பக்கம் எண் :

176கவிமணியின் கவிதைகள்

Untitled Document
165. தமிழிசைச் சங்கம்

1100 ஆதி பகவன் அறவாழி அந்தணன்
யாதும் உவமையிலான் இன்னருளால் - பூதலத்தில்
எங்கும் புகழ்பெற் றினிய தமிழிசைச்
சங்கம் வளர்க, தழைத்து!

1101 வேதப் பரியான் விரிசடையான் கங்காள
நாதன் நடராஜன் நல்லருளால் - பூதலத்தில்
பொங்கு புகழ்பெற்றுப் பொலிந்து தமிழிசைச்
சங்கம் வளர்க, தழைத்து!

166. தேவி பால வினோத சபை

1102 மாமதுரை தேவியருள் வாய்த்தசபை வஞ்சியிலெம்
கோமகனும் கண்டுகளி கூர்ந்தசபை - நேமமுறு
பாலவி னோதசபை பண்ணெழுசங் கீதசபை
தாலமிசை வாழ்க, தழைத்து!

167. சேதுலட்சுமிபாய் பள்ளி

1103 போதில் மங்கை அரங்கமெனப்
     பொலியும் நாகை வளநகரில்
சேது லட்சுமி பாய்தேவி
     திருப்பேர் போற்றும் உயர்பள்ளி
கோது வெள்ளி விழாவின் மேல்
     கூறும் விழாக்கள் பலகண்டு
பூத லத்தில் இமயம்போல்
     பொதிகை மலைபோல் வாழ்கவே.

168. மந்திர மூர்த்தி பள்ளி

1104 பல்லுயிரும் பல்பொருளும் பாதுகாத் தாள்கின்ற
அல்லமருங் கண்ட தருட்கடலே - நெல்லையினில்
மந்திர மூர்த்தியின்பேர் வாய்த்த கலாசாலை
சந்ததம் வாழவரம் தா.