பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு13

Untitled Document
45   கண்ணுக் கினியகண்டு-மனத்தைக்
     காட்டில் அலையவிட்டு,
பண்ணிடும் பூசையாலே-தோழி
     பயனொன்றில்லை, அடி!

46   உள்ளத்தில் உள்ளான்,அடி!-அதுநீ
     உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய்எனில்-கோயில்
     உள்ளேயுங் காண்பாய் அடி!

12. குருவின் உபதேசம்
47   வாக்கி றந்த பொருள்-நமது
     மனத்திற் கெட்டாப் பொருள்!
யார்க்கும் அப்பொருளை-அளக்க
     இயல மாட்டா தப்பா!

48   ஒரு திரை நீங்கின்-மேலும்
     ஒரு திரை வீழும்;
ஒரு கணப் பொழுதும்-திரைதான்
     ஒழிய மாட்டா தப்பா!

49   'ஆதி எது?' என்று-வினவும்
     அன் ஓர் அறிவிலான்;
ஆதி இது என்று-கூறும்
     அவனும் ஒரு மூடன்

50   மண்ணில் வாழ்வதுண்டு-பின்னால்
     மரண மாவ துண்டு
நண்ணும் இன்ப துன்பம்-எந்த
     நாளும் உண்டப்பா

51   நன்மை விதைத்திடில்-என்றும்
     நன்மையே விளையும்;
தின்மை விதைத்திடில்-அதுபோல்
     தின்மையே விளையும்.

52 கரும்பில் என்றுமே-வேம்பின்
     கனி கனிவ தில்லை;
விரும்பிடா வேம்பில்-கரும்பும்
     விளைவ தொன்றுமில்லை.