பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி

அத்தான் என்றெதிர் வந்தாள்

 எண்சீர் விருத்தம்

'அத்தான்' என்றெதிர்வந்தாள். ஐயோ என்றாள்
        "அவன்என்னைக் கற்பழித்தான்; உடனிருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
        உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னை அவன் தொட்டானென்று
        தோன்றியது மறைந்துவிட்டான் தேடிச்சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்மடித்தார்
        கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.

பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
        பெருநினைப்பால், வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடாமற்செய்யத் திட்ட மிட்டார்.
        மறம்வீழும் அறம்வாழும் என்பதெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழரெல்லாம்;
        தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை,
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
        வடநாட்டான் எடுத்துப்போய்விடஒண்ணாது.

முப்புறத்தும் தமழ்நாட்டின் முரசு மாக
        முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
        கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுவைபட்டு முன்னாள் தொட்டு
        முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோமில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
        பறித்துவிட எவராலும் ஆவதில்லை.

செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள்போல்
        திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்ய
        படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இருப்பார்.
        வளைந்துகொடுத்ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தாரில்லை
        தமிழ்நாடு பணிவதில்லை வடநாட்டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை அறிந்து கொள்வான்,
        தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் சொங்கோலாய்த் தமிழர் நாட்டை
        விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
        பேடிகளாய்த் தேசிங்கனும் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வாழாத
        மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.

கையொடு கூட்டிவந்து வடநாட்டார்கள்
        காணுகின்ற பெண்டிர்களைக் கற்பழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
        தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான், மாய்வான்.
        விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ அத்தான்என் ஆவல் கேட்பீர்
        ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!"
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
        இருகத்தி வாங்கினார் திம்மன் செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
        கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
        'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
நன்றுக்குச் சாகலாம் என்றாள் நங்கை.
        நாட்டுக்கு நல்லதொண்டாம் என்றான் திம்மன்.

நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
        நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர் அறுக்க நினைப்பவர்க்குத்
         தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே என்றான் செங்கான்!
        புதுமைதான் புதுமைதான் என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீடடைந்தார்
        இவ்விடந்தான் நஞ்சுண்டேன் என்றாள் நங்கை!

மயக்கத்தால் தலைசாய் தேன் இவ்வி டத்தில்!
        மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
        சோர்ந்ததுவும் இவ்விடந்தான் என்று ரைத்தாள்.
புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
        போட்டழைத்த திவ்விடந்தான் போலும் பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
        வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!

என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
        இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்
குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
        கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப்பம்மா,
நன்றான தமிழச்சி, என்கண் ணாட்டி
        நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
        அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!

தேசிங்கன் உனைப்பழித்தான் ஒருவ னைநீ
        சேர்த்துக்கொண் டாய் என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
        துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லேநீயும் அங்கே இல்லை.
        அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்
'நீசாவாய் நான்செத்தால்' எனநி னைத்தேன்.
         நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.

'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
        ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவதன்றி,
        ஊரைளும் அரசறிய உலகம் காண,
துரையேநீருங்காண, அவனின் மார்பில்
        சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
        திருவண்ணாமலைத்தமிழர் தந்த கத்தி!'

என்றுரைத்தாள், திம்மனது கேட்டிருந்தான்
        இதற்குள்ளே நேஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல; பத்தல்ல நூறு பேர்கள்
        உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
        கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்றுரைத்தார்,
        'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்,
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
         தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை
அமைவான குரலாலே கூறி கின்றாள்;
        'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்,
நமைஅவர்கள் பிடிப்பரேல் தேசிங் கின்பால்
        நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை. என்னைத் தங்கள்
        நற்றமிழக் கையாலே கொன்று போட்டு

திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க.
        செய்வீர்கள் இதைஎன்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான்; பெண்ணே என்னைப்
        பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங்குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
        தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட்டுக்குப்
பெரிதான ஆலமரம் அதோபார் என்றான்,
        பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.

பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
        பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர்;கத்தி தன்னை !
        உள்மறைத்து வைத்திருப்பீர் ; எதிரே சென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
        வந்துசொல்ல வேண்டுகின்றேன் என்றான் திம்மன்
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
        தனியாக உலவினான் புலியைப் போலே!





