பக்கம் எண் :

புகழ் மலர்கள்

தமிழ்ப் பேராசிரியர்

சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் வாழ்த்து!

சதாசிவப் பண்டாரத்தார்
இதோ இருக்கின்றார் எங்கள் தமிழைக் காக்க
எதோ பார்ப்பான்? எதோ தருமைத்
தம்பிரான்? மீனாக்கி எனத் தமிழ்த்தாய்
அதே நினைப்பாய் அதே மகிழ்வாய்
இருக்கையிலே ஐயையோ இறந்தார் என்றால்
இதே கணத்தில் தமிழ்த் தாயின்
பகைவர் இன்னும் இரண்டுபடி ஏறுவாரே!

உருப்படியா வரலாற்றை
உருப்படச் செய்தார்! ஈன்ற தமிழ்த்தாய் கோயிற்
றிருப்படியில் தொட்டதாள்
எழுது கோல் கடைசி வரை தீர்ந்த துண்டா?
விருப்படியில் மிகும் ஆற்றல்
போயிற்றே பகைவர்தாம் தரவிருந்த
செருப்படியும் போயிற்றே
சிரிப்பெல்லாம் தமிழ்மணக்கும் திறம் போயிற்றே!

மொண்டாரா மாணவர்கள்
பருகுவதோர் முத்தமிழின் பொய்கை! யாவும்
கொண்டாரும் கொள விரும்பும்
அருங்குணங்கள், தமிழ்ப்பற்றுக் கொண்ட மேலோர்
அண்டாரும் அண்டும் வகை
அன்பினொரு குழந்தை வர இனிது பேசும்
பண்டாரத்தார் போன்றார்
பண்டில்லை, இன்றில்லை இனியும் அஃதே.

செந்தமிழ்ப் பேராசிரியர்;
வரலாற்றின் ஆய்வாளர்; புலவர் சென்றே
எந்த இடம் கேட்டாலும்
அந்த இடம் இந்த இடம் என்று காட்டும்
முத்து பேர் இலக்கியத்து
முழங்கு கடல் ஒழுக்கத்தின் எடுத்துக் காட்டு!
நத்து தமிழ்ப் புலவர் குழு
மணிவிளக்குச் சதாசிவனார் மாண்டார் என்னே!

மறை மலைலயப் பறிகொடுத்தும்
மணவழகைப் பறிகொடுத்தும் வருந்தும் நாளில்
துறைபலவும் ஆய்ந்த தமிழ்ச்
சோமசுந்தரத்தையும் நாம் பறிகொடுத்தோம்!
இறைவர் அவர் இருந்த இடத்து
இவர் இருந்தார் என்றுநாம் எண்ணும் போது
சிறியதொரு சாவு வந்து
பெரியசதா சிவனாரைத் தீர்த்த தேயோ!

கற்றில்லார், ஆங்கிலத்தைக்
கற்றதனால் கற்றாராய்த் தமிழன்னைக்கு
மற்றில்லா இடர் விளைத்தும்
மாற்றலரின் மொழிக் கடிமை யுற்றும் தமிழை
விற்று இலார், தமை வளர்த்தும்
வீறாப்புக் காட்டுகையில் செந்தமிழ்மேல் பற்றின்றி ஒரு பற்றும்
பற்றாத சதாசிவத்தார் பறந்தாரேயோ!

பண்பாட்டுத் தமிழர்க்கு
நான்விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப்
பண்டாரத் தார்க்கும்; ஒரு
மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள்
கொண்டாடும் சோமசுந்
தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக்,
கண்டார்களிக்கும் வகை
உருவக்கல் நாட்டுவது கடமையாகும்.

துய்ப்புக்கும் அரசினரின்
தொடர்புக்கும் தமிழர் நலம் துடைப்பதற்கும்
எய்ப்புக்கும் காத்திருக்கும்
இனத்துக்கும் பாடுபடும் பார்ப்பனர் தம்
பொய்ப்புகழை மெய்ப்புகழ்போல்
ஆக்குகையில் பண்டாரத்தார் போன்றாரின்
மெய்ப்புகழைப் பொய்ப்புகழாய்ப்
பகைவரெலாம் விளம்பும்வகை செய்தல் நன்றா?

