பக்கம் எண் :

புகழ் மலர்கள்

வாழ்க பெரியார்

வருக! வருக! வண்டமிழ் நாட்டின்
பெருகுசீர்த் தந்தையே பெரியாரே வருக!
சாதிக் காதரவு தரும்ஓர் ஏட்டினைத்
தீக்கிரை செய்க என்றது தீதென்று
திங்கள் ஆறுசிறையில் இட்டனர்.

அழிந்துகொண்டேவரும் நேருவின் அரசினர்
தீயர் தீர்ப்புக்கு மகிழ்ந்தீர் ஆயினும்,
உங்கள் உயிர்நிகர் அன்புத் தொண்டர்
நாலா யிரவரைச் சிறையில் நசுக்கி
அவரில் எழுவரின் ஆவி குடித்ததை
எண்ணி எண்ணி இருந்த சிறையெலாம்
கண்ணீராக்கிக் கதறினீர், அதனையாம்
நினையாதிருக்க முடியவில்லை,
நினைதொறும் நெஞ்சு பொறுக்கவில்லை.

வருக ஐயா! நன்றே வருக!
நரிவடவர்க்கும் நமக்குமாம் தொடர்பைத்
திருகிப் புய்க்கச் சிலநாள் செல்லும்
வெட்டிப் பிரிக்க வேண்டும் நொடியில்!
இருநூ றாயிரம் பேர்கள் இங்குளோம்
நல்கும் திட்டப் படியே நடப்போம்!
உயிர் பெரிதன்று, பெரிதன்று உடைமை,
வெற்றி பெரிது! மனத்தில்
உற்றது வெல்க! தமிழ் நாடு வாழ்வே!




( 5 )





( 10 )





( 15 )




( 20 )
நான்கண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

ஒற்றைக்கால் மன்றம் கலைக்கழகம்! உள்ளிருந்தேன்
கற்கும் மணிக் கோயில்கள் கண்டு மகிழ் -- வுற்றேன், பின்
அண்ணா மலைப்பல் கலைக்கழகம் அன்றளித்தார்
எண்ணத்தை எண்ணினேன் நான்.

தஞ்செல்வம் எண்ணிய அண்ணலார் தண்ணருள்சேர்
நெஞ்சினில் நாட்டின் நிலைகண்டார் -- பஞ்சம்
அலைக்கா தறிவு பெற அண்ணா மலைப்பல்
கலைக்கழகம் கண்டார் இனிது.

வழுத்தவும் வாழ்த்தவும் வண்டமிழர் நாப்பண்
பழுத்த பழமர மாக -- இழைத்துயர்ந்த
அண்ணா மலையார் அறத்தை நொடிதோறும்
எண்ணாம லாஇருக்கும் நாடு?

அண்ணா மலைப்பல் கலைக்கழகக் கட்டடத்துக்
கெண்ணா யிரந்தொழில் வல்லவர் -- நண்ணிணார்
கண்ணம்மரம் கோடி வண்டி தூய்கடைக்கால் ஒன்றேஅஃது
அண்ணா மலையரசர் அன்பு.

இலைஎன்றார்க் கீதல் அறிவுக்கண்ணான
கலை ஈதலே என்று கண்ட -- நலமனிதர்
அண்ணா மலையரசர் அன்னார் வழிகாட்டும்
புண்ணியமும் பெற்றது நாடு.

அங்கங்குக் கல்வி அறஞ்செய்தார் உண்டெனினும்
திங்கள்விண் மீன்களிடைச் சேராமை -- இங்கற்றப்
பல்கலையை மாணவர்கள் மொண்டுண்ணப் பாற்கடலை
நல்கலுக்கும் ஈடுண்டோ நாடு.

அந்தஅண் ணாமலைக்கும் மக்களின் அன்பரசர்
இந்த அண் ணாமலைக்கும் வேற்றுமை என் -- ?அந்தமலை
நாளைக்கே செத்தால் நலம்செய்யும், இஃதிந்த
வேளைக்கே கல்வி விளக்கு.

