பக்கம் எண் :

காதலா? கடமையா?

இயல் 1


"ஐந்துநாட் பின்னைநாம் அங்கு வருவோம்
வந்து விடுதலை வழங்குவோம் நன்றே"

நாட்டினை முன்னின்று நடத்தும் மறவர்,
கூட்டம் கூடினர்:
"அன்று நாட்டுக் காவன என்ன"?
என்று தம்மில் எண்ணி இருந்தனர்.
அப்போது,
"மாழை நாட்டின் மாப்பே ரரசன்
தந்த திருமுகம் இந்தா" என்று
தந்தான் வந்தொரு தலைப்பாகைக் காரன்,
தலைவனின் இருகை தாங்கின அதனை.
படித்தான்:
"கொன்றை நாட்டின் தலைவர்க்கு
மாழை நாட்டின் மாப்பே ரரசன்
இயம்புதல் என்னெனில்,
ஐந்துநாட் பின்னை நாம் அங்கு வருவோம்
வந்து விடுதலை வழங்குவோம் நன்றே"

என்றது கேட்டு,
மறவர் மகிழ்ந்தனர் மலைத்தோள் விம்மினர்.
"இறைவனை வாழ்த்துவோம என்றனர் சில்லோர்.

"நாட்டுக் குழைத்தோம் நற்பயன் கண்டோம்
ஆட்பட் டோம்எனும் அல்லல் இல்லை"

என்றான் ஒருவன், எழுந்து வீழ்ந்து
சிரித்தான் ஒருவன், செங்கை கொட்டிஆர்ப்
பரித்தான் ஒருவன், பாடினான் ஒருவன்,
அவர்களில், ஒருத்தி அறிஞன் எழுதிய

ஓவியம் போன்றாள்; ஒன்றும் உரையாமல்
ஆவிநேர் தலைவன் அறைவது கேட்கும்
விருப்பால் சும்மா இருப்பா ளாயினாள்.
தலைவன் சாற்றினான்:
"தோழமை உள்ளீர்! தோழமை உள்ளீர்!
மாழை நாட்டின் மாப்பே ரரசன்
உரிமை தருவதாய் உரைத்தான்;
தருவதோர் பொருளோ உரிமை?

தருவதோர் பொருளெனில், மீண்டும்
பறிப்பதோர் பருப்பொருள் அதுவே யன்றோ.
வென்ற தோளோடு, மீண்டும் நம் தோள்எனும்
குன்று, சாடிய குருதி தோய்ந்த
வெற்றி நிலத்தில் விளைவதாம் விடுதலை.
மற்றது கெடுதலை மறவர் மாட்சிக்கே"

இது கேட்டுக் கிள்ளை என்னும்அவ்
அழகியோள் "ஆம்ஆம என்றாள்.

ஆயினும்,
பிறர், பெரு மூச்செறிந்து பேசலுற்றார்;
ஒருவன், "தலைவரே, ஒன்று கேட்பீர்:
வருவது வருக; மறுத்தல் வேண்டா.
ஆட்சிநாம் அடைவோம்; அதன்பின்,
நாட்டுக் காவன நன்று முடிப்போம்!"
என்றான்.

"மாழை நாட்டு மக்கள், இந்த
ஏழை நாட்டின் இருப்பை யெல்லாம்
குந்தித் தின்று கொழித்திருக்கின்றனர்.
அந்தமிழ் நாட்டுக் காவன செய்யப்
பொருளும் போத வில்லை"
என்றுமற் றொருவன் இயம்பினான்.
அங்கிருந் தஅவ் வழகின் பிழம்பு,
தங்கப் பாவை, தையல்மின் னிதழில்
அச்சம் அரும்பிற்று;
"மறுக்க வில்லை மறுக்க வில்லை"
என்று தலைவன் இயம்பிய அளவில்
அஞ்சிய இதழ்கள் ஆங்கே
கொஞ்சின, "வெல்க கொன்றைநா" டென்றே.