சீனர்களால் நாட்டுக்குத்
தீமைஎன எதிர்க்கின்றோம்! நன்றே! ஆனால்
ஊனிறையும் தமிழ்க்குருதி
அற்றார்போல் தமிழ்நலத்தை ஒழித்து நிற்கும்
கூனர்களின் தீமையினை
எதிர்ப்பதுவும் முதல்வேலை என்று கொண்டால்
வானநிகர் அவர் புகழே
வாழ்கென்று வாழ்த்துவது மறக்கொன்னாதே!

தாயினையும் புணர்ந்தாற்குச்
சிவனடியைச் சிவனே வந்தளித்தான் என்றால்
தூயதெனச் சிவனடியைச்
சொல்லுவதும் சரியில்லை! பண்டாரத்தார்
போயடைந்தார் சிவபெருமான்
திருவடியை என்றுரைத்தார்; பொய்யுரைத்தார்!
தீயர்களில் ஓர் ஆளும்
தீண்டாத புகழுலகில் பண்டாரத்தார்
ஓயாது தமிழ்ப்பொருளே
நமக்கெல்லாம் நினைவூட்டி உள்ளார் அன்றோ?




( 5 )





( 10 )




( 15 )




( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )
பசுமலைத் தமிழன்

சோமசுந்தர பாரதி

பொய்ப்பாட்டிய லைவையா புரிபோன்றோர்
   விரைவாகப் புரியுங்காலை
மெய்ப்பாட்டியலைத் தொல்காப் பயத்தின்நல்
   புத்துரையால் மிகவிளக்கிக்
கைகாட்டினான் தென்மொழிக்கும் இனத்திற்கும்
   பெருமிதத்தின் கனல்உணர்வில்
நெய்யூட்டினான் சோமசுந் தரன்என்னும்
   பைந்தமிழ நேர்மை நெஞ்சன்.

ஆரிய வாயிலிலே வீழ்ந்திருந்த
   அந்தமிழை அழியாவண்ணம்
' மாரிவாயில்' என்றொரு நூல் மதுத்தமிழால்
   காளிதாசன் மாழ்கும் வண்ணம்
சீரியநூல் தந்தானைத் தனித்தமிழின்
   செம்மையினைத் திராவிடர்க்கு
வீரியநூல் கூரிய நூல் ஆரியமே
   வெட்கமுற விளக்கினானே.

இந்தியநாட்டு உரிமைக்கும் விடுதலைக்கும்
   ஈடிணையற்று எவர்க்கும் மேலாய்ச்
செந்தமிழன் வ. உ. சி செலுத்தியநற்
   கப்பற்குச் செயலாளன் காண்
வெந்தணலாய் வெள்ளைநாய் எதிர்ப்புக்கும்
   அஞ்சாத வேங்கை என்றன்
சிந்தைக்கும் செயலுக்கும் தெம்பூட்டும்
   செம்மாந்த சிங்கம் போன்றோன் ;

பார்ப்பனரின் புகழ்க்கடிமை ஆகாமல்
   பகைக்குன்றைப் பாமலைத் தேர்
ஆர்ப்புறவே ஓட்டினவன் பழந்தமிழை,
   பண்பாட்டை அழிப்பதென்றே
வேர்ப்புறத்தில் ஆராய்ச்சி எனும்பேரால்
   பொய்யுரைகள் வெளியிட்டாரைப்
போர்க்களத்தில் புறங்காணச் செய்தனன்எம்
   அகம்புறத்தைப் புதுக்கினோனே.

எட்டையபுரத்துதித்த முத்தமிழ்ப்
   பாரதியார் இருவர் தாமும் --
அட்டைகளாய் இருந்து தமிழ் அழித்தார்க்குச்
   சுடுநெருப்பாய் ஆனார். பார்ப்பின்
முட்டையெலாம் மலைமோதி உடைந்தாற்போல்
   மூக்குடைந்தார் குழப்பிப் போனார்;
குட்டைமன நரித்தனங்கள் பலிக்கவில்லை
   வெற்றியெலாம் கோளரிக்கே.