அண்ணா மலைக் கழகம் அன்றவர்தாம் நாட்டிலரேல்
இந்நாள் தமிழர் நிலைஎன்னாம் -- திண்மை
நெறியேது? நெஞ்சில் உரமேது? நாட்டார்
அறிவோ உலக்கைக் கொழுந்து.

மனிதரில் நல்ல மனிதர், மதிக்கின்
புனிதரில் மிக்க புனிதர் -- இனிதாக
நல்கலில் நல்கல் அறிவென்றார், அண்ணலார்
பல்கலை மன்றம் படைத்து

இங்கு விடுதலை! இங்கின்பம்! அல்லாமல்
அங்கென்ன என்றே அறிவிப்பார் -- செங்கதிர்
காணவர்! அண்ணா மலைப்பல் கலைக்கழகம்
மாணவர் வாழ்வின் பயன்.

( 25 )





( 30 )





( 35 )





( 40 )






( 45 )





( 50 )





( 55 )





( 60 )



செட்டிநாட்டரசர் முத்தையா

துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி தோன்றியது
மெய்ப்பாக்கி வேந்தர் அண்ணாமலையார் -- இப்பார்க்கு
முத்தையா வைத்தந்தார் மூத்தோரும் என் அறிவின்
சொத்தையா என்னும் படி.

செட்டிநகர் வேந்தர் அறிவுநீர்த் தேக்கத்தை
எட்டி நகராமல் இயற்றினார் -- ஒட்டி
அரசர் முத்தையா அதுகாப்பாரானார்
இருவிழியைக் காக்கிமை போல்.

அண்ணா மலைப்பல் கலைக்கழகம் அன்றளித்த
அண்ணா மலையரசர் ஆசையினைக் -- கண்ணாகக்
கொண்டுநிறை வேற்றிவரும் கோமகன், முத்தையாவின்
தொண்டென்றும் தூண்டா விளக்கு.

தமிழிசைஇ ராசா சர் அண்ணா மலையார்
அமிழ்திவர் ஆயினும் நாட்டில் -- கமழும்
கலைத்தோட்டக்காரர்; கருங்குளவிச் சாதி
அலைத்தோட்ட அஞ்சா தவர்.

வாணிகத்தில் எவ்வெத் துறைகள்? வடித்ததமிழ்
மாணவர்க் கெவ்வெத் துறைகள்? எலாம் -- பேணுகென்றே
அப்பா உரைத்தார், அதனை முத் தையாவோ
முப்பதுபங் காக்கினார் மூத்து

துணைவேந்தர், தூய இணைவேந்து யார்க்கும்
அணைவேந்தி ஆட்சியைக் காக்கத் -- துணையேந்தும்
வில்லுக்கும் வேந்தர், பொருள்வேந்தர், முத்தையா
கல்விக்கும் வேந்தரே காண்.

கடுநிலைமை எத்தனை அத்தனை யுள்ளும்
நடுநிலைமை நல்லுயிரே என்பர்-வடுவற்ற
இன்சொல் உடையார்; எழிலரசர் முத்தையா
வன்சொல் வழங்கலறி யார்,

பயிரும் பயனுழவும் போல் முத்தை யா தம்
உயிரும் தமிழ்மொழியும் ஒன்றென்று -- அயராது
நாளும் உழைப்பவர்; நாம்தமிழர் எல்லாரும்
கேளும் கிளையுமே என்று.

தங்கா தியங்கியிலே தம் துரைத்த னப்பணியாய்
எங்கே பறந்தாலும் இங்கிருப்பார் -- மங்காத
அண்ணா மலைப்பல் கலைக்கழகம் முத்தையா
எண்ணாத நேரமிராது.

செட்டிநாட் டண்ணல் திருமகனார் முத்தையச்
செட்டிநாட் டண்ணல் திறம்வாழ்க -- அட்டியின்றிப்
பல்லாண்டு வாழ்கவே, பன்மக்கள் பேரர்கள்
செல்வம் புகழிற் சிறந்து.
( 65 )





( 70 )





( 75 )





( 80 )






( 85 )





( 90 )





( 95 )





( 100 )



துணைவேந்தர் நாராயணசாமி

சோரா துழைக்கும் துணைவேந்தர்; நம்தமிழர்
நாரா யணசாமி நல்லவர்: பாரினிலே
அண்ணா மலைப்பல் கலைக்கழக அன்னைக்குக்
கண்ணாவார்; கல்விக் கடல்.

