பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு15

Untitled Document
58   ஒளியை நோக்கிடவே - விளக்கின்
     உதவி வேண்டுவதேன்?
தெளிய உள்ளத்தில் - ஞான
     தீபம் ஏற்றுவையே.

59   மேயும் ஆட்டினைப் - பிடித்து
     வெட்ட வேண்டாமே;
தீய குணமெல்லாம் - பலிநீ
     செய்தாற் போதுமே.

ஞானப்பயிர்

60   வாழிஎன் மனமே! உழவின்
     வழியறி யாயோ?
பாழ்நில மெல்லாம் - உழுதால்
     பயிர் செழித் திடுமே.

61   விரிசடைத் தேவி - பெயரால்
     வேலிகட் டுவையேல்,
அரிய காலனுமே - வந்தங்கு
     அணுக மாட்டானே.

62   என்றிவ் வுலகமெல்லாம் - நாசம்
     எய்தி வீழ்ந்திடுமோ?
இன்றோ நாளையோ? - அதனை
     யாவர் அறிகுவார்?

63   இந்த நாளேநீ - வாழ்வோடு
     இருக்கும் நாளாகும் :
முந்திப் பயிர்செய்த - நல்ல
     முதலெடுப் பாயே.

64 விரும்பி ஞானகுரு - தந்த
     விதையை நீ விதைத்துப்
பெருகும் அன்புநீரைப் - பாய்ச்சிப்
     பேணிக் காப்பாயே.

65   தனியே நிற்பாயேல் - மனமே!
     தளர்ந்து போவாய் நீ;
எனையும் கூடவே - துணையாய்
     ஏற்றுக்கொள்வாயே.