சொல்வேறு செயல்வேறு படாத்தமிழன்
   இந்திப்பேய்த் துறத்தினோன் காண்.
கொல்வேறு; சமயமெனும் குட்டையினில்    வீழாத குணத்தின் ஆறு
வல்லூறு போல்நெஞ்சம். கூர் பார்வை
   தன்மானம் வாய்ந்த சான்றோன்
பன்னூறு காலமும் பசுமலைநீர்
   பாரெல்லாம் பாய்க வாழ்க!


( 85 )




( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )
திரு. வி. க

              60 -- ஆம் ஆண்டு நிறைவு வாழ்த்து

மலிஇருபத்தைந் தாண்டாய்
      வண்டமிழ் நாட்டிலேநம்
கலியாண சுந்தரர்தம்
      தொண்டுகள் கண்டுவந்தேன்.
எலி, எனப் புதல்வர், வீட்டில்
      இருக்கையில் சுந்தரர் தாம்
புலிஎன வெளியிற் போந்தார்
      முதல்முதல் அரசியற்கே!

தமிழறி விலாதார் செய்தித்
      தாள்எழு திடுவ தற்கும்,
தமிழுளார் எழுது தற்கும்
      வேற்றுமை இருந்த தன்மை
தமிழ்நாடு கண்ட தந்நாள்;
      தமிழ்காணார் மீன்கடைக்குள்
தமிழறி கலியாணத்தார்
      தமிழேடு முல்லைக் காடே!

துடித்திடு தேச பக்தன்
      செய்தித்தாள் தொடக்கம் செய்தார்;
பிடித்தன ஓட்டம் மற்றைப்
      பெரும்பெரும் தாள்கள் எல்லாம்
படுத்தநம் செந்தமிழ்த்தாய்
       படிசிலம் படிபெயர்த்தே
எடுத்ததை அந்நாள் கண்டேன்;
      எழில்கூத்திந் நாள்காண் கின்றேன்.

திரு. வி. கலி யாணசுந் தரனாரின்
      செந்தமிழ்க் கட்டுரைகள் என்னும்
அருவிகளில் ஆடியநல் லறிஞர்களும்
      அறிவுபெற்றார், இளைய சிட்டுக்
குருவிகளும் தமிழ்க்காதல் தலைக்கேறிக்
      குதித்தனவே! வடசொல் லின்கைக்
கருவிகளும் தனித்தமிழின் கனிச்சுவையைக்
      கண்டுகளித் தனவே யன்றோ?

உணர்வெழுப்ப மெய்ப்பாடும் உடனிசையும்
      மொழிச்சிறப்பும் ஒன்றாய்த் தோன்றிக்
கணகணெனக் கவிதை ஒலி செயும்என்பார்;
      அஃதேபோல் மொழிபெயர்ப்பும்;
துணை நூலும் இல்லாமே தனிநூல்கள்
      கட்டுரைகள், புணர்ப்பார் தம்மில்
மணவழகர் தமக்குநிகர் மணவழக
      ரே என்பேன் இந் நூற்றாண்டில்.
காய்ச்சிவைத்த பசும்பாலில் கழுநீரைக்
      கலந்ததுபோல் நன்றில் தீதைப்
பாய்ச்சிவைத்துப் பிழைப்பாரும், பாழ்பட்ட
      தமிழர்களும் வாழும் நாட்டில்,
பேச்சுவைத்த தோடுகனி பிழிந்து வைத்துச்
      சுந்தரவாய் பேச வைத்து
மூச்சுவைத்துத் தமிழர்களை முடுக்கிய இத்
      தலைமுறையை வாழ்த்துகின்றேன்.

புதுவையிலே கலியாண சுந்தரனார்
      ஆற்றிய சொற்பொழிவில், தூய
மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு
      விருந்தாக்கி மயக்குதல்போல்
பொதுவினர்க்குச் சிலப்பதிகாரச் சுவையை
      நடையழகைப் புகலும் போதில்
இதுவையா பேச்சென்பேன்; பாரதியார்
      கைகொட்டி எழுவார், வீழ்வார்.

