பக்கம் எண் :

16கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

66.   துன்பத்தில் நீயே துணையென்பேன்; அன்றி, வரும்
இன்பத்தில் ஏதும்உனை எண்ணுகிலேன் - அன்பற்ற
பாவஎனைப் போல் இந்தப் பாரில் ஒருவருண்டோ?
தேவிகா மாட்சியே செப்பு.

ஞானச் சேய்

67.   மனைவி மக்களும் மாண்டு மறைந்தனர்;
     வாழ்ந்த வீடும் குடியும் இழந்தனன்;
இனிய நட்பினர் யாவரும் ஏகினர்;
     ஏழை ஆண்டி ஏகாங்கி ஆயினேன்;
எனையும் இந்நிலை கண்டனை, இன்னுமிங்கு
     இன்ன லேதும் இழைத்திட உள்ளதோ?
உனையும் அன்னையென் றோதி அழைத்திடேன்;
     உலகெ லாந்தரும் தேவிகா மாட்சியே!

வேறு

68.   திண்ணமாய் வீடுதொறும் - இரந்து
     திரியத் தேறி விட்டேன்;
மண்ணிலே தாயில்லாப் - பிள்ளையும்
     வளர்வ துண்டலவோ?

69.   எண்ணி உனைத்தேடி - அம்மா என்று
     ஏங்கி அழுதுநின்றேன்;
கண்ணுந் தெரிவதில்லை - உனக்குக்
     காதும் கேட்பதில்லை.

70.   தாய்இருக் கையிலே - மிகவே
     தளர்ந்து வாடுமெனில்
சேயினுக் கவளால் - உலகில்
     சிறிதும் நன்மையுண்டோ?

71. ஈன்ற பிள்ளைக்கே - கொடிய
     எதிரி ஆவாயோ?
ஆன்ற உலகிலே - தாயின்
     அறமும் ஈதேயோ?