பக்கம் எண் :

206கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பொதுவான வாழ்த்துக்கள் (13)

229. கிருஷ்ணன் தெய்வானை

1246 மன்றி லாடும் பெருமானை
     வணங்கி அன்பால் பழனியப்பன்
அன்று கண்ட நல்லறங்கள்
     அனைத்தும் ஓங்கி வளர்ந்துவர
நன்று போற்றும் நண்பாநீ
     நங்கை தெய்வ யானையுடன்
என்றும் அப்ப ரில்லத்தில்
     இனிது வாழ்க வாழ்கவே

230. மணிமோகனம்

1247 அன்புருவமாகி அனைத்துலகு மாளுகின்ற
தென்பழனி வேலன் திருவருளால் - இன்பமனைச்
செய்யநெறி போற்றித் திருமணியும் மோஹனமும்
வையமிசை வாழ்க மகிழ்ந்து

1248 ஆதி பகவன் அறவாழி அந்தணன்
யாது முவகையிலான் இன்னருளால் - பூதலத்தில்
சிந்தையொன் றாகித் திருமணியும் மோகனமும்
சந்ததமும் வாழ்க தழைத்து

1249 கோல மயில்மீ தேறிவரும்
     குமரன் வண்ண மணவாளன்
வேலன் அமரா பதிகாத்த
     விறலோ னருளால் இன்பகுண
சீலன் டி.எ. மணியுமவன்
     தேவி அழகி மோஹனமும்
தாலம் புகழ நீடுழி
     தழைத்து வாழ்க வாழ்கவே!