பக்கம் எண் :

ஆல்

அடி-கிளை, காய், இலை, நிழல்

ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில்!
பொலிந்தன பவளக் காய்கள்
காயினை நிழலால் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள்!
ஆறஊர் அடுங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும்!





( 5 )




விழுதும் வேரும்

தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!


( 10 )




( 15 )

பச்சிலை, இளவிழுது

மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னி ழைகள்!
வேற்கோல்போல் சிலவீழ்து உண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.




( 20 )




அடிமரச் சார்பு

அடிமரப் பதிவிலெல்லாம்
அடங்கிடும் காட்டு்ப் பூனை!
இடையிடை ஏற்பட்டுள்ள
பெருங்கிளைப் பொந்திலெல்லாம்
படைப்பாம்பின் பெருமூச்சுக்கள்!
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல்!
தடதடப் பறவைக் கூட்டம்!
தரையெலாம் சருகின் மெத்தை!

( 25 )




( 30 )


வௌவால், பழக்குலை, கோது, குரங்கு,
பருந்து

தொலைவுள்ள கிளையில் வௌவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குழைப்பழம், கிளை,கொ டுக்கும்;
கோதுகள் மழையாய்ச் சிந்தும்!
தலைக்கொழுப்புக் குரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்திழுக்கும்!



( 35 )





( 40 )

கிளிகள்

கொத்தான பழக்குலைக்குக்
குறுங்கிளை தனில் ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டையண்டைப்
பொத்தென்று வீழும்; அன்பிற்
பிணைந்திடும்; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குக் கசப்பைச் செய்யும்!





( 45 )



சிட்டுக்கள்

வானத்துக் குமிழ்பறந்து
வையத்தில் வீழ்வதைப்போல்
தானம்பாடும் சிட்டுக்கள்
தழைகிளைத் மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒளிக்கும்;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.


( 50 )




( 55 )

குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
"விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப்போல
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.




( 60 )



பறவை யூஞ்சல்

ஆலினைக் காற்று மோதும்;
அசைவேனோ எனச்சிரித்துக்
கோலத்துக் கிளைகுலுங்க
அடிமரக் குன்று நிற்கும்!
தாலாட்ட ஆளில்லாமல்
தவித்திட்ட கிளைப்புள்ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும்!

( 65 )




( 70 )


குயில் விருந்து

மழைமுகில் மின்னுக்கு அஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
"வழங்குக குடிசை" என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளிரிலைக் கையமர்த்திப்
பழந்தந்து களிப்பார்க்குப்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.



( 75 )




( 80 )

புறாக்கள்
கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு

வீட்டுக்கு வெளிப்புறத்தில்
வேலன்வந்தேபுறாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு
"குடுகுடு" எனக்குதித்தல்
கேட்டது காதில்! கூட்டைத்
திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போல்புறாக்கள்
குதித்தன கூட்டினின்றே!





( 85 )


புறாக்களின் பன்னிறம்

இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும்! செவ்விதழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை! மெல்லியர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம்
காயாம் பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவாழைப்பூ!
உயிருள்ள அழகின் மேய்சல்!


( 90 )




( 95 )

புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு

இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறிருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.




( 100 )




நடை அழகு

அகன்றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடி பொருந்தப்,
புகும்தலை; நீர்வாய் மொண்டு
நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணி விழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ்இ றங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!

( 105 )




( 110 )


புறாவின் ஒழுக்கம்

ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக்கு உடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப்பைப்போல்
ஒளிபுரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்பதில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற்றொன்றை நாடும்!



( 115 )




( 120 )

புறாக்களுக்கு மனிதர் பாடம்

"அவள் தனி; ஒப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக்கின்றான இந்தத்
தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
ஒரு சிறு தறு தலைகள்.
கவலைசேர் மக்களின் பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!





( 125 )



புறாக்கள் காதல்

தலைதாழ்த்திக் குடுகுடென்று
தன்னைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால்' பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித், தரையைக் காட்டி,
"இங்குவா" என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தாலுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?


( 130 )




( 135 )


தாயன்பு தந்தையன்பு

தாய் இறை தின்ற பின்பு
தன் குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும் குஞ்சு
தாய்வாய்க்கும் வைக்கும் மூக்கைத்;
தாய் அருந்தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல்நிரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!




( 140 )




மயிற்புறா ஆடல்

மயிற்புறா, படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நூலின்
படி,தூக்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங்கொக்கும்;
வால்,தந்த விசிறி ஒக்கும்!

( 145 )




( 150 )


அடைபடும் புறாக்கள்

கூட்டமாய்ப் பறந்து போகும்
சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே
கொத்தடிமைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து
சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஓவியத்தைத்
திரையிட்டு மறைத்தல் போலே!



( 155 )




( 160 )

கிளி
மூக்கு, கண், வால், பசுமை

இலவின்காய் போலும், செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்,
இலகிடு மணல் தக்காளி
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
நிலைஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்
பலர் புகழ்கின்ற பச்சைப்
பசுங்கிளி வாராய்! வாராய்!





( 165 )



கழுத்து வரி, சொக்குப் பச்சை

நீலவான் தன்னைச் சுற்றும்,
நெடிதான வான வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பென்வரி மின் விரிக்கும்!
ஆல், அலரிக் கொழுந்தில்
அல்லியின் இலையில் உன்றன்
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிதுமில்லை!


( 170 )




( 175 )

அழகுச் சரக்கு

கொள்ளாத பொருள்களோடும்,
அழகினில் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை,
தான் கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை இருப்பாம்
அழகெனும் தலைச்சரக்கைக்
கிள்ளிவைத்திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ!




( 180 )




சொன்னதைச் சொல்லும்

இளித்தவாயர்கள், மற்றும்
ஏமாற்றுக்காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்கறிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய்!

( 185 )




( 190 )


ஏற்றிய விளக்கு

கிளிச்செல்வமேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென எரியும் கோவைப்
பழத்தில்உன் மூக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லல்போல் சென்றாய்! ஆலின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!



( 195 )




( 200 )

நிறைந்த ஆட்சி

தென்னைதான் ஊஞ்சல்! விண்தான்
திருவுலா வீதி! வாரித்
தின்னத்தான் பழம்,கொட்டைகள்!
திருநாடு வையம் போலும்!
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
புதுமுடி புனைந்திருப்பாய்!
உன்னைத்தான் காணுகின்றேன்
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!





( 205 )



இருவகைப் பேச்சு

காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறுகின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சுகின்றாய்!
வீட்டிலே தூக்கம் என்பார்
வெளியிலே பிழைப்புக்காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!


( 210 )





( 215 )

மக்களை மகிழ்விக்கும்

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும், மற்ற
வறியவர் தமையும், ஒக்க
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைஞ்சநல் பழத்தை உண்பாய்;
கூழேனும் நன்றே என்பாய்!





( 220 )



கிளிக்குள்ள பெருமை

உனக்கிந்த உலகில் உள்ள
பெருமையை உணர்த்துகின்றேன்;
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
சிறைகொண்டு நாட்டில் வந்து,
மனைதொறும் சென்றே உன்றன்
அழகினை எதிரில் வைப்பான்;
தனக்கான பொருளைச் செல்வர்
தமிழ்க்கீதல் போல ஈவார்!


( 225 )




( 230 )

ஓவியர்க் குதவி

பாவலர் எல்லாம் நாளும்
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நாளும்
கண்,கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவரெல்லாம்
உனைப்போல எழுதி விட்டால்
தேவைக்குப் பணம் கிடைக்கும்
சீர்த்தியும் கிடைக்கும் நன்றே!




( 235 )