இத்துயர்கொள் தமிழ்நாட்டில் எனை மகிழச்
      செய்தனவாம் இருப்பவற்றுள்
முத்தமிழ்வாய், உழைப்பாளிக் குழைக்குந்தோள்,
      அன்புள்ளம், தமிழ் எழுத்தை
வித்தியுயர் விளைக்கும் விரல், தமிழருக்கோர்
      தீமைஎனில் விரைந்தோடுங் கால்,
இத்தனைகொள் கலியாணசுந்தரனார்
      என்றபொதுச் சொத்தும் ஒன்றே

கலியாண சுந்தரனார் இருமுப்பா
      னாண்டுவிழாக் கண்டார்; ஆம் ஆம்
மலிஅறுபான் ஆண்டாகி திரும்பத்தன்
      மகனுக்கோர் முத்தம் ஈந்தாள்!
பொலிவான நிலாக்காட்டிப் புதுவாழ்வுச்
      சோறூட்டிப் பொன்னே என்று
மெலிஇதழால் அவள், திரும்பத் திரும்பநனி
      முத்தமிட விரும்புகின்றாள்.

வாழியவே கலியாண சுந்தரனார்
      உறவினொடு மிகப்பல்லாண்டே!
சூழியவே தோளுறுதி, பெருஞ்செல்வம்;
      கடல்போன்ற நெடும்புகழ்தான்!
வாழியவே இனியதமிழ்! தமிழர்: தமிழ்
      நாடு தமிழ்ர்க்கே ஆகி
வாழியவே எல்லாரும் எத்துறையும்
      நிகர்எய்தி வையம் நன்றே!








( 135 )




( 140 )




( 145 )





( 150 )





( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )





( 180 )




( 185 )





( 190 )





( 195 )




( 200 )





( 205 )


பெரியார்

அவர்தாம் பெரியார் -- பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்       
                          
   (அவர் தாம்)

மக்கள் நெஞ்சில் மலிவுப்பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடியநெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு! (அவர் தாம்)

தில்லி எலிக்கு வான்பருந்து
தெற்குத் தினவின் படைமருந்து
கல்லாருக்கும் கலைவிருந்து
கற்றவர்க்கும் வண்ணச் சிந்து!        (அவர் தாம்)

சுரண்டுகின்ற வடக்கருக்குச்
சூள் அறுக்கும் பனங்கருக்கு!
மருண்டுவாழும் தமழருக்கு
வாழவைக்கும் அருட்பெருக்கு!       
(அவர் தாம்)

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார் பில்விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!  
    (அவல் தாம்)

தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும்தலை மேடை
நமக்குத் தாண்டி வந்த வாட்படை
நமைஅவரின் போருக்கு ஒப்படை!    
(அவர் தாம்)

( 210 )






( 215 )





( 220 )








( 225 )




( 230 )
ஓமந்தூரார் -- காமராசர்

முதல் அமைச்சர் ஓமந்தூரார்க்கு ;
நம் பெருமான் காந்தியினைக் கொலைபுரிந்த
கோட்சேக்கள் நாடெங்கும் இருக்கின்றார்கள்!
வம்பகன்ற நம்மருமைத் திராவிடத்தும்
மறைந்தே வாழ்கின்றார்கள்; அவர்கள் நோக்கம்
உம்போன்ற திராவிடரின் மேன்மை தன்னை
ஒழிப்பது தான், விழிப்பாக இருத்தல் வேண்டும்!
எம்பெரிய அண்ணலே அஞ்சவேண்டா.
இருக்கின்றோம் உங்களுடன் பிறந்தோம் நாங்கள்!

ஓமந்தூர்த் திராவிடனா முதல் அமைச்சன்
ஒழித்துவிட மாட்டோமா எனநினைக்கும்
தீ மாந்தர் இருக்கின்றார், இது உமக்குத்
தெரியாதா? தெரிந்திருக்கும் மிக நன்றாக!
யாமுமக்குச் சொல்வதுதான் என்னவென்றால்
இப்பெரிய திராவிடத்தில் உம்மைக் கொல்லப்
பாழ்மக்கள் கோட்சேக்கள் தூக்கும் கையைப்
பல்கோடித் திராவிடர்கை முறித்துப் போடும்!