( 5 )





( 10 )




( 15 )

-




( 20 )






( 25 )




( 30 )





( 35 )






( 40 )




( 45 )





( 50 )




( 55 )




( 60 )
இயல் 2

"பொதுத்திரு மன்று போந்திடு கின்றான்
புதுக்குக நகரைப் பொன்புதுக் குதல்போல

வானேறும் மீசை வள்ளுவன், யானைமேல்
தானேறிக் குறுந் தடியால் இடியென
முழக்கிய பெரியதோர் முரசொலி, மக்களை
அழைத்தது; செவியில் ஆவல் வார்த்தது.

வள்ளுவன் சொன்னான்:
"தெள்ளுதமிழ்க் கொன்றைத் திருநா டுள்ளீர்,
மாழை நாட்டின் மன்னர் மன்னன்

வாழநாம், விடுதலை வழங்கும்
பொதுத்திரு மன்று போந்திடு கின்றான்;
புதுக்குக நகரைப் பொன்புதுக்கு குதல்போல்;
தோளை இப் பணியில் தோய்ப்பீர் நன்றே
நாளை விடியலில் நடக்கும் இச்சிறப்பே"

என்னலும்,
மக்கள் மகிழ்ந்தார் வரையறை யிலாது!
"தக்கது தக்கது தக்க!" தென் றார்சிலர்,

ஒல்லென ஒலித்தனர் சில்லோர்,

பாடினர் சில்லோர் பழம்பெரும் நாட்டினை.

ஒருவன், தன்உயிர் ஒப்பாள் வாழும்
தெருநோக்கி ஓடிச் செப்பினான் மகிழ்ச்சியை!

மரத்தில் ஏறி மகிழ்ச்சியால் குதித்துச்
சிரித்தான் கால்வலி தெரியான் ஒருவன்.

இப்படி 'ஒன்றுவை' என்றான் ஒரு சேய்;
அப்பாவை முத்தம் அளியா திருந்தாள்
"நமக்கு விடுதலை நல்க அரசன்
வருகின்றானே தெரிவையோ"; என்னலும்,
இருபது முத்தம் எண்ணா தளித்தாள்.

பல்லிலாக் கிழவி கல்லுரல் இட்ட
மெல்லிலை மெல்ல இடிக்கையில்,
விடுதலைச் செய்தி விளம்புதல் கேட்டதால்
தடதட என்றே இடிபட்டதுகல்.

எடுத்தவாய் கொழ கொழ என்னும்; அதன்பொருள்
அயலான் நம்மைப் படுத்தியபாடு பறந்ததென்பதாம்.

கூரைவேய்ந் திருந்த கூலியாள் அங்கிருந்
தாரையோ விரல் நொடித் தழைத்துப் "பார் இனி
ஒருபணத்துக் கொருகலம் அரிசி
தருவார என்று சாற்றி, முன்னிலும்
விரைவாய்த் தன்பணி ஆற்றினான்.
பெரியதோர் மகிழ்ச்சியைத் திருநாடு மணந்ததே.









( 65 )





( 70 )





( 75 )








( 80 )





( 85 )
-




( 90 )






( 95 )

இயல் 3

"புல்லெனப் போர்த்த என் புறவுடல் காண்பவர்
அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறியார

"கொதிக்கும் நெஞ்சையும் குளி்ர்விக்கும் மாலை
மறைந்தது! வந்தது மாய்க்கும் இரவு.
மக்களில் ஒருவன் வறியன்; அவனே
ஆடும் அரங்கில் அரசனாய் விளங்குவான்
என்நிலை அன்னதே,
புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர்
அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறியார்!'
கிள்ளைஇவ் வாறு கிளத்தினாள்.
தோழி நடுங்கிச் சொன்னாள்.
"என் கடன் யாதோ? என் கடன் யாதோ?
பொன்கடைந் தெடுத்த புத்தொளிப் பாவையே,
உன்நெஞ்சும், இளைத்த உடற்கு மருந்தும்,
பின்னாள் விரும்புமுன் பெருவாழ்வின் நோக்கமும்,
தன்னுளம் நாட்டுக்குத் தந்த தலைவன்பால்
சொல் எனில் சொல்வேன
என்னலும்,

