பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு165

Untitled Document
142. ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்

1048 அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணார் மணிபோலக் காத்திடுவோன் - பண்ணார்ந்த
செந்தமிழ்ச் செல்வன் திருக்கோவைச் சண்முகவேள்
சந்ததம் வாழ்க தழைத்து.

வேறு

1049 பண்ணார் தமிழின் இசைவளர்த்துப்
     பாது காக்கும் பண்புடையோன்,
விண்ணோர் அமரா வதியென்ன
     விளங்கும் கோவை நகருடையான்,
அண்ணா மலைப்பல் கழகமிதை
     ஆளும் அரிய துணைவேந்தன்,
தண்ணார் மதிசூ டிறையருளால்
     தழைத்து வாழ்க வாழ்கவே!

1050 மன்னர் மதிக்கும் மதியுடையோன்,
     வாக்கின் செல்வி வளம்பெற்றோன்,
என்னை அன்பால் விலைகொண்ட
     ஈடில் வணிகன் சண்முகவேள்
பொன்னின் ஆடை புலவர்க்குப்
     புனைந்து போற்றிப் புகழெய்தி
இன்னும் நூறாண் டிவ்வுலகில்
     இனிது வாழ்க வாழ்கவே!

வேறு

1051 ஆங்கிலமும் செய்தமிழும் ஆய்ந்து கற்றோன்
     அரியபொரு ளாதாரக் கலைஞானத்தால்
ஓங்கு புகழ் நிபுணனென உலகம் போற்றும்
     உத்தமனாம் சண்முகவேள் நித்தம் நித்தம்
தீங்கொழிய நல்லனவே தேர்ந்த றிந்து
     செய்வனவெலாம் திருந்தச் செய்தெம்ஈசன்
தேங்கமம்பூங் கொன்றையணிந் தாடும் தில்லைச்
     சிவபெருமான் திருவருளால் வாழ்க மாதோ!