தென்னாப் பிரிக்காவில் அண்ணல் காந்தி
திருத்தொண்டு வெள்ளையர்க்கு வேம்பாயிற்று!
சொன்னாலும் உளம்பதறும் காந்தி தன்னைச்
சுட்டான் ஓர்கோட்சே அக்குண்டு தன்னைத்
தென்னாட்டுத் தமிழச்சி மார்பில் ஏற்றாள்;
செத்தொழிந்தாள்; காந்தியினை உலகுக் கீந்தாள்
இன்னசெயல் அறிவீரோ? கோட்சே கூட்டம்
இவ்விடத்தில் வாலவிழ்த்தால் வேரறுப்போம்!

எங்கேஎன்றால் நடுங்கும் கோட்சே கூட்டம்
இதுநமக்குத் தெரிந்தது தான், எனினும் நீங்கள்
உங்களருஞ் செல்வாக்கை இந்த நாட்டின்
உயர்வுக்கும் நன்மைக்கும் செலவழிப்பீர்!
அங்கங்கே கோட்சேக்கள்! எதிலும் அன்னார்!
அடக்கிடுக அவர்க்குள்ள அதிகாரத்தை!
கொங்கு மலர்ச் சோலைசேர் திராவிடத்தில்
கோட்சேக்கள் அதிகாரம் குறைதல் வேண்டும்.

கும்பிட்டான் துப்பாக்கிதனை எடுத்தான்
கோட்சேயை அங்கிருந்தோர் மறித்த துண்டோ?
எம்அண்ணால் ஓமந்தூர் ராமசாமி,
இதை நினைத்தால் சிரிப்பு வரும், அண்ணல் காந்தி
இம் மண்ணில் சாய்ந்ததனை எண்ணும் போதே
இனந்துடிக்கும் இனத்தாரின் மனம்துடிக்கும்!
நம்பிடுக, வடநாட்டான் தன்மை வேறு;
நாம் அவரின் ஒட்டுறவை அறுத்தல் வேண்டும்.



( 235 )



( 240 )





( 245 )





( 250 )




( 250 )





( 255 )




( 260 )





( 265 )
உயர் நிலைக் காமராசர்

பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப்
பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில்
கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர்
கடுகளவும் அஞ்சாதே கோட்சே கூட்டம்
திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும்
வெளிப்புரத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த
விரிவுதனை நீர் அறிவீர் அஞ்சவேண்டா ;

கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்
ஏழைக்கும் செல்வனுக்கும் பன்மதத்தார்
எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி
வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல்
மார்பு பிளந்தார்; காமராசரே, எம்
தோழரே! திராவிடரே உமது மேன்மை
தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்!
ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத்
ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!

( 270 )




( 275 )





( 280 )




( 285 )
சென்னை முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி

சென்னை மாகணத் தின்முத லமைச்சரும்,
தன்னல மில்லாத் தனிப்பெருந் தகையுமாம்
ஓமந்தூர்இராம சாமியை
நாம் உளமார நனி வாழ்த்துகின்றோம்.
நல்லது செய்யும் நாட்டம் உடையவர்,
அல்லதை நாட்டினின் றகற்ற நினைப்பவர்
வஞ்சச் செயலால் வாழுமோர் இனத்தவர்
அஞ்சத் தகுமோர் சூழ்நிலை அமைத்தும்,
அறமே மறமென வாயடி அடித்தும்,
இறைமை தன்னை எடுத்தாண்டு கொள்ள
நெருங்குவார் 'அவர்நெருப்பென்று மீள்வார்.

பொதுவில் வந்த அதிகாரத்தைத்
தனிமையில் விற்கும் தக்கைகள் ஒழியத்
தாய்நிலம் தவம்செய்து கிடக்கும் இந்நாள்
பணத்திற் சிறிதும் பற்றிலா ஏழையைத்
தலைமை அமைச்சராய்ப் பெற்றது தாய்நிலம்
அமைச்சரில்லம் ஆக்கித் தரும்படி
நமதினத்து ராமசாமியை
அழைத்தனர் அரசினர், அன்பினால் ஒப்பினார்

ஓமந்தூர் இராமசாமிபால்
நாமும் இந்த ஞாலமும் வியக்க
இருக்கும் ஒருபெரும் பண்புதான் என்னெனில்,
முதலமைச் சென்னும் இதுஎனக்கு வேண்டாம்,
என்னுமோர் பற்றிலாத் தன்மை -- ஆதலால்
அன்றோ வஞ்சகர் அஞ்சுகின்றார்கள்.
ஆதலால் அன்றோ அவரை எதிர்த்தவர்
தூ தூ என்று துப்பப் பட்டார்.