அண்ணா மலைப்பல் கலைக்கழகத் துக்கும் அதில்
நண்ணினார்க்கும் நாரா யணசாமி-வண்டமிழக்கும்
பண்டைக்குப் பண்டைத் தமிழர்க்கும் ஆற்றுவதோர்
தொண்டுக்கும் வாய்த்த சுடர்.

பெரிய நிறுவனங்கள் மன்றங்கள் பேணி
அரிய சொல் செய்த ஆற்றல்-தெரியுங்கால்
நாராயண சாமிக்கு அண்ணா மலைக்கழகம்
ஓர்ஏர் ஒருநாள் உழவு!

அண்ணா மலைப்பல் கலைக்கழக நல்லாட்சி
பண்ணினார் பல்லோர் எனினுமே-அண்ணலார்
நாரா யணசாமி நல்லுளத்தின் அன்பாற்றல்
பாரறிந்த பச்சை விளக்கு.

அண்ணா மலைக்கழகம் ஆளும் நாராயணனார்
எண்ணமும் ஆற்றலும் ஈடிலவாம்-எண்ணத்தில்
பள்ளம் படுகுழி இல்லை; பணியாற்றும்
உள்ளம் உறங்காப் புலி.

சினந்தாரை அன்பால் திருத்துவார்: இன்சொல்
மனத்தூய்மை வாய்ந்தவர்; கோளால் -- தினைபணையாம்
காட்டுக்கும் காதுகொடார்; நாராயணசாமி
நாட்டுக்கும் நல்ல துணை.

வகுப்புப் பெறவந்த மாணவரிற் சில்லோர்
புகப்பெற்றார் மற்றுப் புகாத -- மிகப்பலரின்
கண்ணூரைக் கண்டழுத நாராயணசாமி
கண்ணீரும் காவிரி ஆறு.

கலைத்துறைவ குப்புகள் காணின் சிலவே
புலவர் திருக்கூட்டம் போதா-நிலைபெருக்கல்
எந்நாளோ என்றழுத நாராயணசாமி
இந்நாளை எண்ணிநகைத் தார்.

அல்லலிலா தண்ணா மலைப்பல் கலைக்கழகம்
சில்லாண்டு காத்த திறம்போலப்-பல்லாண்டு
காக்க நாராயணனார் என்பது நம் கருத்து.
நோக்கஇதை நூறுமுறை வேந்து.

துணைவேந்தர் நாராயணசாமி தொண்டே
இணையற்ற தாகி இனியும்-அணையா
விளக்காக! அண்ணா மலைப்பல் கலையின்
ஒளிக்காக வாழ்க உயர்ந்து!
( 105 )





( 110 )





( 115 )





( 120 )






( 125 )





( 130 )





( 135 )





( 140 )




பதிவாளர் மீனாட்சி சுந்தரனார்

ஆயிரம்பேர் எண்ண அலைகட் கிடையிலும்
தாயினும் அன்பு தவழ்மொழியே-வாய் உருக்கும்
பண்பாளர் பதிவாளர் மீனாட்சி சுந்தரனார்
அண்ணா மலைஅடைந்த பேறு.

எண்ணம், இயக்கம், செயல் முடிபெல் லாம் பதிவு
பண்ணும் பறந்த துறைத்தலைவர்,-நண்பார்ந்த
மீனாட்சி சுந்தரனார் கீடு விளம்பில் அந்த
மீனாட்சி சுந்தரனார் தாம்.

அண்ணா மலைப்பல் கலைக்கழக ஆக்கத்திற்கு
உண்ணாதும் சற்றெனும் ஓய்வுபெற-எண்ணாதும்
முப்போது மேஉழைக்கும் மீனாட்சி சுந்தரத்தை
எப்போதும் ஏந்தும் உலகு.