"ஏசினேன் தோழி யான்உனை
மறந்துவிடு.
பிறந்தார் எல்லாம் பிழைசெயல் உண்டு
பொய்கைதன் நீரால் புன்செய் காத்தல்போல்
ஐயன் உள்ளத் தன்பெலாம் நாட்டுக்
காக்கினான் தோழி ஆம் ஆம், ஆயினும்,
என் செய்வேன்?
உன்னை ஒன்று கேட்பேன்:
நினைவும் தொண்டும் நிழலும் உடலுமாய்ப்
பிழையாது பிறழாது பெருநாடு காப்பான்
ஆகுக.
மோப்பதும் பார்ப்பதும் முடுகலும் குட்டியைக்
காப்பதற் கென்னும் கருவரிப் பூனைபோல்
கொன்றை நாட்டின் குடிகட் கென்றே
என்றும் உழைப்பான் இம்மியும் தாழான்
ஆகுக.

கைவிரைந் தில்லம் காப்பவள், தெருவில்
ஐயம் என்றால் அளிக்க அணுகல் போல்,
என்நிலைக் கிரங்கி என்பாற்
சிறிது பொழுது, சிறிது பேசி,
நிறைய என் நெஞ்சில் நறவு செய்து
போனால் என்ன? புகல்வாய்!' என்றாள்.

"உன்னரும் முகத்தில் ஒளியும் குறைந்ததே"
என்றாள் தோழி,

"திங்கள் ஒளிபெறல் செழுங்கதிர் வரவால
என்றாள் கிள்ளை.

கள்ளிருந்த மொழியாளின், அன்னை
உள்ளிருந் தழைக்க, ஓடினாள் பறந்தே,




( 100 )




( 105 )




( 110 )





( 115 )




( 120 )




( 125 )




( 130 )





( 135 )






( 140 )

இயல் 4

"பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது
திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது"

புலர்ந்தது புதுநாள் புதுநாள் என்றனர்.
மலர்ந்தன முகங்கள், மலர்ந்தது உள்ளம்
எங்கணும் ஆர்வம், எங்கணும் எழுச்சி,
கொன்றை நாடு கொள்ளா மகிழ்ச்சியில்
அன்று குளித்தது.

காற்சி லம்பு கைவளை குலுங்க,
மேற்பொன் னாடை விண்ணில் மிதப்ப.
இல்லம் புதுக்கினர் மெல்லியர், அழகின்
செல்வம் விளைத்துச் சிறப்புச் செய்தனர்.

வாழையும் தெங்கும், வளர்தரு கமுகும்
தாழப் பெருங்குலை தாங்க வரிசையாய்
அடர்ந்தன! வானை அளாவும் பந்தர்கள்
தொடர்ந்தன, இடைவெளி தோன்றா வண்ணம்

மணியுடை மணியிழை மக்கள் அணிந்தே
அணிபெற வீதி அனைத்தும் நின்றனர்.
வீட்டு வாயிலில் வேந்தன் வரவெண்ணிக்
காட்டி மறைவன காதல்மின்னார்முகம்.

தெருவில் அமைந்த திருமன்று தோறும்
உருவில் அமைந்த ஒண்டொடி மாதர்
ஆடினர்; பாடினர்,
நீடிசைக் கருவிகள் நிறைத்தன அமுது.
முரசம் அதிர்ந்தன.

'அரசன் வந்தான், அரசன் வந்தான் '
என்ற சொல் கடலென இரைதல் ஆனது.

தேன்நிறை மலர்க்காடு செலும்வண் டுகள்போல்
யானை வரும்வழி ஏகின விழிகள்.

எள்ளும் விழாவண்ணம் இருந்த கூட்டத்தில்
குள்ளன் ஒருவன் குதித்துக் குதித்து
மன்னன் ஆங்கே வருவது பார்த்தான்.

கமழ்பொடி இறைத்தன கைகள், வாயெலாம்
தமிழ் மலர்ந்தது "தமிழகம் வாழ கென,

நிரல்பட நின்ற நெடுங் குன்றங்கள்
வரல்என வந்தது மாக்கா லாட்படை.
காலடி போல் இசைக் கருவிகள் முழங்கின.
சாலடி நீலத் தலைப்பா கையினர்
வாளோடு சுமந்து வருங்குதிரைப்டை
தாளத்திற்குத்தாள் ஒத்து வந்தது.

கையலைத்து யானைக் கடற்படை வந்தது.
வையத்தில் காலும் வானத்தில் முடியுமாய்த்
தேர்ப்படை வந்தது.