( 5 )




( 10 )





( 15 )






( 20 )




( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )




( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100 )




( 105 )



( 110 )





( 115 )




( 120 )





( 125 )

மறவர் திறம் பாடு

நாலடித்தரவு கொச்சுகக் கலிப்பா


'பாட்டொன்று பாடு! பழைய மறவர்திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.

அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத் தழுவ வாராயோ?

நன்னலத்துக்குக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதியதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!

நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்?
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!

ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும்படி யளிக்கும் சாவே எனைத் தழுவே!

ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்; உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!


( 130 )





( 135 )





( 140 )






( 145 )





( 150 )

குதிரை வீரர் வருகின்றார்கள்

எண்சீர் விருத்தம்


நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
          நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
           தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தனை
          நாற்புறமும் சுற்றினார். அடுத்திருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
          குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்

சேரியிலே வாழுமக்கள், கிழக்கில் தோன்றும்
          செங்கதிரை வயற்புறத்தில் கண்டார் பின்னர்.
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
          ஓருவரும்ஆங் கில்லையெனில் புதுமையில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
          நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓருவளையம் நாம்பிடிக்க விலையே என்றான்.
          ஓரிளையான் மற்றவன்பால் குற்றவாளி

பெரியசிப்பாய் கூறிடுவான்; நாமெல் லாரும்
          பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
          ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
          கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின்றார்பரிசு பெறப்போகின்றோம்
          தக்கபடி சாத்துப்படி என்று சொன்னான்.

இன்னொருவன் கூறுகி றான்; அந்த மன்னர்
          இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்பதற்குக்
கன்னக்கோல் காரர்போல் வரவும் கூடும்
          கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல்தீதே
என்றுரைத்தான் இதைக்கேட்ட திம்ம னுக்கும்
          இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்.
பூவாயைத் திறக்கவில்லை காத்திருந்தார்.






( 155 )





( 160 )





( 165 )




( 170 )





( 175 )




( 180 )

மேற்பார்வையாளன்

தென்பாங்கு -- கண்ணிகள்


வெட்டித் குத்திச் சாய்க்கக் கட்டுக் கத்தியோடு
வெள்ளைக் குதிரையில் ஏறித் -- தலைக்
கட்டோடு வந்தனன் சீறி

எட்டுத் திக்குட் பட்ட மக்கட் கூட்டந் தன்னை!
ஏங்கிட வைப்பவன் போலே -- இமை
கொட்டாமல் பார்த்தனன் மேலே

சொட்டச் சொட்ட வேர்வை! உட்கார்ந்தி ருந்தவர்
துள்ளி எழுந்தங்குத் தாவிச் -- சிரித்
திட்டனர் அன்னோனை மேவி

திட்டுத் திட்டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன் என்றே -- திம்மன்
பட்டாவை ஏந்தினன்    நன்றே

சுற்றி இரையினைக் கொத்தும் பருத்தென
உற்றுவிழித்தசுப் பம்மா -- அங்குச்
சற்றும் இருப்பாளோ    சும்மா?

வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக் குதித்தாள் -- பகை
அற்றிட நெஞ்சம் கொதித்தாள்.

சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன மெய்கள் -- அங்கே
அற்று விழுந்தன கைகள்

முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி காரி -- கண்டு
தெற்றென வீழ்ந்தனன் பாரில்

உற்றது திம்மனின் வாள் அவன் மார்பில்
ஒழிந்தது வே அவன் ஆவி -- கண்
டரற்றினர் சிப்பாய்கள் மேவி்

மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில் விழுந்து -- கண்
ணுற்றனள் இன்பக்     கொழுந்து.

சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்,
தோகை பதைத்ததும் கண்டார் -- கைப்
பற்றிட எண்ணமே     கொண்டார்

பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள் மேலே -- மிகச்
சிற்றின நாய்களைப்     போலே!






( 185 )







( 190 )







( 195 )






( 200 )





( 205 )






( 210 )




அவள் பிடிபட்டாள்

சீர் விருத்தம்


                        

திம்மன்மேல் சென்றவிழி திரும்புதற்குள்
     சேயிழையாள் பிடிபட்டாள் பகைவராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
     அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
மெய்ம்மைநெறி எய்தினீர், தேசிங் கென்னும்
     வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்'
     முடிவடைந்த தென்பணியும் என்று சொன்னாள்.

( 215 )




( 220 )