பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு177

Untitled Document
169. நெல்லை பிரசவ ஆஸ்பத்திரி

1105 நாடும் நகரும் நகர்ப்புறமும்
     நன்மை காணத் திருநெல்லை
நீடிவ் வுலகில் மேன்மையுறு
     நிறுவும் பிரசவ சாலையிது
பீடு பெறுமோர் தாயாகிப்
     பிள்ளைப் பேறு பார்த்தபிரான்
ஆடும் அழகுன் உமைபங்கன்
     அருளால் வாழ்க வாழ்கவே.

1106 பற்று மன்பால் அறம் வளர்த்துப்
     பாது காக்கும் குணசீலர்
கற்ற பெரியர் தனவந்தர்
     காணும் பிரசவ சாலையிது
பெற்ற தாய்வீ டென்றெண்ணி
     பெண்டி ருள்ளம் மகிழ்வடைய
உற்ற உதவி புரிந்தென்றும்
     உலகில் வாழ்க வாழ்கவே.

1107 எந்தை காந்தி மதிநாதன்
     இமையோர் பெருமான் திருவருளால்
சிந்தை மகிழ்ந்து இராஜாஜி
     திறக்கும் பிரசவ சாலையிது
சந்தப் பொதிகை மலையேபோல்
     தண்ணார் பொருனை நதியேபோல்
இந்த உலகில் என்றென்றும்
     இனிது வாழ்க வாழ்கவே.

1108 கந்தன் முருகன் கதிரேசன்
     கடம்பன் செய்யும் திருவருளால்
சந்தம் மிகவே நெல்லையினில்
     தங்கும் பிரசவ சாலையிது
சிந்தைக் கினிய மெய்ஞானச்
     செல்வர் வீரர் புலவரெல்லாம்
வந்து தோன்றும் இடமாக
     வாழ்க வாழ்க வாழ்கவே.