சிம்புள் வடிவின் அம்பாரி மீதில்
செம்பரிதி போலத் திருமாழைப் பேரரசு
வீற்றிருக்க, விரிகருங் கடல்போல்
தோற்றஞ்செய் யானை சுமந்து வந்தது.

பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது,
திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது.

செவியெலாம் இன்னிசை செழுமணம் மூக்கெலாம்
தவழ்ந்தன.

திருவுலாப் போந்த மன்னன்
ஒருபொது மன்றில் உற்றிருந்தனனே!





( 145 )




( 150 )






( 155 )





( 160 )
-




( 165 )







( 170 )






( 175 )




( 180 )






( 185 )






( 190 )
இயல் 5

ஊர்ப் பொது மன்றில், மாப்பே ரரசன்
சீர்ப்பெரு மேடையிற் சென்ற மர்ந்தான்.
அமைச்சன் அருகில் இருந்தான்.
கொற்றவன் பேரால் கொன்றை நாட்டில்
உற்றர சாளும் ஒள்ளியோன் இருந்தான்.
நாட்டை முன்னின்று நடத்துகின்ற
வாட்பொறை இருந்தான், மகிணன் இருந்தான்,
தாரோன் இருந்தான், தங்கவேல் இருந்தான்.

தலைவன் மகிணன் எழுந்தான்.
பொலந்தார் மன்னற்கு நலம்பல புரிந்து
தலைவ ணங்கிச் சாற்றுவா னானான்;
"ஆழிசூழ் வையத் தழியாப் பெரும்புகழ்
மாழை நாட்டு மாப்பேரரசே,
வாழிய!
கொன்றையை வெற்றி கொண்ட ஏந்தலே,
நன்றுநும் செங்கோல், நாளும் வாழிய!
பன்னா ளாக இந்நாட்டு மக்கள்

நன்னிலை நோக்கி நடப்பார் ஆயினர்;
செந்தமிழ் என்னும் தேனாறு பாயாத
உள்ளம் ஒன்றும் இல்லை;
கல்வியைக் கண்ணும் கருத்துமாய்க் கற்றனர்.

அதளால்,
இந்நாட்டில் பிறரால் இறக்குமதி பெற்ற
சாதி நினைப்பிலும் தங்கா தகன்றது
பெண்கள் விடுதலை பெற்றனர்.
கைம்மை இல்லை.

சமயப் பிணக்கெனும் சழக்கும் இல்லை
ஆனால்.
அன்புடைய அரசே,
நிலத்தின் வருவாய் நிறைய உண்டெனினும்
உலைக்கரிசி மக்கள் உணவுக்குப் போதா.
பாலின் நுரைநிகர் பருத்திஉண் டெனினும்,
மேலுக்கோர் கந்தை மிஞ்ச வில்லை.
தேக்கும் பனையும் தென்னையும் இருக்கையில்
மூக்கு முனைதரையில் முட்டக் குனிந்து
புகும் குடிசை நிகும்படி உள்ளன.

ஆதலின்,
பிணிகள் பெருகின
மன்ன, நின் பேரால் கொன்றை நாட்டில்
நன்முறை ஆட்சி நடத்தும் ஒள்ளியோன்
இந்நிலை உம்பால் இயம்பிய தாலே
விடுதலை அருள விரும்பினீர்!
கெடுதலை நீக்கிடக் கேட்டோம் யாமுமே!





( 195 )




( 200 )





( 205 )




( 210 )



-


( 215 )





( 220 )




( 225 )





( 230 )


இயல் 6

"விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி
முடிப்பதாய் மன்னன் மொழிந்தான் சிறப்புடன

வாழிய கொன்றைநாட்டு மக்களே அந்தக்
கோழி நாட்டான் கொடியவன் கண்டீர்!
அன்னோன்இந் நாட்டின் அருகில் வாழ்கின்றான்
என் நாட்டின்மேல் எரிவுகொண்டுள்ளான்.
படை திரட்டு கின்றான்.
மாழை நாட்டை மாய்த்திட எண்ணினான்.
ஆதலின்,
மாழை நாடும் மாப்பெருங் கொன்றையும்
என்றும் போரில் ஒத்திருத்தல் வேண்டும்
அப்படி நமக்குள்ஓர் ஒப்பந்தம் தேவை.

