பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு205

Untitled Document
தாடி இல்லாத் தாகூர்செய்
     ஜால வித்தை அத்தனையும்
தேடி யழகாய்ச் சொன்ன தமிழ்ச்
     செல்வா! வாழ்க! வாழ்கவே!

224. ஸ்ரீ ரமண சந்திதி முறை
1241 தேவாரப் பாடும் திருவா சகத்தேனும்
     நாவார வுண்ட சுவை நல்குமால்மூவர்
முகவையில் கண்ண முருகன் ரமண
     பகவனைப் போற்றுந் தமிழ்ப்பா.

225. வியாசர் விருந்து
1242 வேதப் பொருளாம் விசாயர் விருந்தெமக்குத்
தீதகலாத் தந்துநலம் செய்தமகான் - ஓதுபுகழ்
சென்னை யிலமைச்சர் திலகன் இராஜாஜி
மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து.

226. சீவக சிந்தாமணி
1243 சீவகசிந் தாமணியின் செம்பொருளை ஆராய்ந்து
யாவருமே போற்ற இனிதுரைப் போன்மேவுபுகழ்
வித்தகன் காஞ்சிநகர் வேணுகோ பாலபிள்ளை
நித்தமும் வாழ்க நிலத்து.

227. நாகரீகச் சிற்பிகள்
1244 சீருயரும்நாகரிகச் சிற்பிகளின் மாசரித்திர
ஆரமுதை அன்பால் அளித்த நண்பன் - பேருயரும்
பண்டிதன் எம்வீர பத்திரன் வாழ்கபூ
மண்டலத்தி லென்றும்மகிழ்ந்து.

228. ரஷ்யாவின் ரகஷ்ய ஆயுதம்
1245 யாதுமென் ஊரே எவருமென் கேளிரே
பூதலம் யார்க்கும் பொதுவேயென்று - ஓதியநற்
போதனையை முற்றும் புதியருஷ் யாமக்கள்
சாதனையில் கொண்டார் தமக்கு.