தமிழ் மூன்றும், ஆங்கிலம் ஒன்றும், தமிழர்
நமர் என்னும் நண்பும் அவர் உள்ளம்!-கமழும்
பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் பாரில்
மதியாளர் மொய்க்கும் மலர்.

தலைவர் வலக்கை! தமிழ் படை வீடு!
கலைஞர்க்கும் மாணவர்க்கும் காவல்-புலன்களெலாம்
மெய்த்த பதிவாளர் மீனாட்சி சுந்தரனார்
பத்தரைமாற் றுப்பசும் பொன்.

எந்நாள் பதிவாள ராகி இவண்வந்தார்
அந்நாள் தொடங்கிற்றாம் அந்தமிழர்-பொன்னாள்
பதிவாளர் மீனாட்சி சுந்தரனார் பாரோர்க்கு
உதவிசெயும் உள்ளத் தவர்.

அறத்தாற்றில் செல்லும் அடியைப் பெயர்த்துப்
புறத்தாற்றில் வையாப் புனிதர்-இறப்பினும்
அண்ணா மலைப்பல் கலைக்கழக அன்னைதான்
எண்ணாநாள் இல்லாத நாள்.

வாழவைக்கும் அண்ணா மலைப்பல் கலைக்கழகம்
வாழவைக்க வந்த மருந்தனையார்-வாழவைக்கும்
செந்தமிழர் செல்வர் பதிவாளர் மீனாட்சி
சுந்தரனார் அன்பின் சுரப்பு.

அண்ணா மலையரசர் பேர் வாழ்க! அன்பளிப்பாம்
அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - நண்ணுகலைத்
தேனாக்கும் ஆசிரியன் மார் வாழ்க! வாழ்கவே!
மீனாட்சி சுந்தர னார்!

என்றும் மனைமக்கள் சுற்றத்தி னோடுதாம்
நன்று புகழ்ஏந்தி நானிலத்தின் - முன்தோன்றும்
செந்தமிழ்க் குத் தொண்டு செய்து சீர் ஆர்த்து மீனாட்சி
சுந்தரனார் வாழ்கநலம் தோய்ந்து!

( 145 )





( 150 )





( 155 )





( 160 )






( 165 )





( 170 )





( 175 )





( 180 )
பேராசிரியர். லெ. ப. கரு. இராமநாதர்

பேரா சிரியர் இராம நா தஞ்செட்டி
யார் என்றால் யார்என்று கேட்பார்யார்? -- பாரினிலே
பூவென்றால் தாமரைதான் பொன்னென்றால் தங்கம்தானே
யாவர் லெ. ப, கருவென்னார்?

தமிழாற் பிறந்து தமிழால் வளர்ந்து
தமிழாற் சிறந்து தமிழர் - தமிழ்ப்புலமை
நண்ணீரோ என்னும் இராமநாதன் தொண்டே
அண்ணா மலைக்கு விளக்கு.

மாற்றவர் நெஞ்ச வயலும், தமிழ்விளைத்தல்
காற்றும் கடும்புனலும் சாய்க்காமே - ஆற்றலால்
என் புரிந்தும் காக்கும் இயல்புடையார், செந்தமிழ்
அன்பர் இராமநாதர்.

குரங்கிருக்கும் குள்ள நரியிருக்கும் சான்றோர்
அரங்கியிருக்கும் மாணவர் ஆர்க்கும் - இரங்கியருள்
பேராசிரியர் லெ ப. கரு. அண்ணாமலைக்கே
ஓராசிரியர்; உயிர்!

கழுக்கம்பம் ஏற்றப் படினும் - கடுகும்
ஒழுக்கம் பிழையா ஒருத்தர் - கொழுக்கத்
தமிழ் மேய்க்கும் சான்றோர் இராமநா தர்தாம்
தமக்கன்று; வாழ்வு தமிழர்க்கு

( 185 )





( 190 )





( 195 )





( 200 )




புலவர் வெள்ளை வாரணனார்

மல்கு புகழ்வெள்ளை வாராணனார் மாணவர்க்கு
நல்கு தமிழ்எல்லாம் நல்லதமிழ்! -- பல்குசீர்
அண்ணா மலையில் அயலார் நெறிதழுவ
எண்ணாத் தமிழ்ப்புலவர் ஏறு.

இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆன
வலக்கணும் மற்றது மாகத் -- துலக்கமுறும்
வாரணம், வஞ்சகர்க்கே அஞ்சாமை கொண்டதுதான்
காரணம் கண்ட புகழ்க்கு.

தந்தமிழ்த் தொண்டுண்டு தாமுண்டென் றெண்ணாதார்
செந்தமிழ் மேன்மை திரிக்கின்ற -- எந்த
நரிக்கும் புலிவெள்ளை வாரணனார் நன்கு
விரிக்கும் விரிவுரை வேந்து.

அண்ணா மலைப்பல் கலைக்கழகத் தொண்டாற்ற
நண்ணிய நாள்முதல் இன்று மட்டும் -- கண்ணான
மாணவர்தம் நெஞ்சத்தை, நம் வெள்ளை வாரணனார்
கோணவைத்தார் என்பதுபொய்க் கூற்று.

எப்பேடு பண்டைத் தமிழை இழித்துரைக்கத்
தப்பேடு காட்டினும் தாக்கும் அவர் -- செப்பேடு!
மாசறுக்கும் நம்புலவர் அண்ணா மலையென்னும்
பாசறைக்கு யானைப் படை.

யார்எனினும் நேர்வருக என்தமிழே வையத்தின்
காரணம் என்றெடுத்துக்காட்டென்பால் -- வாரணத்தின்
தெம்புண்டு! வாயாடி செய்வர்க்கு வாரணத்தின்
கொம்புண்டு குத்தும்ஒரே குத்து,

இவர் போன்றார் எழெட்டுப் பேரிருந்தால் என்றன்
கவலை ஒழியுமென்று காட்டி -- நுவலும்
அவள்தானே நம்தமிழ்த்தாய்! அன்பால் குறிக்கும்
அவர்தாமே வெள்ளானை யார்!

சீரகம் பூண்டு சிறுகடுகும் இக்காயம்
தீர்வெந் தயங்கோம் செந்தமிழ்க்கே -- பார்என்று
நெஞ்சுக்கு நீயு மிளகென்னும் வாரணம்
மஞ்சட்கண் ணுக்குமஞ் சள்,

இருக்கும் மனையார் இருப்பார்) இளையர்
இருப்பார், எனில் உலகம் வானும் -- இருக்குமட்டும்!
வல்வெள்ளை வாரணனார் நீடுழி வாழ்கவே
செல்வச் செந்தமிழ் போல்.

மண்ணும் மலையாகும் வாழ்வார்க் குணர்வளிக்கும்
அண்ணா மலைப்பல் கலைக்கழகம் -- எந்நாளும்
வாழுமடா மாணவர்க் கின்னும் பெரிதாகிச்
சூழுமடா தூய நலம்.

( 205 )





( 210 )





( 215 )





( 220 )






( 225 )





( 230 )





( 235 )





( 240 )


ஞா. தேவநேயப் பாவாணர்

செந்தமிழ்ச் செல்வச் சிறப்பும். திருநாட்டில்
வந்தே றிகள் அடிக்கும் வாய்ப்பறையும் -- இந்தாபார்
என்னும்பா வாணர், எவன் எவ்விடர் செயினும்
இன்னும் பார் என்னுமடல் ஏறு.

ஆதி மொழிஎன் அருமைத் தமிழ் என்றே
ஓதி உலகுக் குணர்த்திடவே -- தீதின்றி
ஆவன செய்பே ரறிஞர் அண் ணாமலையின்
தேவநேயப் பாவாணர்.

தமிழில் தமிழ்சார்ந்த கன்னடத் தெலுங்கில்
அமைகே ரளந்துளுவில். ஆர்வம் -- கமழ்கின்ற
ஆங்கிலத்தில் ஏனை அயல்மொழியில் வல்லுநல் எப்
பாங்கிலுளார் பாவணர் போல்?