' எழுதுக இன்றே. இடுக கைச்சாத்தே '
என்றான் மன்னன். இது கேட்டனைவரும்
தப்பா தொப்பந்தம் தந்து முடித்தனர்.
விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி
முடிப்பதாய் மன்னன் மொழிந்தான் சிறப்புடன்!
மன்றின் உயர்ந்த மேல்மாடியில்
அன்றிரவு துயின்றான் அரசன் மகிழ்ந்தே.

( 235 )





( 240 )




( 245 )





( 250 )


இயல் 7

"தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான்
கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே"

மாடியில் துயின்ற மன்னன் எழுந்தான்
பாடி வாழ்த்திய பலரையும் அனுப்பிக்
காலைக் கடனைக் கடிது முடித்தான்.
பாலின் நனைந்த பண்ணியம் அருந்தி
ஏட்டை எடுத்தான் எழுதுகோல் தொட்டான்;
நாட்டுக்கு விடுதலை நல்குதல் எழுத
எச்சொல் புணர்ப்ப தென்று நினைத்தான்;
"அச்சொல் அமைக்க அமைச்சன் அறிவான
என்றான், எழுந்தான்; இளங்கதிர் எழுந்து
பொன்ஒளி கொழிக்கும் புதுமை காண
மாடிநிலா முற்றம் வந்து உலாவினான்.

பாடின பறவைகள், பருகினான் செவியால்
மலர்மணம் தூக்கி வந்தது காற்று.
நெடுவிழி போக்கினான் நேரில் ஓர்சோலை
கடிமலர்ச் சோலையின் நடுவில் ஒருகுளம்
அக்குளம் நிறைய அழகிய தாமரை
அம்மலர் மறிக்கும் கைம்மலர் பலப்பல;
சேலோடு சேலாய்த் திகழ்விழி பலப்பல;
மேலுடை நனைய மின்னுடல் பலப்பல;
தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான்.
கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே!





( 255 )




( 260 )





( 265 )




( 270 )
இயல் 8

"செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக்
கொடிமுல் லையெனக் குலுங்கச் சிரித்தாள்."

விண்மீன் எனப்பலர் விளங்க, நிலாமுகப்
பெண்ணாளைக் கண்ட பேரரசு வியந்து
கொடுத்ததை வாங்காக் கொடையா ளர்போல்
விடுத்த விழியை மீட்கா திருந்தான்.
நீராடியபின் நீள்விழி மடந்தையர்
நனைஉடை நீக்கினர்; நல்லுடை உடுத்தனர் ;
கனியிதழ், கண்ணாடிக் கன்னஞ் சிவக்கச்
சிரித்தபடி சென்றார், வியர்த்தபடி நின்றான்!
மன்னவன் பின்புறமாக
அமைச்சன் வந்தே "அரசே" என்றான்.
இமைக்காது பார்த்தவன் இப்புறம் திரும்பி
"உள்ளம் கொள்ளைகொண்டு பிள்ளை யன்னம்போல்
தெள்ளுநீர் ஆடிச் செல்லுகின்றாள் அதோ,
அவள்யார் அமைச்சனே, அவள் யார்!" என்றான்.
"தவழ்முகில் போலும் தாழ்குழலுடன் அதோ
இடதுகை முடக்கி இடைமேல் ஊன்றித்
தடமலர்க் கையசைத்துத் தனி ஒருவஞ்சிக்
கொடிஇடை துவளச் சிலம்பு கொஞ்ச
நடையழகு காட்டும் நாடக மயிலா?
அவள்தான்,
மகிணன் உள்ளத்தில் வாழும் கிள்ளை.
அவனும் அவள்பால் அன்பு மிக்கவன்.
நேற்று மாலை, நேரிழை, தென்றல்
காற்றினில் உலவுதல் கண்டு யார்என
ஒள்ளி யோனை உவப்புடன் கேட்டேன்;
வெள்ளையாய் அவனே விளம்பினான் என்னிடம்.

