Untitled Document
| 767 | | பொங்கு கடல் கடந்து - சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் - தமிழர் ஏக குலத்தவராம். |
| 768 | | கோடரி மண்வெட்டி - கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற - உண்மை நாயக ராவாரையா! |
| 769 | | பாழ் நிலத்தையெல்லாம் - திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் - தமிழர் மாற்றிய தாரறியார்? |
| 770 | | இலங்கை சிங்கபுரம் - பிஜிமுதல் இன்னும் பலவான தலங்களின் செல்வம் - தமிழர் தந்த செல்வமன்றோ? |
| 771 | | நாச அணுக்குண்டால் - நமக்கு நன்மை ஏற்படுமோ? நேச மாய்நிதமும் - அஹிம்சை நெறியைப் போற்றுவமே. |
| 772 | | காந்தி மகான் சொன்ன - வழியைக் கடைப்பிடிக்கும் மந்த மாந்தரே உலகில் - நல்ல வாழ்வு பெறுவரையா! |
| 773 | | ஆதி பகவன் அறவாழி அந்தணன் யாதும் உவமையிலான் இன்னருளால் - பூதலத்தில் சிந்தைக் கினியபிஜித் தீவில் தமிழ்மக்கள் சந்ததம் வாழ்க தழைத்து. | |
|
|