வடமொழியும் இந்தியும் மற்றும் வடக்கிற்
படுமொழிகள் என்ற பலவும் -- தடவியே
அந்தமிழே ஆதிஎன் னும்தேவ நேயர் தாம்
எந்தமிழா எல்லார்க்கும் வேந்து,

என்தமிழிற் கொஞ்சம் இருந்த தெலுங் கிற்கொஞ்சம்
பின் ஆங்கிலத்திலே பீஏயும் -- நன்குடையேன்
என்று மொழிவார்போல் இல்லைநம் பாவாணர்
பன்மொழிவல் லார் இந்தப் பார்க்கு.

பன்மொழியில் வல்லரென்று பைந்தமிழர் நாவினிலே
இன்னும் சிலபேர் இருக்கின்றார் -- அன்னவர்கள்
நாட்டுக்குச் செய்ததென்ன? நம்தமிழை மாற்றலர்க்குக்
காட்டிக் கொடும் கயவு.

வீணாள்ப டாதுதமிழ் மேன்மையினைக் காட்டுவதில்
வாணாளை ஆக்கும்பா வாணர்க்கு -- நாணாமல்
அல்லல் விளைக்கும் அயலார்க் கடியார்கள்
இல்லாம லில்லை இவண்,

நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா? -- பாவிகளே
தேவநே யார்க்குச் செயுத்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்.

திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று
மெய்க்குழைக்கும் தொண்டர்மனம் வேகவே வைக்கும்
தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன்
நடுத்தெருவில் நாறும் பிணம்.
புண்ணானால் நெஞ்சம் தமிழுலகு பொன்றுமென்று
அண்ணா மலைப்பல் கலைக்கழகம் -- இந்நாளில்
தேவநே யர்க்குத் திருத்தொண்டு செய்ததென்க
யாவரும் ஏத்தும்படி.

வாழ்ந்தாலே நாம்வாழ்வோம் வாழாளேல் நாம் வாழோம்.
தாழ்ந்த தமிழகத்தில் செந்தமிழ்த்தாய் ஆழ்ந்தாழ்த்து
பாராது பாவாணர்க் கின்னல் புரிவதனால்
வாராது வாழ்விற் புகழ்!

எந்தமிழ் மேலென்று உண்மை எடுத்துரைப்போன்
செந்தமிழன்! செந்நெற் பயன்மழை! தந்தமிழின்
கீழறுப்போன் கீழோன்! தேவநே யர்வாழ்க!
வாழிய செந்தமிழ் மாண்பு.

( 245 )





( 250 )





( 255 )





( 260 )






( 265 )





( 270 )





( 275 )





( 280 )






( 285 )





( 290 )
இசையரசு தண்டபாணி தேசிகர்

அண்ணா மலைப்பல் கலைக்கழக அன்னைக்கே
எண்ணில் துறையில் இசைத்துறையே -- கண்ணாகும்!
ஆசிரியர், நற்றலைவர் ஆம் தண்ட பாணி எனும்
தேசிகர் தீந்தமிழ் ஊற்று,

இசைத்துறை யார் காப்பார் இவரல்லார் என்றே
இசைத்துறை யார் ஏனியம்ப மாட்டார்? -- இசைத் துறையும்
வாய்ப்பாட்டுக் காரரெலாம் தேசிகர் வாய்மலர்ந்தால்
போய்ப்பாட்டுக் கேட்டுவரும் போது.

தமிழர் தமிழால் தமிழ் பாடல் வேறு
தமிழரலார் தாம்பாடல் வேறு -- நமக்கான
தேசிகர் பாட்டுச் செவிக்கமுது! மற்றவர்சொல்
ஊசி உறுத்தல் செவிக்கு.

சொல்லின் எழுத்தொன்று சோராமல் பண்எழுப்பும்
நல்ல முகம் நலியாமல் -- தொல்லையின்றித்
தோலை யுரித்துச் சுவையளிக்கும் தேசிகரின்
வேலை வியப்பைத் தரும்.