விண்ணோ நிலவால் விளக்கம் அடைந்தது.
தண்கடல் முத்தால் தனிச்சிறப்புற்றது.
தரையோ தானறிந்தது பிறர்க்குச் சாற்றும்
அருமை மக்களால் பெருமை பெற்றது.
மாண்புறு மக்களோ மங்கையர் தம்மால்
தள்ளொணாப் பெருமை சார்ந்தனர் -- மங்கைமார்
கிள்ளை ஒருத்தியால் கெடாதசீர் பெற்றனர்.
யான்பெற்ற முதுமையும் இவள்போல் ஒருமகவை
ஏன் பெறா திருந்தேன் என்றவாவுற்றது!
பழிஒன்று சொல்லப் படாத மேனி
அழகால் வையத் தாட்சி நடாத்தினாள
என்றான் அமைச்சன். இவ்வுரை வேந்தற்கு
நின்றெரி தீயில் நெய்யாயிற்று.

மன்னன் சொன்னான்:
"அன்புடை அன்னை என்னை வளர்க்கையில்
பொன்னுடை, மணிஇழை புதுச்சுவைப் பண்டம்
இவற்றால் நான்மிக இன்பம் பெற்றதாய்
நவின்றாள். பின்னர் நான் அரசு பெற்றே
இந்நிலம் வாழ்த்த இருக்கையில் நான்மிக
- நன்னிலை உற்றதாய் நவின்றனர் பகைவரை
வென்ற போதில் என் வெற்றியை வியந்தனர்.
அன்றுநான் மணந்த அழகிலா ஒருத்தியால்
இன்பம் பெற்றதாய் எண்ணினேன் இதுவரை;
துன்பம் உற்றேன்இத் தோகையைப் பெறாததால்.
நெஞ்சு நெருப்பாயிற்று நேரில் கண்டதும்.
வஞ்சி எனக்கெனில் வாழ்வெனக் குண்டு.
மணமா காத மங்கை; மண்ணில்நான்
பிணமாகு முன்பு பெறத்தக்க பேறு!
சற்றுமுன் என்கண் பெற்றது கேட்பாய்,
சும்மா. கைப்புறம் தோழி தொட்டாள்,
அம்மங்கை,
செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக்

கொடிமுல் லையெனக் குலுங்கச் சிரித்தாள்;
வைய விளக்கை, என் வாழ் வின்பத்தைநான்
கையோடு கொண்டுபோய் உய்யுமாறு
செய்க அமைச்சனே" என்று செப்பினான்.
அப்போது
மன்றினை நோக்கி மக்கள் மொய்த்தனர்
இன்றுதான் விடுதலை என்று கூவினர்.
மாடியில் இருந்த மன்னன் உணர்ந்தான்.
ஓடி அங்கே உள்ளவரிடத்தில்
"நாளை விடுதலை நல்குவேன்' என்று
கூறுக" என்று கோமான் கூறினான்.
அதனை அமைச்சன் கூறப்
புதுமை இது' என்று போயினர் மக்களே.




( 275 )




( 280 )




( 285 )




( 290 )




( 295 )




( 300 )




-
( 305 )




( 310 )





( 315 )




( 320 )




( 325 )




( 330 )





( 335 )




( 340 )




( 345 )
இயல் 9

"நின்னருந் தங்கையை என்னரு மன்னன்
விரும்பினான், கிள்ளை விரும்புவாள் அன்றோ?"

திருந்திய கொன்றைத் திருநாடு தன்னில்
இருந்தரசு ஆளும்எழி லுடைய ஒள்ளியோன்
தனக்கென அமைந்த தனிமணி மன்றில்
வனப்புற அமர்ந்து வாட்பொறை வரவை
எண்ணி இருக்கையில் எதிர்வந் தான் அவன்.
வருக வருக வாட்பொறை, அமர்க.
திருமணம் பற்றிய சேதி கேட்பாய்,
நின்னருந் தங்கையை என்னரு மன்னன்
விரும்பினான். கிள்ளை விரும்புவாள் அன்றோ?
பார்புகழ் மாழையின் பட்டத்தரசியாய்ச்
சீர்பெறல் உனக்கும் சிறப்பே அன்றோ?
என்னலும்,