இராம சாமி இந்த நாட்டின்
அமைச்சராய் வந்த அன்று தொடங்கி,
இமைப்பொழு தேனும் சும்மா இராமல்
ஆளத் தெரியுமா அவருக்கென்றும்
என்ன தெரியும் இராமசாமிக் கென்றும்
பேசத் தெரியாப் பித்தர் என்றும்,
எழுதத் தெரியா இனத்தவர் என்றும்,
ஆங்கிலம் சிறிதும் அறியார் என்றும்,
தீங்கு செய்யத் தெரிந்தவர் என்றும்,
பிரகாசந்தான் பெரியவர் என்றும்.
தெருவில் நடக்கையில் திண்ணையில் புரள்கையில்
வண்டியிற் செல்கையில் வாயோ யாமல்
குளறு கின்றார் குறுக்கு நூலினர்.
அலறு கின்றார் ஐயம் பெருமாள்கள்

உள்ளதை இல்லதென் றுரைக்க நேர்கையில்
முதலமைச் சென்னும் இது எனக்கு வேண்டாம்?
என்னுமோர் பற்றிலாத் தன்மை யாளரை
என்ன செய்ய முடியும்? இதுவரை
என்ன செய்ய முடிந்த தென்போம்.
எச்சரிக்கை இல்லை -- இதுஎன்
விண்ணப்ப மாகும் அண்ண லார்க்கே!
திராவிடர் கழகச் செம்மை நிலையில்
அரசினர் அழுக்காறு அடைதல் உண்டா?
இல்லை. சட்டமும் இருக்கவில்லை.
மக்கள் கருத்தின் வளர்ச்சியைத் தடுப்பது தக்க தன்று சழக்கரின் முறை அது.
திராவிடர் கழகம் சேர்ந்து சிலரை ( 340 )
ஒரோ விடம்சில உலுத்தர் அடிப்பார்;
அடிப்பது பேடிமை அல்லவா? சட்டம்அத்
தடிப்ப யல்களால் தலைக விழ்வதா?
ஊர்க்காப் பாளர் உள்ளப் போக்கே
சட்டமா? சரிநீதி பட்டுப்போனதா?

பார்ப்பார் தாமும், பார்ப்பார் கையைப்
பார்ப்பார் தாமும் பழியிலாத் திராவிடர்
கழகம் அழியக் கருதுகின் றார்கள்.
திராவிடர் கழகம் இராவிடில் தங்கள்
நெடுநாள் நரிச்செயல் நிலைக்கும் என்கின்றார்;
ஆதலால் தங்கள் அரசியல் செல்வாக்கைத்
திராவிடர்க் கின்னல் செய்வதில் செலவிட்டுக்
கலாம் விளைக்கின்றார். எலாம்இனி அடக்குக!

அடித்தால் அடிக்க அறிவர் திராவிடர்,
அடிக்கும் திறத்தினர் ஆயினும் அடிக்கிலார்.
அரியஉம் ஆட்சியில் அமைதி கெடுக்கும்
எண்ணம் திராவிடர்க் கில்லவேயில்லை !
கண்கள் திறக்க வேண்டும்.
மண்ணல்லர் திராவிடர் அண்ணலாரே.




( 290 )




( 295 )





( 300 )




( 305 )





( 310 )





( 315 )




( 320 )



( 325 )





( 330 )




( 335 )









( 345 )





( 350 )





( 355 )



பேரறிஞர் சர். ஏ ராமசாமி

அறிவுத்துறை ஒரு சாரார்க்கே எனில்
அது நாட்டின் அழிவையே உண்டாக்கும்
அன்பரே நேற்றப் பச்சையப்பன்
அறநிலை நிறுவன நூற்றாண்டு விழாவில்
சர்.ஏ ராமசாமியின் தலைமைச்
சொற்பெருக்கின் நற்பயன் நுகர்ந்திரோ
அப்பேறிஞர் அறைந்தவை கேளீர்.

எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும்
தேர்ச்சிபெற்ற இளைஞர் தேவை.
எவர்க்கும் தாங்கள் ஈடானவர் என
ஏற்பட வேண்டும் என்றனர் இளைஞர்.

கற்கும் துறையில் பிற்பட்ட தான
ஒருபகுதி, நாட்டில் உண்டு. நமக்கிது
பெருங்குறை. இதனைப் பெயர்த்தெறிந்து
யாவரும் கல்வி ஏற்கும் வண்ணம்
அரசினர் ஆவன செய்ய வேண்டும்
திருநாடு முதுகெலும்பாய்த் திகழ்பெரு மக்கள்,
கற்கும் துறையில் முற்போக்குண்டா?
என்று கேட்கிறேன் இந்த நாட்டில்
முன்னேற்றம், உண்மை முன்னேற் றந்தானா?
இல்லை! கல்வித் துறையை இழந்த வகுப்பினர்
அதனை அடையும் வண்ணம் ஆக்குதல் வேண்டும்;
நிகர்வாய்ப்பே அதன் நேரான, வழியாம்.
அறிவின் நற்றுறை, ஒரு சாரார்க்கே
அமைந்தால் நாட்டுக் கழிவு நேரும்.
வையகம் புகழும் மாப்பேரறிஞர், நாம்
உய்யுமாறே உரைத்த இவற்றை
ஆளவந்தாரும் அன்பு நாட்டாரும்
நாளும் எண்ணுக நாட்டுக செயலிலே!

( 360 )




( 365 )




( 370 )





( 375 )




( 380 )




( 385 )

நடிகமணி விசுவநாததாசு

கொக்குப் பறக்குதடி பாப்பா என்று
கொடுத்த அடி ஆங்கிலனைத் துடிக்க வைத்து
மக்களையும் எழுப்பிற்று விசுவ நாத
தாசென்னும் பாவாணன் வரைந்த பாட்டு!
வைக்கோலைத் தின்னுகின்ற மாடும் அன்னோன்
வாய்ப்பாட்டில் சொக்கிவிடும்! நடிப்பில் வல்லோன் ;
தெற்கிலும் ஓர்நடிகமணி இருந்தான் என்று
செப்பிற்று வடநாடும் அந்தநாளில்!

செக்கென்றும் சிவலிங்கம் என்றும் காணாச்
சிறுநாய்போல் ஆங்கிலவர் விசுவ நாத
மக்கள்கவிக் குச்சிறையும் தந்தார்! ஆனால்
மகழ்ச்சியுடன் வரவேற்றார் அதையும் தாசர்!
கொக்குப் பறக்குதடி என்றார் பின்னும்
கொடிக்கப்பல் தோணுதே எனத் தொடர்ந்தார்,
திக்கற்ற தமிழர்க்கு நாட்டின் அன்பு
சேர்ந்த விசுவநாத தாசெனும் பேர்வாழ்க!

இறந்தநாள் என்னுமொரு பழங்கணக்கில்
எழுந்ததுதான் இந்நாளின் புதிய வாழ்வு!
மறப்பதும்உண் டோவிசுவ நாதர் பேரை
மறந்திட்டால் கலையுணர்வு வாழ்வ துண்டோ?
சிறந்திருக்க வேண்டுமெனில் அன்னார் கீர்த்தி
செழித்திருக்க வேண்டுமவர் குடும்பம் நன்றே!
அறம்செய்வோம் செய்நன்றி மறக்கமாட்டோம்
ஆண்டுதொரும் நினைவுவிழா நடத்தவேண்டும்.


( 390 )



( 395 )





( 400 )





( 405 )




( 410 )
வ. வே சு. அய்யர்

கேட்டீரோ தமிழர்களே. நம்மில் மிக்க
சீர்த்தி கொண்ட தமிழன்உயிர் நீத்த செய்தி
ஆட்பணிதல் கடவுள்ஒரு வனுக்கே யன்றி
அத்தனைபேரும் சமமே ஆகும் என்னும்
மாட்சிமிகும் எண்ணத்தை நாட்டில் மீண்டும்
மலர்வித்த வீரர்க்குள் வீரன் கண்டீர்!
தாட்டிகஞ்சேர் சுப்ரமண்ய ஐயன் இந்தச்
சகம்நீத்தால் தமிழர்மனம் சகிப்பதுண்டோ?

