பக்கம் எண் :

142கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  துட்டர் கண்டன் சூராதி
     சூரன் என்றிவ் வுலகெங்கும்
பட்டம் பெற்ற பாண்டியனைப்
     பாடிப் பாடிப் போற்றுவமே.

924 அன்ன சாலை அமைத்திடுவோம்;
     ஆல யங்கள் கட்டிடுவோம்;
பன்னற் கரிய கலைகளெல்லாம்
     பயிலக் கழகம் கண்டிடுவோம்;
தென்னர் போற்றும் பாஞ்சையினைத்
     திருத்தி அளகை யாக்கிடுவோம்;
மன்னர் வீர பாண்டியன்பேர்
     வையத் தென்றும் வழங்கிடவே.

925 கெஞ்சி வாழும் வாழ்க்கையினைக்
     கிஞ்சித் தேனும் விரும்பாத
செஞ்சி யாண்ட தேசிங்கத்
     திறலோன் அனைய போர்வீரன்;
வஞ்சர் இழைத்த தீவினையால்
     மாண்ட கட்டபொம்மான்பேர்
விஞ்சும் ஆண்மை பெறுவதற்கு
     வீரர் போற்றும் மந்திரமே.

வேறு

926 அஞ்சினவர்க் கென்றும் அபயம் அளித்திடவோன்
வஞ்சகர்க்கு வாழ்வு மறுத்திடுவோன் - விஞ்சு புகழ்
தென்னாட்டுப் பாஞ்சைத் திறல்வீர பாண்டியனின்
நன்னாமம் போற்றுவோம் நாம்.

115. மகாத்மா

927 ஜயன் ராமன் திருநாமம்
     அன்பு கனியை ஓதிடுவோன்
செய்யும் தொழில்கள் ஆராய்ந்து
     திருந்தச் செய்யும் குணசீலன்