வாட்பொறை உரைப்பான்:
கிள்ளையை அன்றோ கேட்டல் வேண்டும்?
கிள்ளையின்,
உள்ளம் பறித்தவன் ஒருவன் உள்ளான்
அவனும் அவள்பால் அன்புளான் போலும
என்னலும்,
"வாட்பொறை, வாட்பொறை, கேட்பாய், கேட்பாய்
ஆட்பட்ட நாட்டை மீட்டல் வேண்டும்நீ!
இணங்கா ளாயின் எத்தீங்கு நேருமோ!
மணந்திடச் சொல்க, வஞ்சி இதனை
மறுப்பது விடுதலை மறுப்பதாகும்.
அதனால்
கொன்றை நாட்டினர் கொடுமை ஏற்பார்.
என்றும் உன்னையும் இளையாள் தன்னையும்

தூற்றுவ ரன்றோ? சொல்க அவட்கிதை"
என்றான் ஒள்ளியோன்.
"நாளை விடுதலைஏடு நல்குதல் உண்டோ?"
என்று கேட்டான் எழிலுறும் வாட்பொறை,
"இன்று கிள்ளை இணங்குதல் உண்டோ?"
என்றன் ஒள்ளியோன்.
"ஐயகோ மக்கள் அவாவும் விடுதலை
எய்தல் வேண்டுமே" என்றான் வாட்பொறை!
"என்றன் நாட்டுப் படையும் யானும்
கொன்றை நாட்டினின்று நீங்கிட,
அரசனொடு கிள்ளையை அனுப்புக, அனுப்புக.
விரைக'; என்று விளம்பினான் ஒள்ளியோன்.
சாவுபடு முகத்தொடு வாட்பொறை
ஆவன செய்வதாய் அறைந்து சென்றானே.



-




( 350 )




( 355 )





( 360 )




( 365 )




( 370 )





( 375 )




( 380 )




( 385 )
இயல் 10

"ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ
சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும
"நாளும் சொற்பெருக்கு நடத்தியும் அலைந்தும்
தோறும் உள்ளமும் துன்புறப் பெற்றேன்:
இன்றுதான் அனைதி எய்தினேன். மக்கள்
என்று விடுதலை என்று விடுதலை
என்று பன்னாளாய் இடரில் மூழ்கினர்,
இன்றுதான் மகிழ்ச்சி எய்தினர என்று
தங்கவே லிடத்தில் சாற்றினான் மகிணன்.
"நாட்டுக் கான நல்ல சட்டங்கள்
தீட்டுதல் வேண்டுமே, திரு நாட்டினின்று
மாழை நாட்டின் மாப்பெரும் படையும்
ஆழக் குந்தி அலுவல் பார்க்கும்
ஒள்ளியோன் கூட்டமும் ஒழிந்தபின் இங்குக்
கிள்ளைக்கு மணிமுடி கிடைக்கும் வண்ணம்
முயலுதல் வேண்டும். மொய்குழல் தன்னினும்
அயலவர் பல்கலை ஆய்ந்தார் அல்லர்.

மேலும், பெண்கட்கு விடுதலை தருவதாய்
ஏலுமட்டும் இயம்பி வந்தோம்.
அதற்கடை யாளம் அமைத்தல் வேண்டும்
இதுஎன் எண்ணம் என்றான் தங்கவேல்.
ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ,
சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும்.
ஆதலால்,
பல்லார் கூடி நல்லன பாடி
அல்லலை நீக்கும் ஆட்சியே ஆட்சியாம
என்று மகிணன் இசைக்கத், தங்கவேல்,
"பல்லார் கூடிப் பாங்குற அமைத்த
நல்லதோர் முடிவை நடத்து தற்கும்

மேல்ஒரு தலைவன் வேண்டு மன்றோ?
சேலிலை நிகர்விழித் தெரிவையைத் "தலைவி"
ஆக்குதல் நன்றே அன்றோ" என்றான்
ஆக்குவோர் நீ, நான் அல்லோம், நாட்டினர்
அனைவர் ஒப்பமும் அதற்கு வேண்டும்,
இனிநாம் கூடிச் சட்டம் இயற்றுவோம்!'
என்று மகிணன் கூற
"நன றெனத் தங்கவேல் நடந்தான் அன்றே.







( 390 )




( 395 )




( 400 )





( 405 )




( 410 )




( 415 )




( 420 )