பக்கம் எண் :

தமிழியக்கம்

6. அரசியல்சீர் வாய்ந்தார் ( 1 )

கல்லூரித் தலைவரை நான்
கேட்கின்றேன் கனிதமிழின்
பேரைச் சொன்னால்

சொல்லூறிப் போகாதோ!
வாயூறிப் போகாதோ!
தூய்தமிழ்க்கு

வல்லூறாய் வாய்த்தீரோ!
வளம்செய்யும் ஏண்ணமெனில்
நீர்பி றந்த

நல்லூரின் நன்மொழியால்
அல்லாது நடந்திடுவோர்
நவில்வீர் இன்றே

வரிப்பணத்தை வழங்கிடுவோர்
வாய்ப்பளிக்க முந்திடுவோர்
தமிழர் அன்றோ?

இருப்புறுநும் அலுவலுக்கும்
யாரையா வோர்? தமிழை
மறப்பதுண்டோ?

நரிப்பிணத்தை நரியுந்தின்
னாதொன்ப தறியீரோ?
நம்மானத்தை

எரிப்பதற்குத் திருவிளமோ?
எழிற்பள்ளிக் கணக்காயர்
தலைமை யோரே.

தமிழ்நாட்டின் உப்பைத்தின்
றீரன்றோ கணக்காயர்
தந்தை மாரே!

தமிழ்நாட்டில் தமிழர்களின்
தன்னுணர்வு நாட்டுவதைத்
தவிர்ப்பீராயின்

உமிழாதோ, வருத்ததோ
உம்மையே உம்மருமை
உள்ளச் சான்றே?

அமுதூட்ட நஞ்சூட்டி
அகமகிழும் தாயுண்டோ
அருமைச் சேய்க்கே?

படிப்பாரின் தமிழ்ச்சுவடி
பரிந்தாயும் அரசியலார்
குழுவினோரே.

தடிப்பாகிப் போலதுண்டோ
இம்முள்ளம்? தமிழென்றும்
வடசொல் என்றும்

வடிப்பாக்கி நோக்கிடவும்
மாட்டீரோ? செந்தமிழின்
பகைவரின் வால்

பிடிப்பாரின் துணையில்இனும்
பிழைப்பீரோ, மறவர்தமிழ்ப்
பெரிய நாட்டில்?

தமிழ்நடையில் நயம்வேண்டின்
மிழ்நாட்டின் நடைமுறையைத்
தமிழ்நாட்டாரை

அமையவரை தல்வேண்டும்!
அவ்வாற்றால் அமைவுற்ற
சுவடிதன்னை

உனைமறந்து மறுக்காதீர்
உமியைப்போல் ஒப்பாதீர்
இன்னும் கேளீர்

தமிழ்தழுவாச் சுவடிதனைத்
தணல்தழுவா திராதினிமேல்
தமிழ்நாடெங்கும்.





( 5 )






( 10 )





( 15 )






( 20 )






( 25 )





( 30 )






( 35 )






( 40 )





( 45 )






( 50 )






( 55 )





( 60 )

7. அரசியல்சீர் வாய்ந்தார் (2)

தெலுங்குதமிழ் நாட்டினிலேன்?
செத்தவட மொழிக்கிங்கே
என்ன ஆக்கம்?

இலங்கும் இசைப் பாட்டுக்கள்
பிறமொழியில் ஏற்படுத்த
இசையலாமோ ?

நலங்கண்டீர் தமிழ்மொழியால்
நற்றமிழை ஈடழித்தல்
நன்றோ? சின்ன

விலங்கதுதான் சோறிட்டான்
மேற்காட்டும் நன்றியைநீர்
மேற்கொள்ளீரோ.

பொதுமையிலே கிடைத்திட்ட
செல்வாக்கை இனநலத்துக்
காக்குவோரை

இதுவரைக்கும் மன்னித்த
ஏழில்தமிழர் இனிப்பொறுப்பார்
என்பதில்லை!

குதிகாலும் மேற்செல்லும்
அடுத்தபடி கிழேதான்
வந்து சேரும்

அதுவியற்கை! மலைக்காதீர்!
அறிவுநாள் இது! கொடுமை
அழிந்தே தீரும்.

அரசியலார் அறிக்கையிலும்
சுவடியிலும் தமிழ்ப் பெருமை
அழித்திடக்கை

வரிசையெல்லாம் காட்டுவதோ.
வடமொழியும் பிழைத்தமிழும்
பெருகிவிட்டால்

வருநாளில் தமிழழியும்
வடமொழிமே லோங்குமெனும்
கருத்தோ? நாட்டில்

திருடர்களை வளரவிடும்
ஏற்பாடோ, செல்லுபடி
ஆகாதிங்கே.

திருடர்கள் ஜாக் கிரதைஇதைத்
திருடருண்டு விழிப் போடி
ருங்கள் என்றால்,

வருந்தீமை என்ன? நியா
யஸ்தலத்தை அறமன்றம்
எனில்வாய்க் காதோ?

அருவருக்கும் நெஞ்சுடையார்
அருவருக்கும் செயலுடையார்
அன்றோ இந்தக்

கருவறுக்கும் வினை செய்வார்
கலப்பாலில் துளி நஞ்சும்
கலத்தல் வேண்டாம்.

அரசியலார் அலுவலகம்
அறமன்றம் இங்கெல்லாம்
அலுவல் பெற்றீர்

உரையனைத்தும் ஆங்கிலமோ?
உணர்விலையோ? ஒழுக்கந்தான்
இதுவென்பீரோ.

வரும்நாட்டுப் புறத்தவரின்
தமிழ்ப் பேச்சும் பிடிப்ப தில்லை
வண்டமிழ்சேர்

திருநாட்டிற் பிறந்தோமென்று
எண்ணுவதும் இல்லை இனித்
திருந்துவீரே.






( 65 )






( 70 )





( 75 )






( 80 )






( 85 )





( 90 )






( 95 )






( 100 )





( 105 )






( 110 )






( 115 )





( 120 )