்
நன்மகளான நகைமுத் துக்குப்
பிறக்க இருப்பது பெண்ணா ஆணா
என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்
தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால்
என்ன குழந்தை பிறக்கும் என்று
வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்.
பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால்
எங்கே போடுவீர்?" என்று கேட்டார்.
"மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன்
கண்ணில் வைத்தே காப்பேன் ஜயா"
என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள்.
"ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?"
என்று கேட்டார் இன்சொற் பெரியவர
"ஆணையும் அப்படி ஜயா" என்று
மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள்.
"பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும்
பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர்.
இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே
குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச்
சிரித்தனர்? வீட்டினுள் சென்றார்.
வருத்தியது இடுப்புவலி நகைமுத்தையே.



( 275 )




( 280 )





( 285 )




( 290 )




( 295 )




( 300 )




( 305 )




( 310 )




( 315 )





( 320 )




( 325 )





( 330 )




( 335 )





( 340 )




( 345 )




( 350 )




( 355 )




( 360 )




( 365 )



எண்சீர் விருத்தம்

பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்
பழக்கமுள மருத்துவிச்சி தனைஅ ழைக்க!
உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்
ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்திருந் தார்.
நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்
நிலவுபோல் உடைபுனைந்த மருத்து விச்சி
பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்
புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே.

பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து
பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்பதான
பேச்சொன்று கேட்கின்றார் ஆடவர்கள்
பெய்என்ற உலகுக்குப் பெய்தவான் போல்
கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்
கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து
"மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
முத்துப்போல் பிறந்தது தாய் நலமே" என்றாள்.

அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்
அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையினின்று
மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்
வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்
மெச்சிடுவா ழைப்பழத்தின் குலை கொணர்ந்தார்
மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள்
பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்
பாடினார் மகளிரெல்லாம் தாழ்வாரத்தில்


( 370 )




( 375 )





( 380 )





( 385 )




( 390 )


அறுசீர் விருத்தம்

ஈரைந்து திங்க ளாக
அகட்டினில் இட்டுச் சேர்த்த
சீரேந்து செல்வந் தன்னை
அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு
நேரேமெல் லாடை போர்த்து
நிலாமுகம் வானை, நோக்க
ஓராங்கும் அசையா வண்ணம்
கிடத்தியே ஒருபாற் சென்றார

சென்றஅம் மகளிர் தம்மில்
தங்கம்போய்த் தன்மக ன்பால்
'உன்மகள் தன்னைக் காண
வா'என அழைக்க லானாள்.
ஒன்றும்சொல் லாம லேஅவ்
வேடப்பன் உள்ளே சென்றான்
தன் துணை கிடக்கக்* கண்டான்;
தாய்மையின் சிறப்புக் கண்டான்.

---------------------------------------------------------------
* 1. துணைகிடக்கை-துணைவி படுத்திருத்தல் 2. வெற்பு-மலை
---------------------------------------------------------------

இளகிய பொன் உருக்கின்
சிற்றுடல், இரு நீலக்கண்,
ஒளிபடும் பவழச் செவ்வாய்
ஒருபிடிக் கரும்பின் கைகால்
அளி தமிழ் உயிர்பெற் றங்கே
அழகொடும் அசையும் பச்சைக்
கிளியினைக் காணப் பெற்றான்
கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்.

'நகைமுத்து நலமா' என்றான்
'நலம் அத்தான்' என்று சொன்னாள
'துகளிலா அன்பே! மிக்க
துன்பமுற் றாயோ!' என்றான்.
'மிகுதுன்பம் இன்பத்திற்கு
வேர்' என்றாள், களைப்பில் ஆழ்ந்தாள்.
'தகாதினிப் பேசல், சற்றே
தனிமை கொள்' என்றான்; சென்றான்.

சிற்சில நாட்கள் செல்ல
நகைமுத்து நலிவு தீர்ந்தாள்
வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்
மேனியில் ஒளியும் பெற்றாள்.
கற்பாரின் நிலையே யன்றிக்
கற்பிப்பார் நிலையும் உற்றாள்!
அன்றைநாள் மகளும் ஆகி
அன்னையும் ஆனாள் இந்நாள்

பெயர் சூட்ட விழாந டத்த அறிவினிற் பெரியார் மற்றும்,
அயலவர் உறவி னோர்கள்
அனைவர்க்கும் அழைப்புத் தந்தார்
வெயில்முகன் வேடப் பன்தன்
வீடெலாம் ஆட வர்கள்
கயல்விழி மடவார் கூட்டம்
கண்கொள்ளாக் காட்சியேஆம்.