பருவமயக் கத்தாலே ஆங்கிலத்தில்
பல்கலை வல்லானாகி, இன்னும் கற்கக்
கருதி அந்த ஆங்கிலநாடு ஏக, அங்குக்
கண்ணெதிரே நகைகாட்டி கருத்திற் பாய்ந்த
திருநுதலைச் சுந்தர நற்றெய்வந் தன்னைச்
செங்கைகள் கூப்பித்தன் தெய்வ நாட்டை
ஒருநொடியில் விடுவிப்பேன், ஒன்றும் வேண்டேன்
உறுவனவந் துறுகவெனும் உணர்ச்சியாலே

காய்தன்னை வியந்துகனி வெறுப்போ ராகும்
கடும்பகையால் கண்டதுயர் கொஞ்ச மன்று;
தாய்நாடு திரும்பிவரும் போதில் அந்தச்
சமுத்திரத்துக் கப்பலில் ஓர் சமுத்திரம்போல்
பாயுத்தன் எண்ணங்கள் முன்னும் தோள்கள்
பாரதத்திற் பின்னருமாய்த் தொடர வந்து
காயத்தை நற்பொருளை உயிரை நாட்டின்
திக்களித்தோன் கதிநினைத்துக் கலங்காருண்டோ?

நன்னாட்டிற்கு அவன்தொண்டு பெரிது; வேரில்
தண்புனலைப் பாய்ச்சிடுமோர் தியாகம் எண்ணில்
அன்புடையது; இருள்கொண்ட நெஞ்சம் தன்னில்
அணைகடந்த வெள்ளம்போல் தேசபக்தி
நன்றுவளர் விப்பது, நாம் என்செய் வோமால்!
நலம்விளைக்கும் கற்பகத்தைப் புதுநினைப்புக
குன்றத்தைக் குன்றஞ்சார் குளிர்புனல்தான்
கொண்டதுவோ? பகைவருளம் குளிர்ந்ததேயோ,


( 415 )




( 420 )





( 425 )





( 430 )




( 435 )





( 440 )



தோழர் வல்லத்தரசு

கேளாயோ ?பார்ப்பனியம்? என்னும் குன்றே!
கீர்த்தியுள்ள புதுக்கோட்டை உனது கோட்டை!
ஆளுகின்ற மக்களெல்லாம் உனது மக்கள்!
அறமு நீ? சத்தியம் நீ! தெய்விகமு நீ!
தோளுயர்ந்த வீரரெலாம் அறிஞரெலாம்
துணையுனக்காய் மீசைதனை முறுக்கின்றார்!
நாளன்று! மாசமன்று; வருட மன்று;
நானூறு கோடியுகம் வயதுனக்கு!

வானத்தை வில்லாக வளைப்பாய். இங்கே
மணலையெலாம் கயிறாகத் திரிப்பாய்! ஆனால்
மானத்தன், இளவீரன் முத்து சாமி
வலத்தரசன் பகுத்தறிவுக் கச்சை கட்டி
ஆனசுய மரியாதைக் கூர்வாள் தன்னை
அரைக்கசைத்து நின்றதனைக் கண்ட அன்றே
'ஏனப்பா புதுக்கோட்டைப் போர்க்களத்தில்
இறங்கப்பா' என்று நீ சொல்ல வில்லை.

மகத்வமுறு பார்ப் பன்யமலையே! எங்கள்
வலத்தரசன் எதிர் நின்று வாதம் செய்து
சகத்தினிலே உன்புகழை நிலைநாட் டாமல்
சர்க்காரின் காலடியை நக்கி நக்கிப்
பகுத்தறிவன், இளஞ்சிங்கன், உனைத் தொலைத்துப்
பழி தீர்க்கும், ஆயத்தன் குன்றத் தோளன்,
நகும்யடிக்குச் சிறையாக்கு வித்தாய்; பின்பு
நாடு கடத்தச் செய்தாய் நாயே! நாயே!

( 445 )




( 450 )





( 455 )




( 460 )





( 465 )