அண்ணா மலையரசர் அன்னை தமிழ்மேன்மை
எண்ணாதார் தாமும் இனிமேலே -- பண்ணார்
தமிழிசையே பாடுகென்றார், தேசிகர் தந்த
தமிழிசையால் உள்ளம் தளிர்த்து.

வந்தேறி கட்கும் இசையின் வகைபயிற்றும்
செந்தமிழ்ப் பண்ணின் திறமறிந்த -- ஐந்தாறு
பேருக்கும் தேசிகரும் பேராசிரியரெனல்
பாருக் கறைந்த பறை.

கருநாடக இசைக்குத் தென்பாங்கே ஆதி
இரு நாடும் எந்தமிழ் நாடே -- தெரிந்துகொள்க
என்ற இசைப்புலவர் தம்மில் நம் தேசிகரும்
வென்ற இசைப்புலவர் வேந்து.

இடரில் தமிழிசைஏ தென்ற புலியைப்
பிடர்சிலிர்த்துப் பாய்ந்து பெரிய -- குருடர் கிழித்த
சிங்கங்கள் தம்மில் ஒரு சிங்கம் நம் தேசிகர்
எங்கும் இசைபொழியும் வான்.

படிமிசை ஓர் அண்ணா மலைக்கழக அன்னை
மடிமிசை யேந்தி மகிழும் -- நெடிதிசை
சேர்தண்ட பாணிஎனும் தேசிகர் வாழ்க
சீர்பெருக செந்தமிழ்த் தாய்.

அண்ணா மலையரசர் பேர் வாழ்க அன்னாரின்
கண்ணான முத்தையக் காவலனார் -- எந்நாளும்
வாழ்கவே! அண்ணா மலைப்பல் கலைக்கழகம்
வாழ்கவே வண்தமிழ் நாடு!



( 295 )





( 300 )






( 305 )





( 310 )





( 315 )





( 320 )






( 325 )





( 330 )

மருத்துவப் புலவர் நாதன்

வாழும்அண் ணாமலைப் பல்கலைக் கழகம்
சூழும் மாணவர் அலுவலர் பிணிகள்
போக்க மருத்துவ மனையும் ஆக்கி
நாதன் எனும் ஒரு நண்மருத் துவரையும்
தேடி அமைத்தது, பிணிப்பேய் திடுக்கிட!

நாதனார் மேனாட்டு மருத்துவ நற்கடல்
துறைகள் பலவும் தோய்ந்த நுண் கலைஞர்.
ஒருபெரும் குடித்தனம் அவருக் குண்டு,
மக்கள் உள்ளனர், உறவினர் வாழ்ந்தனர்,
ஆயினும் அன்னவர் உலகுக்கு வாழ்பவர்.

பெரிய தான மருத்துவ மனையில்
ஒருநல் லழகிய உயர்ந்த மனிதரின்
இருகைநோ யாளிக்கு மருந்துள் அடக்கிய

ஊசிஏற்றிக் கொண்டே இருக்கும்.
இருவிழி எண்ணிலாது வரும்பிணி யாளரை
வருகென மகிழ்ந்து வரவேற்றிருக்கும்.
ஒரு நாள் ஒரு மகள் மண்மருத் துவத்தில்
நாதனார்க்கேஇணை நாதனார் என்றனள்.
அவளை நீயார் என்றேன். அதற்கவள்
நான்தான் உலகம் என்று நவின்றாள்.

அம்மா என்று மகளிர் கைதொட்டு
நன்மருந் தளிக்கும் பொன்னான தந்தையை
நாதனார் உளத்தில் நன்கு காணலாம்.
பச்சை நீர் ஓட்டம் பார்ப்பவர் போல
நச்சினார்க் கினியராய் நோயினை நன்காய்ந்து
இறந்தவன் பிழைத்தான் எனச்செயும் மருத்துவப்
புலவர் மீன்களின் நடுத்துலங்கும் நிலவு!
நாதனார் உறவொடு வாழ்க
ஈதவர் புகழா வானமா எனவே!



( 335 )





( 340 )





( 345 )





( 350 )





( 355 )




( 360 )