ஓவியப் பாயின் மீதில்
உட்கார்ந்தோர் மின்இ யக்கத்
தூவிசி றிக்காற் றோடு
சூழ்பன்னீர் மணமும் பெற்றார்.
மூவேந்தர் காத்த இன்ப
முத்தமிழ் இசையுங் கேட்டார்,
மேவும்அவ்வவையை நோக்கி
வேடப்பன் வேண்டு கின்றான்;

'தோழியீர் தோழன் மாரே,
வணக்கம்! நற்றூய் தமிழ்தான்
வாழிய! அழைப்பை எண்ணி
வந்தனிர்; உங்கள் அன்பு
வாழிய! இந்த நன்றி
என்றும்யாம் மறப்போம் அல்லோம்
ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு
இடுபெயர் விழாநன்றாக!

இவ்விழாத் தலைமை தாங்க
இங்குள்ள அறிவின் மூத்தார்
செவ்விதின் ஒப்பி எங்கள்
செல்விக்குப் பெயர் கொடுக்க!
எவ்வெவர் வாழ்த்தும் நல்க!
இறைஞ்சினோம என்ற மர்ந்தான்.
"அவ்வாறே ஆக" என்றே
நகைமுத்தும் உரைத்து அமர்ந்தாள்

அங்குள்ள அறிவின் மூத்தோர்
அவையிடைத் தலைமை பெற்றே,
"இங்குநம் நகைமுத் தம்மை
வேடப்பர் இளம்பெண் ணுக்கே
உங்களின் சார்பில் நான் தான்
ஒருபெயர் குறிப்பேன என்றார்.
"அங்ஙனே* ஆக" என்றார்
அவையிடை இருந்தேர் யாரும்.

---------------------------------------------
* அங்ஙனே - அவ்வாறே
---------------------------------------------
அப்போது நகை முத்தம்மை
அணிமணி ஆடை பூண்டு
முப்பாங்கு மக்கள் காண
முத்துத்தேர் வந்த தென்னக்
கைப்புறம் குழந்தை என்னும்
கவின் தங்கப் படிவம் தாங்கி
ஒப்புறு தோழி மார்கள்
உடன்வர அவைக்கண்1 வந்தாள்.

கரும்பட்டு மென்மயிர் போய்க்
காற்றொடும் ஆடக் கண்டோர்
விரும்பட்டும் என்று சின்ன
மின்நெற்றிக் கீழ்இ ரண்டு
கரும்பிட்ட2 கருங்கண் காட்டி
எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட3 புருவம் காட்டி
அழகுகாட்டும்குழந்தை!

எள்ளிளஞ் சிறிய பூவை
எடுத்துவைத் திட்ட மூக்கும்
வள்ளச் செந்தாம ரைப்பூ
இதழ்கவிழ்ந் திருந்த வாய்ப்பின்
அவ் இரண்டும், சிவப்பு
மாதுளை சிதறச் சிந்தும்
ஒள்ளிய4 மணிச்சிரிப்பும்
உவப்பூட்டும் பெண்குழந்தை

-----------------------------------------------------------
1. அவைக்கண்-அவையில், 2. சுரும்பிட்ட-வண்டபோல
3. அரும்பிட்ட-அரும்பி   4. ஒள்ளிய - ஒளியுடைய
-----------------------------------------------------------

அன்னையி னிடத்தி னின்று
வேடப்பன், அருமைச் செல்வி
தன்னைத்தன் கையால் வாங்கித்
தமிழ்ப்பெரி யார்பால் தந்தான்
"என் அன்பே இளம்பி ராட்டி"
எனவாங்கி அணைத்து, மற்றும்
முன்னுள்ளார் தமக்கும் காட்டி,
முறைப்பட மொழியலுற்றார்,

"வானின்று மண்ணில் வந்து
மக்களைக் காக்கும்; அஃது
தேன் அன்று; கரும்பும் அன்று;
செந்நெல்லின் சோறும் இன்றே;
ஆன்அருள் பாலும் இன்றே;
அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை
ஆனபே ருலகைக் காக்க
அமிழ்வதால் மழையஃதேயாம்

தமிழரின் தமிழ்க்குழந்தை
தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்.
அமையுறும் மழைபோல் நன்மை
ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள்
அமிழ்தென்று பெயர் அமைப்போம்
அமிழ்தம்மை நாளும் வாழ்க!
தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!" என்றனர் அறிவில் மூத்தார்

"அமிழ்தம்மை வாழ்க!" என்றே
அனைவரும் வாழ்த் தினார்கள்.
அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த
அன்புறு குழந்தை தன்னை
எமதன்பே எனவே டப்பன்
இருகையால் வாங்கி யேதன்
கமழ்குழல் நகைமுத் தின்பால்
காட்டினான் கையால் அள்ளி.

அமிழ்தம்மா என அணைத்தே
அழகிக்கு முத்தம் தந்தாள்!
தமிழர்க்கு நன்றி கூறி
வெற்றிலை பாக்குத் தந்து
தமிழ்பாடி இசை நடத்தி
வேடப்பன் தன்கை கூப்ப
"அமிழ்தம்மை நாளும் வாழ்க"
எனச்சென்றார் அனைவர் தாமும்.

