பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு163

Untitled Document
138. சிதம்பரநாதன்

1040 சீதமதி புனைந்து திற்றம்பலத் தாடும்
ஆதிபகவன் அருளாலே - ஓதுபுகழ்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பர நாதநண்பன்
சந்ததம் வாழ்க தழைத்து.

139. அனந்தகிருஷ்ண அய்யங்கார்

1041 முன்னைக் காள மேகத்தின்
     மூவி ரட்டிக் கவி பொழிவோன்;
அன்னை வாணி அருளுடையன்
     அனந்த கிருஷ்ணப் பேரறிஞன்;
மன்னும் ஈசன் திருவருளால்
     மகிழ்ந்து மக்கள் சுற்றத்தோடு
இன்னும் பிறைகள் ஆயிரங்கண்டு
     இனிது வாழ்க! வாழ்கவே!

1042 அன்பால் அறிவால் அகங்குளிரும்
     அமுத மொழியால் அனைவரையும்
தன்பா லாக்கும் தகைமையுளோன்
     தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வன்
தென்பால் வைகும் திருப்பேரைச்
     செல்வன் அனந்த கிருஷ்ண நண்பன்
இன்பா லாழி இறையருளால்
     என்றும் வாழ்க! வாழ்கவே!

வேறு

1043 பாகனைய செந்தமிழ்ப் பாமாரி யைக்காள
மேகமென வேபொழியும் வித்தகா! - ஊகமிகும்
அந்தண நண்பா! அனந்த கிருஷ்ண நாவலா!
சந்ததம் வாழ்க தழைத்து!