இருகாலைச் சப்ப ளித்தே
இடதுகைப் புறத்தில், அன்பு
பெருகிடத் தலையை ஏந்திப்
பின்உடல் மடியில் தாங்கி
மருவியே தன்பாற் செப்பு*
வாய்சேர்த்து மகள்மு கத்தில்
ஒருமுத்து நகைமுத் தீர்ந்தாள்
உடம்பெல்லாம் மகிழ்முத்தானாள்.

-------------------------------------------
* பாற்செப்பு - பால்தரும் உறுப்பு
-------------------------------------------

அமிழ்துண்ணும் குழந்தை வாயின்
அழகி தழ்குவிந்தி ருக்கும்
கமழ்செந்தாமரையரும்பு
கதிர்காண அவிழ்மு னைபோல்!
தமிழ்நலம் மனத்தால் உண்பார்
விழிஒன்றிற் சார்வ தில்லை
அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்
அயல் நோக்கல் சிறிதும் இல்லை .

உண்பது பிறகா கட்டும்
உலகைப்பார்க் கின்றேன் என்று
துண்ணென முகம்தி ருப்பித்
தூயதாய் முகமே காணும்;
கண்மகிழ்ந் திடும்செவ் வாயின்
கடைமகிழ்ந் திடும்; இவ் வையம்
உண்மையாய்த் தன் தாய் என்றே
உணர்வதால் உளம் பூரிக்கும்.

விரிவாழைப் பூவின் கொப்பூழ்
வெள்விழி யின்மேல் ஓடும்
கருவண்டு விழியால் சொல்லும்
கதைஎன்ன என்றாள் அன்னை
சிரித்தொரு பாட்டுச் சொல்லித்
திரும்பவும் மார்ப ணைந்து பொருட்சிறப்பை யும்வி ளக்கும்
பொன்னான கைக்குழந்தை

"மண்ணாட மூவேந் தர்தம்
மரபினார் என்ம ணாளர்
பெண்ணாளுக் களித்த இன்பப்
பயனாய்இப் பெருவை யத்தார்
உள்நாண அழகு மிக்க
ஒருமகள் பெற்றேன என்றே
எண்ணியே அன்னை தன் "பால
உண்பாளின் முகத்தைப் பார்த்தாள்.

மண்விழி இமையால் மூடி
உறக்கத்தில் நகைம றைத்துத்
தணிவுறும் தமிழர் யாழ்போல்
தன்மடி மேல்அ மைந்த
அணியுடல் குழந்தை கண்டாள்
அன்புடன் இருகை ஏந்திப்
பணியாளர் செய்த தொட்டில்
பஞ்சணை வளர்த்தலானாள்.



( 395 )




( 400 )





( 405 )









( 410 )




( 415 )





( 420 )





( 425 )




( 430 )





( 435 )




( 440 )





( 445 )





( 450 )




( 455 )





( 460 )





( 465 )




( 470 )









( 475 )




( 480 )





( 485 )





( 490 )




( 495 )










( 500 )





( 505 )




( 510 )





( 515 )




( 520 )





( 525 )





( 530 )




( 535 )





( 540 )









( 545 )




( 550 )





( 555 )




( 560 )





( 565 )





( 570 )




( 575 )




( 580 )



( 585 )

பஃறொடை வெண்பா

தன் மகளின் பெண்ணைத்
   தனிப்பெருமையைப் பேர்த்திதனை
இன்ப அமிழ்தை
   இணையற்ற ஓவியத்தைத்
தங்கம் எடுத்துத்
   தலையுச்சி தான்மோந்து
மங்கா மகிழ்ச்சியினால்
   மார்போடு அணைத்திருந்தாள்

அங்கந்த வேளையிலே
   அன்பு மகள் பெற்ற
திங்கட் பிறையைச்
   செழுமணியைப் பேர்த்திதனைக்
காண மலர்க்குழலும்
   வந்தாள் கடிதினிலே!
பாட்டிமார் வந்தார்
   பழம்பாட்டுப் பாடிடுவார்
கேட்டு மகிழலாம்
   என்று கிளிப்பேச்சுத்
தோழிமார் தாழ்வாரத்
   தொட்டிலண்டை வந்தமர்ந்தார

உள்ளவர்கள் எல்லாரும்
   தங்கத்தின் கைப்புறத்தில்
உள்ள குழந்தை
   யுடன்கொஞ்ச முந்துவதைத்
தங்கம் அறிந்தாள்
   தனதிடத்தில் உள்ளஒரு
பொங்கும் அமிழ்தைப்
   பொன்னான தொட்டிலே
இட்டாள் நகைமுகத்தை
   இன்னிசையால் தாலாட்ட
விட்டாள் விளைந்த
   தொரு பாட்டு.





( 590 )





( 595 )




( 600 )




( 605 )





( 610 )




( 615 )